Published:Updated:

ஒரே நாளில் 6 லட்சம் கிலோ பசுந்தேயிலை கொள்முதல்; திணறும் நீலகிரி தொழிற்சாலைகள்; என்ன காரணம்?

tea estate wrokers
tea estate wrokers

நீலகிரி தொழிற் தேயிலை கூட்டுறவு தொழிற்சாலைகளில் ஒரே நாளில் 6 லட்சம் கிலோ பசுந்தேயிலை கொள்முதல் செய்யப்பட்டிருப்பதால் தற்காலிகமாக பசுந்தேயிலை கொள்முதல் நிறுத்தப்பட்டுள்ளது.

தேயிலையை முக்கிய தொழிலாக கொண்டுள்ள நீலகிரி மாவட்டத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் 50,000-க்கும் அதிகமான சிறு குறு தேயிலை விவசாயிகள் தேயிலையை மட்டுமே சார்ந்துள்ளனர். நாட்டின் மிகப்பெரிய தொழிற் தேயிலை கூட்டுறவு நிறுவனமான `இன்ட்கோசர்வ்' நிறுவனம் அரசு கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இதன் கீழ் 16 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் 25,000-க்கும் மேற்பட்ட சிறு குறு தேயிலை விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர்.

tea estate
tea estate

நீலகிரியில் இந்த ஆண்டு கோடை மழை எதிர்பார்த்த அளவு பெய்ததால், வழக்கத்தைவிட தேயிலை மகசூல் அதிகரித்தது. மேலும் கொரோனா ஊரடங்கு காரணமாக பசுந்தேயிலை கொள்முதல் அவ்வப்போது நிறுத்தப்பட்டது. இதனால் பசுந்தேயிலைக் கொழுந்துகள் முற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பெரும்பாலான விவசாயிகள் ஒரே சமயத்தில் தேயிலைகளைப் பறித்து வருகின்றனர். இதனால் கொள்முதலும் அதிகரித்துள்ளது.

நேற்று முன்தினம் ஒவ்வொரு கூட்டுறவு தேயிலை தொழிற்சாலையிலும் சுமார் 40,000 கிலோ வரை பசுந்தேயிலை கொள்முதல் அதிகரித்தது. இதன்படி ஒரே நாளில் 6 லட்சம் கிலோ பசுந்தேயிலை கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால், இந்த பசுந்தேயிலைகளை தேயிலைத்தூளாக மாற்ற முடியாமல் தொழிற்சாலைகள் திணறி வருகின்றன.

tea estate
tea estate
Vikatan

இந்த இமாலய கொள்முதல் குறித்து கூட்டுறவு தொழிற்சாலை அதிகாரிகளிடம் கேட்டபோது, ``வழக்கத்தைவிட தேயிலை வரத்து தற்போது அதிமாக உள்ளது. சுழற்சி அடிப்படையில் மூன்று ஷிஃப்ட்களாக தேயிலைத் துாள் உற்பத்தி நடைபெற்று வருகிறது. மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக பசுந்தேயிலை கொள்முதலை நிறுத்தியுள்ளோம்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு