Published:Updated:

ஹைட்ரோ கார்பன் எடுக்காதே... காவிரியைத் தடுக்காதே!

 போராட்டத்தில்...
பிரீமியம் ஸ்டோரி
போராட்டத்தில்...

அடுத்தகட்டம்

ஹைட்ரோ கார்பன் எடுக்காதே... காவிரியைத் தடுக்காதே!

அடுத்தகட்டம்

Published:Updated:
 போராட்டத்தில்...
பிரீமியம் ஸ்டோரி
போராட்டத்தில்...

டந்த ஜூலை 2-ம் தேதி, ‘ஹைட்ரோ கார்பன் எடுக்காதே... காவிரியைத் தடுக்காதே’ என்ற முழக்கத்தை முன்வைத்துக் காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் நடைபெற்ற காத்திருப்புப் போராட்டம் மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்த்தது. இப்போராட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய காவிரி உரிமை மீட்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் ‘தமிழக அரசால் காவிரித் தண்ணீரைப் பெற முடியவில்லை. ஆனால், வாழ்வாதாரத்தைக் காப்பாற்றிக்கொள்ள போராடும் மக்களை தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குகிறது. ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நாகாலாந்து அரசு இத்திட்டத்தைத் துணிச்சலோடு எதிர்த்து விரட்டி அடித்துள்ளது.

ஹைட்ரோ கார்பன்  எடுக்காதே... 
காவிரியைத் தடுக்காதே!

யூனியன் பிரதேசமான புதுச்சேரி அரசும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்தி, காவிரி டெல்டாவைப் பாலைவனமாக மாற்றத் துடிக்கும் மத்திய அரசுக்கு, தமிழக அரசு வெளிப்படையாகவே துணைப்போகிறது. எனவே அனைவரும் ஒன்றிணைந்து ஹைட்ரோ கார்பன் திட்டத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும்” என்றார். இந்நிலையில் அமைச்சர் சி.வி.சண்முகம் தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என்று சட்டசபையில் கூறியிருக்கிறார். இதுகுறித்து பெ.மணியரசனிடம் கேட்டோம். “இது எந்தளவுக்கு உண்மை எனத் தெரியவில்லை. காரணம் திருச்சி, தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் காத்திருப்புப் போராட்டம் நடத்திய உழவர்கள் மற்றும் உணர்வாளர்கள் 655 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. ஏன் இந்த முரண்பாடுகள்? இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டு, தமிழக முதல்வர் குழப்பத்திற்கு இடமில்லாமல் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்’’ என்றார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதுகுறித்து நம்மிடம் பேசிய மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஆலோசகர் மருத்துவர் பாரதிச்செல்வன், “மக்கள்கிட்ட இந்தளவுக்கு விழிப்புணர்வு வந்ததற்குப் பசுமை விகடனும் ஒரு முக்கிய காரணம். மீத்தேன் திட்டத்தோட இன்னொரு பெயர்தான் ஹைட்ரோ கார்பன். மிகவும் ஆபத்தான தொழில்நுட்பமான நீரியல் விரிசல் முறையைப் பயன்படுத்திதான் மீத்தேன் எடுக்கப்படுகிறது என்பதையும் இதனால் ஏற்படக்கூடிய பேராபத்தையும் பசுமை விகடனில் வெளிவந்த மீத்தேன் எமன் தொடர் அம்பலப்படுத்தியது.

இதோடு இதன் செயல்முறை விளக்கப்படத்தையும் வெளியிட்டது. இப்ப நாங்க நடத்தக்கூடிய ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு போராட்டங்களின்போது, அந்தப் படத்தைப் பதாகையாகப் பயன்படுத்தி, இதன் ஆபத்துகளை எளிமையாக மக்களிடையே புரிய வெச்சிக்கிட்டு இருக்கோம்” என்றார்.