Published:Updated:

`இன்ஷூரன்ஸ் ப்ரீமியத்தைவிடவும் குறைவாக வந்த இழப்பீட்டு தொகை!' - அதிர்ச்சியில் விவசாயிகள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பயிர் சேதத்தை அதிகாரிகள் பார்வையிட வந்தபோது
பயிர் சேதத்தை அதிகாரிகள் பார்வையிட வந்தபோது

சம்பா பயிர் இழப்பீடாகத் தமிழகத்துக்கு 2,22,579 விவசாயிகளுக்கு 507.99 கோடி ரூபாய் இழப்பீடாக ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள 5,070 விவசாயிகளுக்கு 2.42 கோடி ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

``ஆயிரக்கணக்கில் கடன் வாங்கி செலவு செய்த பயிருக்கு, காப்பீட்டுத் திட்டத்தில் குறைவான அளவே இழப்பீடு வழங்கி அரசு எங்களை ஏமாற்றிவிட்டது" என்று புலம்புகிறார்கள் ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள்.

பயிர் சேதத்தை அதிகாரிகள் பார்வையிட்டபோது
பயிர் சேதத்தை அதிகாரிகள் பார்வையிட்டபோது

பருவம் தவறாத மழையாலும் சேதுபதி மன்னர்கள் ஏற்படுத்திக் கொடுத்த நீராதாரங்களாலும் ஒரு காலத்தில் நெற்களஞ்சியமாக திகழ்ந்த ராமநாதபுரம் மாவட்டம், கடந்த 50 ஆண்டுகளாக வறட்சிப் பகுதியாக மாறி, விவசாய பரப்புகள் குறைந்து ஒருபோகம் விவசாயம் செய்வதே பெரும் சவாலாகிப் போனது.

வளைகுடா நாடுகளுக்கும் பிற நகரங்களுக்கும் கூலி வேலைக்கு பலர் சென்றுவிட்ட நிலையில் விவசாயம், கால்நடை வளர்ப்பு தவிர வேறு எதுவும் தெரியாத மக்கள் பல்வேறு கஷ்டங்களுக்கு இடையே விவசாயத்தை விடாமல் செய்துகொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில்தான், கடந்தாண்டு பெய்த பெரு மழையால் சேதமான பயிர்களுக்கு தேசிய காப்பீட்டு திட்டம் மூலம் ரூ.100, ரூ.150, ரூ.1,000 என்று மிகக்குறைந்த தொகையை காப்பீட்டு நிறுவனம் வழங்கியுள்ளதைப் பார்த்து விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

வயல் (மாதிரி படம்)
வயல் (மாதிரி படம்)
கடல்நீரால் நாசமாகும் தோட்டக்கலைப் பயிர்கள்; கவலையில் நாகை விவசாயிகள்!

இதுகுறித்து நம்மிடம் பேசிய வைகை பாசன விவசாயிகள் சங்க கடலாடி வட்டாரத் தலைவர் பாக்யநாதன், ``வானம் பார்த்த பூமியாகவும் வறட்சி நிறைந்த பகுதிகளும் உள்ளடக்கிய ராமநாதபுரம் மாவட்டத்தில் 2020-21-ம் ஆண்டு சம்பா சாகுபடி செய்த 1,58,000 விவசாயிகள் தேசிய வேளாண் பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்தார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நெல் ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் 135, மிளகாய் ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் 1,300 என பிரீமியத் தொகையைச் செலுத்தினார்கள். கடந்த ஆண்டு பருவம் தவறி பெய்த மழையாலும், ஜனவரி மாதத்தில் பெய்த அதிகமான மழை, புரவி, நிவர் புயல்களாலும் நெல் மற்றும் மிளகாய் விவசாயம் முழுமையாகப் பாதிக்கப்பட்டது

குறிப்பாக, முதுகுளத்தூர் தாலுகா தேரிருவேலி வட்டாரத்தில் தாளியரேந்தல் வருவாய் கிராமத்தில் தாளியரேந்தல், செட்டியரேந்தல், வளநாடு, செங்கப்படை முதலிய கிராமங்களில் விவசாயம் முழுவதும் அழிந்துவிட்டதை நேரில் பார்வையிட்ட மத்திய அரசு குழுவினர், மாவட்ட ஆட்சியர், வேளாண்துறை மற்றும் இன்ஷூரன்ஸ் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்கள்.

பாக்யநாதன்
பாக்யநாதன்

அதை நம்பி மீண்டும் கடன் வாங்கி அடுத்த பருவ விவசாயத்தைத் தொடங்கினோம். கடந்த வருடத்துக்கான காப்பீட்டுத் திட்ட இழப்பீடு தொகை வந்தால் பெற்ற கடனை அடைக்கலாம் என்று விவசாயிகள் நம்பியிருந்தார்கள்.

ஆனால், அரசு தற்போது அறிவித்த பயிர் காப்பீட்டுத் தொகையை பார்த்து அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. பல ஆயிரம் ரூபாய் நஷ்டமாகியுள்ள ஒவ்வொரு விவசாயியின் வங்கிக் கணக்கிலும் ரூ.100 முதல் ரூ.1,000 வரை மட்டுமே வரவாகியுள்ளது. இது எந்த அடிப்படையில் வழங்கியுள்ளார்கள் என்று தெரியவில்லை. நெல் ஏக்கருக்கு ரூ 130-ம், மிளகாய் ஏக்கருக்கு ரூ.1,300-ம் பிரீமியம் செலுத்தியுள்ள நிலையில், அதை விட மிகச் சொற்பமாக காப்பீட்டுத் தொகை வழங்கியுள்ளார்கள்.

வானம் பார்த்த பூமியான ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயத்தை விட்டுவிடாமல் கடன் வாங்கி செய்து கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு இயற்கைப் பேரிடர் ஒருபக்கம் நஷ்டத்தை உண்டாக்கி வருகிறது என்றால், காப்பீட்டுத் திட்டம் என்று ஆசை காட்டி மேலும் கஷ்டத்தை அரசு உண்டாக்குகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர், தொகுதி அமைச்சரிடம் முறையிட்டுள்ளோம். தமிழக முதலமைச்சரி தனிப் பிரிவுக்கும் மனுவை அனுப்பியுள்ளோம். முதலமைச்சர் எங்கள் கோரிக்கையை பரீசீலனை செய்வார் என நம்புகின்றோம். தீர்வு கிடைக்கவில்லையென்றால் போராட்டம் நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை" என்றார்.

பயிர் சேதத்தை அதிகாரிகள் பார்வையிட வந்தபோது
பயிர் சேதத்தை அதிகாரிகள் பார்வையிட வந்தபோது
சராசரியைவிட கரூரில் அதிக மழைப் பொழிவு; நிரம்பும் நீர்நிலைகள்; மகிழ்ச்சியில் விவசாயிகள்!

மழையால் சேதமான பயிர்களையும் விவசாயிகளையும் நேரில் பார்த்து ஆய்வு செய்ய மாவட்ட அதிகாரிகள், வேளாண்துறையினர், மத்திய அரசின் பார்வையாளர்கள், காப்பீட்டு அதிகாரிகள் வந்து பார்வையிட்டு மதிப்பீடு செய்து சென்ற நிலையில், தனியாக இழப்பீடும், ஏக்கருக்கு 16,000 வரை காப்பீடும் வழங்குவார்கள் என்று நம்பியிருந்த நிலையில் தற்போது வழங்கியுள்ள சொற்பத் தொகையை எந்த அடிப்படையில் வழங்குகிறார்கள் என்பது தெரியவில்லை என்கிறார்கள் விவசாயிகள்.

சம்பா பயிர் இழப்பீடாகத் தமிழகத்துக்கு 2,22,579 விவசாயிகளுக்கு 507.99 கோடி ரூபாய் இழப்பீடாக ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள 5,070 விவசாயிகளுக்கு 2.42 கோடி ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

இப்புகார் பற்றி ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் விசாரிக்க உள்ளதாகத் தெரிவிக்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு