Published:Updated:

பெரிய வரப்புகள், தடுப்பணைகள், பண்ணைக்குட்டைகள்; மானாவாரி நிலத்தில் மழைநீரைச் சேமிக்கும் உத்திகள்!

தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள பண்ணைக்குட்டை

மானாவாரி நிலங்களில் பண்ணைக்குட்டைகள் அவசியம். கரைகள் உயர்த்திய தடுப்பணை, தாவர வரப்புகள் அமைத்தல் அவசியம்.

பெரிய வரப்புகள், தடுப்பணைகள், பண்ணைக்குட்டைகள்; மானாவாரி நிலத்தில் மழைநீரைச் சேமிக்கும் உத்திகள்!

மானாவாரி நிலங்களில் பண்ணைக்குட்டைகள் அவசியம். கரைகள் உயர்த்திய தடுப்பணை, தாவர வரப்புகள் அமைத்தல் அவசியம்.

Published:Updated:
தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள பண்ணைக்குட்டை

நிலத்தின்மேல் விழும் ஒவ்வொரு துளி மழைநீரும் கோடி ரூபாய்க்கு சமம். ஏனெனில், மண்ணில் உயிரியல் இயக்கம் ஏற்பட வழிவகுக்கும் மண் ஈரத்தை வேறு எந்த வடிவிலும் தர இயலாது.

பல இடங்களில் மண்ணின் நீர்ப்பிடிப்புத்திறன் மிகக் குறைவாகவுள்ளதால் பெய்யும் மழைநீரை பலரும் சேமிக்காமல் விடுவதுண்டு. மழைநீர்தானே... பூமிக்குள் தானாகச் சென்றுவிடுமென்று நினைத்து சிலர் மானாவாரி பயிர்கள் சாகுபடி செய்யும் நிலங்களில் உழவுகூட செய்வதில்லை. மானாவாரி நிலங்களில் உழவு செய்ய வேண்டும். இதற்கு நிலத்தின் சரிவான பகுதியில் சமமட்ட வாய்க்கால் அமைத்து சம உயர வரப்புமூலம் பகுதி பகுதியாகப் பிரித்து வேளாண் பணிகள் மேற்கொள்ள வேண்டும். சரிவு அதிகமாக இருந்தால் நிச்சயம் மழைநீர் மண்ணையும் அடித்துச் சென்று வளத்தை வெகுவாகக் குறைத்துவிடும். வளமான அரையடி மேல்பகுதி மண் உருவாக 1,000 ஆண்டுகள் ஆகின்றன என்று சொல்லப்படுகிறது.

பண்ணைக்குட்டை
பண்ணைக்குட்டை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மண் மற்றும் நீலத்தடி நீர் பயன்பாடு மூலம் வெற்றிபெற அக்ரி கிளினிக் மற்றும் தமிழக அரசு வேளாண்மை துறையின் மண்பரிசோதனைக்கூடம் அல்லது தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழக ஆய்வுக்கூடங்களில் மண் மற்றும் நீரைப் பரிசோதனை செய்து ஆய்வு அடிப்படையில் தேவைப்படும் உரமிடுதல் அவசியம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மானாவாரி நிலங்களில் பண்ணைக்குட்டைகள் அவசியம். கரைகள் உயர்த்திய தடுப்பணை, தாவர வரப்புகள் அமைத்தல் அவசியம். மிகவும் எளிதில் நீர்வடிந்து ஓடத்தக்க சரிவான பகுதிகளில் ஓடுகின்ற நீரை தவழ்ந்து செல்ல செய்தல் அவசியம். இதற்கு சமமட்ட வரப்புகள் அமைத்தும் கருங்கல் மூலம் அமைப்புகள் தயாரித்தும் தண்ணீர் நிலத்தில் உட்புகும் வாய்ப்பை அதிகரிக்கலாம்.

நிலம்தோறும் பண்ணைக்குட்டை...  பயன் தரும் பாசனம்!
நிலம்தோறும் பண்ணைக்குட்டை... பயன் தரும் பாசனம்!

ஆழச்சால் அகலப்பாத்தி அமைத்து அகலமான பாத்திகளில் இருபுறமும் பயிரிடலாம். பலவித மண்வகைக்கேற்ற பயிர்கள் இதற்கு உதவுவதால் நீர் குறைவாகத் தேவைப்படும். வறட்சி தாங்கி வளரும் தாவரங்களைத் தேர்வு செய்தல் வேண்டும். வட்டப் பாத்திகள் அமைத்தல் மட்டுமல்லாது நீர்கொண்டு செல்லும் வாய்க்கால் கரைகளையும் வலுப்படுத்துதல் அவசியம்.

ஆழச்சால் அகலப்பாத்தி என்பது பெட் அகலம் 150 செமீ இருக்க வேண்டும். ஓர் ஆழமான சால் ஒட்டியபகுதி இதிலுள்ளதால் நல்ல நன்மை வரும். அதுமட்டுமல்லாமல் மானாவாரிப் பயிர்களுக்கு விதைநேர்த்தி, பலபயிர் சாகுபடி, வரப்பு பயிர் சாகுடி, வேலிபயிர் சாகுபடி முதலிய உத்திகள் உதவும். மானாவாரியை பொன்விளையும் பூமியாக்கிட இன்றே திட்டமிடுவோம்.

டாக்டர்.பா. இளங்கோவன்,

பேராசிரியர் மற்றும் வேளாண்மை இணை இயக்குநர்,

பாசன மேலாண்மை பயிற்சி நிலையம், துவாக்குடி, திருச்சி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism