Published:Updated:

நெல் சேமிப்பு கிடங்கு: `இந்த பட்ஜெட்டிலாவது அறிவிக்கபடுமா?' - எதிர்பார்ப்பில் ராமநாதபுரம் விவசாயிகள்

கொள்முதல் நிலையத்தில் தேங்கியுள்ள நெல் மூட்டைகள்

நடப்பு வேளாண் பட்ஜெட் கூட்டத்தொடரில் ராமநாதபுரத்தில் நெல் சேமிப்பு கிடங்கு அமைப்பதற்கான அறிவிப்பு வெளியிட்டு, தங்களது 50 ஆண்டுகால போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டுமென தமிழக அரசுக்கு ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நெல் சேமிப்பு கிடங்கு: `இந்த பட்ஜெட்டிலாவது அறிவிக்கபடுமா?' - எதிர்பார்ப்பில் ராமநாதபுரம் விவசாயிகள்

நடப்பு வேளாண் பட்ஜெட் கூட்டத்தொடரில் ராமநாதபுரத்தில் நெல் சேமிப்பு கிடங்கு அமைப்பதற்கான அறிவிப்பு வெளியிட்டு, தங்களது 50 ஆண்டுகால போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டுமென தமிழக அரசுக்கு ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Published:Updated:
கொள்முதல் நிலையத்தில் தேங்கியுள்ள நெல் மூட்டைகள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் நெல் சாகுபடி பிரதான தொழிலாக இருந்து வருகிறது. ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை, ராமநாதபுரம், களரி, சிக்கல், பரமக்குடி ஆகிய பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக ஒரு லட்சம் ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.

அக்டோபர் மாதம் சாகுபடி செய்த நெல்லை ஜனவரி மாதத்தில் அறுவடை செய்வார்கள். அவற்றை 15 ஊராட்சிகளுக்கு ஒன்று என்ற அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து வருகின்றனர்.

அறுவடை செய்த நெல்மணிகளை சாலையில் காய வைத்துள்ள விவசாயிகள்
அறுவடை செய்த நெல்மணிகளை சாலையில் காய வைத்துள்ள விவசாயிகள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆனால் நெல்லைப் பயிரிட்டு மூன்று மாதங்களில் அறுவடை செய்தாலும், அதனை விற்பனை செய்ய பல மாதங்கள் காத்திருக்க வேண்டிய நிலையில் இங்குள்ள விவசாயிகள் இருந்து வருகின்றனர்.

அதற்கு காரணம், ராமநாதபுரத்தில், நெல் சேமிப்புக் கிடங்குகள் இல்லாததால், விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் நெல் மூட்டைகளை இருப்பு வைக்க இடமில்லாமல், விவசாயிகளிடம் நெல்லை கொள்முதல் செய்வது தாமதமாகி வருகிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு நெல் சேமிப்பு கிடங்கு கொண்டுவரக் கோரி கடந்த பல ஆண்டுகளாக இப்பகுதி விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். ஆனால் இதுவரை கிடங்கு அமைப்பதற்கான எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் வேளாண்துறைக்கு என்று தனி பட்ஜெட் கொண்டு வரப்படும் என்று கடந்த ஆண்டு தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இதையடுத்து கடந்தாண்டு வேளாண்மைக்கு தனி பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது.

கதிரடிக்கும் விவசாயிகள்
கதிரடிக்கும் விவசாயிகள்

இந்த ஆண்டும் வேளாண்மைக்கு தனி பட்ஜெட் தயாரிப்பதற்கான பணிகள் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த பட்ஜெட்டில் ராமநாதபுரம் மாவட்டத்தில் நெல் சேமிப்பு கிடங்கு அமைப்பதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுகுறித்து வைகை பாசன தென் மண்டல தலைவர் மதுரைவீரன் நம்மிடம் பேசியபோது, ``ஒவ்வோர் ஆண்டும் நெல் அறுவடையின் போது சேமிப்பு கிடங்கு இல்லை என்ற காரணத்திற்காகவே விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்முதல் செய்ய காலதாமதம் ஆக்குகின்றனர். இங்கு கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் சிவகங்கை மாவட்டத்திலுள்ள நெல் சேமிப்பு கிடங்குக்கு கொண்டு செல்லப்படுகிறது.

மதுரைவீரன்
மதுரைவீரன்

அந்த மாவட்டத்தில் உள்ள விவசாயிகளின் நெல் மூட்டைகளுக்கு முதலில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அவர்களின் நெல் மூட்டைகள் இருப்பு வைத்தது போக கிடங்கில் மீதம் இருக்கும் பட்சத்தில் ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளின் நெல் மூட்டைகளை அங்குள்ள அதிகாரிகள் வாங்கி வைக்கின்றனர்.

இந்த பட்ஜெட் கூட்டத்தொடரிலாவது ராமநாதபுரத்திற்கு நெல் சேமிப்பு கிடங்கு கொண்டு வரப்படும் என்ற அறிவிப்பு வரும் என நம்பிக்கையோடு காத்திருக்கிறோம். அவ்வாறு அறிவிக்கும் பட்சத்தில் இப்பகுதி விவசாயிகளின் 50 ஆண்டுகால போராட்டம் முடிவுக்கு வரும்" என்று தெரிவித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism