Published:Updated:

தென்னங்கன்றுகளுக்கு கியூ.ஆர் தொழில்நுட்பம்! - அசத்தும் ஆராய்ச்சி மையம்!

தென்னை
பிரீமியம் ஸ்டோரி
தென்னை

அறிமுகம்

தென்னங்கன்றுகளுக்கு கியூ.ஆர் தொழில்நுட்பம்! - அசத்தும் ஆராய்ச்சி மையம்!

அறிமுகம்

Published:Updated:
தென்னை
பிரீமியம் ஸ்டோரி
தென்னை
தென்னை, மா, பலா உள்ளிட்ட மரங்கள் கன்றுகளாகத்தான் நடவு செய்யப்படுகின்றன. சரியான முறையில் வளர்ந்தால் மட்டுமே ஒரு கன்று தரமானதாக அறியப்படுகிறது.

அதுவரை அந்தக் கன்றின் தரம் அறியப்படுவதில்லை. அதே சமயத்தில் வாங்கும் கன்று, உண்மையில் நாம் கேட்கும் ரகம்தானா என்பதையும் அறிந்துகொள்ள முடியாது. செடியை விற்பவர் சொல்வதை நம்பி வாங்கி வந்துவிடுகிறோம். இந்தப் பிரச்னைக்குத் தீர்வு கண்டிருக்கிறது கேரள மாநிலம், காசர்கோட்டிலுள்ள மத்திய தோட்டப் பயிர்கள் ஆராய்ச்சி மையத்தின் (Central Plantation Crops Research Institute-CPCRI) கீழ் இயங்கும் காயங்குளம் மண்டல ஆராய்ச்சி மையம். இங்கு விற்பனையாகும் கன்றுகள், ரகம் குறித்த கியூ.ஆர் கோடு இணைக்கப்பட்ட சிட்டையுடன் (லேபிள்) விற்பனை செய்யப்படுகின்றன. இது விவசாயிகளிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

தென்னங்கன்றுகளுக்கு கியூ.ஆர் தொழில்நுட்பம்! - அசத்தும் ஆராய்ச்சி மையம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த ஆராய்ச்சி மையத்தில் தென்னங்கன்றுகள் அதிகமாக விற்பனை செய்யப்படுகின்றன. தென்னங்கன்றுகளுடன் ஒரு பிளாஸ்டிக் லேபிள் இணைக்கப்பட்டு வரும். அந்தச் சிட்டையில் ஒரு பக்கம் கியூ.ஆர் கோடும், தனித்த அடையாள எண்ணும் (ஆல்பா நியூமெரிக் பாஸ்வேர்டு) இருக்கும். மறுபக்கம் ரகத்தின் பெயர் இருக்கும். இந்தச் சிட்டை நீரால் பாதிக்கப்படாதவாறு வாட்டர் புரூஃப் முறையில் தயாரிக்கப்பட்டிருக்கும். கன்றை வாங்கி நடவு செய்யும்போது நம்முடைய ஸ்மார்ட்போனில் கியூ.ஆர் கோடு செயலி இருக்கும். அதைக் கிளிக் செய்து சிட்டையிலுள்ள கியூ.ஆர் கோடை ஸ்கேன் செய்ய வேண்டும். ஸ்கேன் செய்தால், மத்திய தோட்டப் பயிர்கள் ஆராய்ச்சி மையத்தின் இணையப் பக்கத்துக்குச் செல்லும். அங்கே ஒரு தனித்த அடையாள எண் கேட்கும். சிட்டையிலுள்ள அடையாள எண்ணைப் பதிவிட்டால், அது என்ன ரகம், அதன் சிறப்புகள் உள்ளிட்ட தகவல்கள் கிடைக்கும்.

“இதையே மேம்படுத்தி எப்படி நடவு செய்வது, பராமரிப்பது உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய வகையில் தயார் செய்யும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. தற்போதைக்கு இந்தச் சேவை ஆங்கிலத்தில் மட்டுமே கிடைக்கிறது. விரைவில் அனைத்து மொழிகளிலும் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுவருகிறது” என்கிறார், காயங்குளம் மண்டல ஆராய்ச்சி மைய முதன்மை விஞ்ஞானி ரெஜி ஜேக்கப் தாமஸ்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
கியூ. ஆர்
கியூ. ஆர்

மேலும் பேசியவர், “நாங்கள் ஒரு ரகத்தைக் கண்டுபிடித்து அதைப் பதிவு செய்யப்பட்ட ஏஜென்சிகளிடம் உரிமத்துக்குக் கொடுக்கிறோம். நாங்களும் உற்பத்தி செய்கிறோம். இப்படி வாங்கும் கன்றுகளில் சில தரமானவை அல்ல என்று விவசாயிகள் புகார் செய்தனர். அதோடு மத்திய தோட்டப்பயிர்கள் ஆராய்ச்சி மைய லோகோவுடன் போலியான கன்றுகள் விற்பனை செய்வதும் கண்டறியப்பட்டது. இதையடுத்து தரமான கன்றுகளை விவசாயிகளுக்கு வழங்கவும், போலியான கன்றுகளைக் கண்டுபிடிக்கவும் இந்த முறையை அறிமுகப்படுத்தியிருக்கிறோம்.

