Election bannerElection banner
Published:Updated:

தேனி: கடும் பனியால் செடியிலேயே கருகிப்போன மல்லிகைப் பூக்கள்... கிடுகிடுவென உயரும் விலை!

மல்லிகைப் பூ
மல்லிகைப் பூ

மார்கழி மாத பனி காரணமாக, சந்தைக்கு மல்லிகைப் பூவின் வரத்து குறைந்துள்ளதால், அதன் விலை அதிகரித்துள்ளது.

தேனி மாவட்டத்தின் சீலையம்பட்டி, கோட்டூர், சின்னமனூர், பள்ளபட்டி, கொடுவிலார்பட்டி மற்றும் ஆண்டிபட்டியின் பல பகுதிகளில் பூ சாகுபடி செய்யப்படுகிறது. செண்டு பூ, மல்லிகை பூ, கனகாம்பரம், கோழிக்கொண்டை பூ ஆகியவை சாகுபடி செய்யப்பட்டு, தேனி, ஆண்டிபட்டி சந்தைக்கு கொண்டு வரப்படும். அங்கிருந்து மதுரை, திண்டுக்கல், சென்னை சந்தைக்கு அனுப்பப்படும்.

மல்லிகைப் பூ
மல்லிகைப் பூ

மார்கழி மாத பனி காரணமாக, கடந்த 10 நாள்களுக்கும் மேலாகப் பூக்கள் வரத்து சந்தையில் குறைந்தே காணப்பட்டது. குறிப்பாக, மல்லிகைப் பூவின் வரத்து முற்றிலும் குறைந்தது. இதனால், கடந்த வாரம் மல்லிகைப் பூவின் விலை கிலோ ரூ.1,500 ஆக இருந்தது. இந்நிலையில், இன்றைய நிலவரப்படி மல்லிகைப் பூ கிலோ ரூ. 3,500 ஆக உயர்ந்தது. இதனால், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

பருத்தி முதல் காய்கறி வரை... தேவைகளை நிறைவேற்றும் தேனி வாரச் சந்தை! - திரளும் மக்கள் கூட்டம்..!

நம்மிடையே பேசிய ஆண்டிபட்டி சந்தையில் உள்ள பூ வியாபாரி ஒருவர், வழக்கமாக மார்கழி மாதத்தில் பூக்கள் வருவது குறையும். பனி காரணமா பூக்கள் செடியிலேயே கருகிவிடும். மேலும், பூ பூக்காமல் விளைச்சலும் இருக்காது. இதனால், பனிக்காலத்துல எங்களுக்கு வியாபாரமே இருக்காது.

மல்லிகைப் பூ
மல்லிகைப் பூ

அதேமாதிரி கடந்த 10 நாளா சரியா வியாபாரம் இல்ல. பொதுவா, ஒரு நாளைக்கு மல்லிகைப் பூ 2 டன் அளவுக்கு சந்தைக்கு வரும். ஆனால், இன்னைக்கு 10 கிலோகூட வரல. அதனாலதான் கிலோ ரூ.3,000 முதல் ரூ.3,500 வரை விலை போச்சு. இன்னும் ரெண்டு மூணு நாளுல மல்லிகைப்பூவே கிடைக்காது. பனிக்காலம் முடிஞ்சுதான் பூ வரத்து நல்லா இருக்கும்” என்றார் அவர்.

தேனி : 5 சென்ட் நிலம்; 150 செடிகள்! - மீண்டும் தலைதூக்குகிறதா கஞ்சா சாகுபடி?
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு