Published:Updated:

புதுக்கோட்டை: பயிர் சேதங்களை ஆய்வுசெய்த மத்திய குழு... ஏக்கருக்கு ரூ.30,000 கோரும் விவசாயிகள்

பயிர் சேதங்களை ஆய்வு செய்த மத்தியக்குழு
News
பயிர் சேதங்களை ஆய்வு செய்த மத்தியக்குழு

புதுக்கோட்டையில் பயிர் செய்யப்பட்டிருந்த பல்லாயிரக்கணக்கான ஹெக்டேர் பரப்பளவிலான நெற்பயிர்கள் அறுவடை செய்ய வேண்டிய நேரத்தில் நீரில் மூழ்கின. விளைந்த நெற்பயிர்கள் எல்லாம் தரையில் சாய்ந்து மீண்டும் முளைக்கத் தொடங்கிவிட்டன.

98 ஆண்டுகளுக்குப் பிறகு, டெல்டா மாவட்டங்களையே புரட்டிப் போடும் அளவுக்குக் கன மழை பதிவாகியிருக்கிறது. இந்தாண்டு ஜனவரியில் பெய்த மழையால் டெல்டா மாவட்டங்களில் அறுவடைக்குத் தயாரான பயிர்கள் எல்லாம் நீரில் மூழ்கி விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தைப் பொறுத்தவரை ஜனவரியில் சராசரியாக 11.67 மி.மீ பெய்யவேண்டிய மழையானது, 208 மி.மீ என அதிகபட்சமாகப் பதிவாகியிருந்தது. இதனால், புதுக்கோட்டையில் பயிர் செய்யப்பட்டிருந்த பல்லாயிரக்கணக்கான ஹெக்டேர் பரப்பளவிலான நெற்பயிர்கள் அறுவடை செய்ய வேண்டிய நேரத்தில் நீரில் மூழ்கின. விளைந்த நெற்பயிர்கள் எல்லாம் தரையில் சாய்ந்து மீண்டும் முளைக்கத் தொடங்கிவிட்டன.

சேதமடைந்த பயிர்கள்
சேதமடைந்த பயிர்கள்

செழிப்பாக வளர்ந்த நெற்பயிர்களை விவசாயிகள் அறுவடை செய்ய முடியாமல் பரிதவித்தனர். மழை ஓய்ந்து நீர் வற்றிய பிறகு, ஒரு சில விவசாயிகள் அறுவடை செய்தாலும், பல விவசாயிகள் விரக்தியில் அறுவடை செய்யாமல் அப்படியே போட்டுவிட்டனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் 40,669 ஹெக்டேர் நெற்பயிர், 3,000 ஹெக்டேர் நிலக்கடலை, எள், பருத்தி, உளுந்து, துவரை உள்ளிட்ட பயிர் வகைகளும் நீரில் மூழ்கி கடுமையாகச் சேதமடைந்திருக்கின்றன. இந்த நிலையில்தான், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து அரசிடம் வலியுறுத்தி வந்தனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இந்த நிலையில், மத்திய போக்குவரத்துத்துறை நெடுஞ்சாலைகள் அமைச்சக மண்டல மேலாளர் ரணஞ்சே சிங், மத்திய மின்சார ஆணைய உதவி இயக்குநர் ஷூபம் கார்க், மீன்வள மேம்பாட்டுத்துறை ஆணையர் பால் பாண்டியன் ஆகியோர் அடங்கிய மத்தியக் குழு புதுக்கோட்டையில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தது. புதுக்கோட்டை மாவட்டத்தில் களமாவூர், மேலூர், ஆதனக்கோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயிகளை நேரடியாகச் சந்தித்துப் பயிர் சேதம் குறித்து விளக்கமாகக் கேட்டறிந்தனர். தொடர்ந்து, உரிய நிவாரணம் கிடைக்க வழிவகை செய்யப்படுவதாகக் கூறிவிட்டுச் சென்றனர். ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி மற்றும் வேளாண்மைத்துறை அதிகாரிகள் இருந்தனர்.

புதுக்கோட்டை: பயிர் சேதங்களை ஆய்வுசெய்த மத்திய குழு... ஏக்கருக்கு ரூ.30,000 கோரும் விவசாயிகள்

ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய மத்தியக் குழுவினர், ``மாவட்டத்தில் நிறையவே பயிர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறது. நிறைய தகவல்களைத் திரட்டியிருக்கிறோம். தேவையான தகவல்களையும் தமிழக அரசு கொடுத்திருக்கிறது. நெல் மட்டுமல்லாமல் நிலக்கடலை உள்ளிட்ட அனைத்து பயிர்களின் சேதம் குறித்த தகவல்களையும் திரட்டியிருக்கிறோம். அனைத்தையும் பார்த்துமுடித்துவிட்டு அறிக்கைக் கொடுக்க உள்ளோம்" என்றனர்.

இதுபற்றி பேசிய மேலூரைச் சேர்ந்த விவசாயி மோகன் கூறியதாவது, ``எந்த ஆண்டும் இல்லாத வகையில், இந்தாண்டு பருவம் தவறி மழை பெய்து, இயற்கை எங்களது வாழ்வாதாரத்தைச் சிதைத்துவிட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வெளஞ்ச நெற்பயிர்களை வீடு கொண்டு வந்து சேர்க்க முடியலை. நெற்பயிர் மட்டுமல்லாமல், கடலை, உளுந்து, துவரை உள்ளிட்ட எல்லா பயிர்களுமே கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கு. இன்னுமே பல இடங்களில் பயிர்களுக்குள் தண்ணீர் வடியாமல் தேங்கி நிற்குது. அதிகாரிகள் நெற்பயிரைத்தான் அதிகளவில் ஆய்வு செஞ்சிருக்காங்க. எல்லா விவசாயிகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கோம். வெறும் ஆய்வோட இல்லாமல், உரிய நிவாரணம் கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்கணும். ஏக்கருக்கு ரூ.30,000 வரையிலும் கிடைக்க வழிவகை செய்யணுங்கிறதுதான் எங்களோட கோரிக்கை" என்கிறார்.

புதுக்கோட்டை: பயிர் சேதங்களை ஆய்வுசெய்த மத்திய குழு... ஏக்கருக்கு ரூ.30,000 கோரும் விவசாயிகள்

கரிசக்காட்டைச் சேர்ந்த விவசாயி கருப்பையா, ``நிலத்தடி நீர் ஆதாரத்தைக் கெடுக்குதேன்னு சொல்லி, தைலமரக்காட்டை அழிச்சிட்டு முதல் முறையாகக் கடன் எல்லாம் வாங்கி 8 ஏக்கர்லயும் நெற்பயிரைச் சாகுபடி செஞ்சேன். தைல மரம் இருந்த இடம், இந்த இடத்துல எல்லாம் நெற்பயிர் வளராதுன்னு பலரும் சொன்னாங்க. ஆனா, அந்த இடத்துலதான் செழிச்சு வளர்ந்து இருச்சு. ஆனா, மார்கழி மழை, எங்களை நிலைகுலைய வச்சிட்டு போயிருச்சு. மொத்த பயிரும் நீரில் மூழ்கி, சேதமடைஞ்சு போச்சு. ஒரு வழியா அறுவடையை முடிச்சிட்டோம். ஆனா, ஏக்கருக்கு 30 மூட்டை எடுக்க வேண்டிய இடத்துல 3 மூட்டை கூட எடுக்க முடியலை. செஞ்ச செலவுல கால்வாசியைக்கூட எடுக்க முடியாத நிலையில் தவிக்கிறோம். கொஞ்ச நாளுக்கு முன்னாடியே இந்த ஆய்வு நடத்தியிருக்கலாம். எப்படியோ உரிய நிவாரணம் கிடைத்தால் போதும்" என்கிறார் வருத்தமுடன்.