கியூ.ஆர் கோடை ஸ்கேன் செய்ய முடியவில்லையென்றாலோ, எங்களது இணையப் பக்கத்துக்குச் செல்ல முடியவில்லையென்றாலோ அந்தக் கன்று போலியானது என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.
தென்னை
தென்னை
வழக்கமாக, தென்னங்கன்றுகளின் விலை 200 முதல் 250 ரூபாய் வரை இருக்கும். அதோடு லேபிள் இணைக்க 4.50 ரூபாய் கூடுதலாகக் கொடுக்க வேண்டும்.

இதுவரை 25,000-க்கும் மேற்பட்ட கன்றுகளை விற்பனை செய்திருக்கிறோம். முதலில் தென்னங்கன்றில் மட்டுமே இந்த முறையை அறிமுகப்படுத்தியிருக்கிறோம். விரைவில் எங்கள் மையத்தின் வெளியீடுகளான முந்திரி, கோகோ உள்ளிட்ட அனைத்து பணப்பயிர் கன்றுகளுக்கும் இந்த முறை கொண்டுவரப்படும். கன்றுகள் தேவைப்படுவோர் காசர்கோட்டிலுள்ள ஆராய்ச்சி மையத்தை அணுகலாம். இதைத் தவிர, தமிழ்நாட்டில் பொள்ளாச்சியிலுள்ள ஆழியார் தென்னை ஆராய்ச்சி மையத்தையும் அணுகி வாங்கிக்கொள்ளலாம்” என்றார்.

தொடர்புக்கு:

ICAR-Central Plantation

Crops Research Institute,

Kudlu.P.O., Kasaragod,

Kerala- 671 124.

Phone: 04994 232893/94

கியூ.ஆர் கோடு முறையில் விற்கப்படும் தென்னங்கன்றுகளின் ரகங்களும் அவற்றின் சிறப்புகளும்!

கேரா சங்கரா (Kera Sankara)

மத்திய தோட்டப் பயிர்கள் ஆராய்ச்சி மையத்தின் மூலம் 1991-ம் ஆண்டு வெளியிடப்பட்ட ரகம். நடவு செய்த நான்காம் ஆண்டிலிருந்து மகசூல் கொடுக்கும். கொப்பரைக்கு ஏற்றது. ஒரு தேங்காயிலிருந்து 187 கிராம் கொப்பரை கிடைக்கும். ஓர் ஆண்டுக்கு ஒரு மரத்திலிருந்து 70 முதல் 130 தேங்காய்கள் (சராசரியாக 108 தேங்காய்கள்) கிடைக்கும். கேரளா, கடலோர ஆந்திரா மற்றும் மகாராஷ்டிராவில் அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது.

கல்பஸ்ரீ (Kalpasree)

வேரழுகல் நோய்க்கு எதிர்ப்புத்திறன் கொண்ட இந்தத் தென்னை ரகம் தேங்காய் எண்ணெய், தேங்காய்ப் பருப்பு, இனிப்பான நீர் கொண்டது. மூன்றாண்டுகளில் பூக்க ஆரம்பித்துவிடும். ஆண்டுக்குச் சராசரியாக 90 தேங்காய்கள் கிடைக்கும். கொப்பரையின் எடை அளவு 96.3 கிராம். சவ்காட் பச்சை குட்டை ரகத்திலிருந்து உருவாக்கப்பட்ட இதுவும் ஒரு குட்டை ரகம். 2012-ம் ஆண்டு வெளியிடப்பட்டது.

கல்பரக்‌ஷா (Kalparaksha)

பாதிக் குட்டை ரகம். மலேசிய தென்னை ரகத்திலிருந்து உருவாக்கப்பட்டது. நடவு செய்த நான்கரை ஆண்டிலிருந்து மகசூல் கொடுக்க ஆரம்பிக்கும். இளநீருக்கு ஏற்ற ரகம். இளநீர்க் காய் ஒன்றில் 290 மி.லி தண்ணீர் கிடைக்கும். வேரழுகல் நோய்க்கு எதிர்ப்புத்திறன் கொண்டது. ஒரு மரத்திலிருந்து ஆண்டுக்குச் சராசரியாக 87 இளநீர்க் காய்கள் கிடைக்கும்.

சவ்காட் ஆரஞ்சு குட்டை (Chowghat Orange Dwarf-COD)

இளநீருக்கு ஏற்ற சிறப்பான ரகம். விரைவில் பூக்க ஆரம்பிக்கும் இந்த ரகம் நடவு செய்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளில் மகசூல் கொடுக்க ஆரம்பிக்கும். ஓர் ஆண்டுக்குச் சராசரியாக 63 இளநீர்க் காய்கள் கிடைக்கும். 1991-ம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்த ரகம் நாடு முழுவதும் அதிக அளவில் இளநீருக்காகச் சாகுபடி செய்யப்படுகிறது.

வெஸ்ட் கோஸ்ட் டால் (West Coast Tall-WCT)

நாட்டு ரகமான இது உயரமாக வளரக்கூடியது. அதிக மகசூல் கொடுக்கக்கூடியது. வேரழுகல் நோய்க்கு எதிர்ப்புத்திறன் கொண்டது. ஆண்டுக்கு ஒரு மரத்திலிருந்து சராசரியாக 80 தேங்காய்கள் கிடைக்கும். இந்தத் தேங்காயிலிருந்து கிடைக்கும் கொப்பரையின் அளவு 177 கிராம். இதே போன்று வெஸ்ட் கோஸ்ட் டால் ரகத்திலிருந்து உருவாக்கப்பட்ட கல்ப சங்கரா (Kalpa Sankara) போன்ற ரகங்களும் உண்டு.