Published:Updated:

“விவசாயம் கார்ப்பரேட் ஆகிவிட்டால் இளைஞர்கள் கூலிகளாகி விடுவார்கள்!”

இறையழகன் பண்ணையில் பேசும் நடிகர் பொன்வண்ணன்
பிரீமியம் ஸ்டோரி
News
இறையழகன் பண்ணையில் பேசும் நடிகர் பொன்வண்ணன்

பயணம்

டிசம்பர் 30-ம் தேதி, இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வாரின் 6-வது நினைவு தினத்தையொட்டி காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அவரின் படத்திறப்பு விழா நடைபெற்றது. இயற்கை விவசாயத்துக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காஞ்சிபுரம், தாமல் அருகேயுள்ள கிளையாறு முதல் திருக்கழுக்குன்றம் கடும்பாடி வரை சுமார் 100 கி.மீ வாகனப் பயணம் நடைபெற்றது. பாலாறு படுகை விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ‘காஞ்சி’ அமுதன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் சுற்றுவட்டார விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர்.

எழில்சோலை மாசிலாமணி பண்ணையில்
எழில்சோலை மாசிலாமணி பண்ணையில்

காஞ்சிபுரம் மாவட்டம், தாமல் அருகே உள்ளது கிளையாறு கிராமம். இங்குள்ள இயற்கை விவசாயி பேரின்பனின் ‘வையகம்’ இயற்கை வேளாண் பண்ணையில் நம்மாழ்வாரின் படத்திறப்பு விழா தொடங்கியது. அப்போது பேசிய காஞ்சி அமுதன், ``நம்மாழ்வாரைப்போல எளிமையான, மென்மையான மனிதரைப் பார்ப்பது அரிது. வாழும்போது அவரை அரசு பெரிதாகக் கொண்டாடவில்லை. இயற்கை விவசாயத்துக்காகத் தன் வாழ்நாள் முழுவதும் பணியாற்றியவர் நம்மாழ்வார். `இயற்கையான முறையில் மாடுகளை இனப்பெருக்கம் செய்யக் கூடாது’ எனத் தமிழக அரசு புதிய சட்டத்தை இயற்றி இருக்கிறது. நாட்டு மாடுகளை அழிக்கும் இது போன்ற சட்டத்தை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். நம்மாழ்வார் பெயரில் இயற்கை விவசாயக் கல்லூரியை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைக்க வேண்டும்’’ என்றார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

கிளையாறு பகுதியிலிருந்து வாகனப் பயணம் தொடங்கியது. வாகனத்தில் சென்றவர்கள் தாமல் இயற்கை விவசாயப் பண்ணை, கீழம்பியிலுள்ள தமிழகம் இயற்கை விவசாயப் பண்ணை, வில்லிவலம் பகுதியிலுள்ள தாந்தோணி இயற்கை விவசாயப் பண்ணை உள்ளிட்ட பண்ணைகளில் நம்மாழ்வாரின் படங்களைத் திறந்துவைத்தனர். மதிய உணவு உத்திரமேரூர் அருகே கைத்தண்டலம் கிராமத்தில் எழில்சோலை பண்ணையில் நடைபெற்றது. விவசாயிகளுக்கு அங்கேயே மதிய உணவு பரிமாறப்பட்டது. அங்கு நம்மாழ்வாரின் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார் ‘எழில்சோலை’ மாசிலாமணி, “காற்று, குடிநீர், உணவு என எல்லாவற்றிலும் நஞ்சு கலந்துவிட்டது. இவற்றிலிருந்து விடுபட விவசாயிகளிடையே மாற்றத்தைக் கொண்டுவர தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்துக்கொண்டார் நம்மாழ்வார். பசுமை விகடன் அதற்குத் துணையாக நின்றது” என்றார்.

இறையழகன் பண்ணையில் பேசும் நடிகர் பொன்வண்ணன்
இறையழகன் பண்ணையில் பேசும் நடிகர் பொன்வண்ணன்

மதிய உணவு இடைவெளிக்குப் பிறகு சாத்தனஞ்சேரி தனபால் பண்ணையில் படத்திறப்பு விழா நடைபெற்றது. நிறைவாக திருக்கழுக்குன்றம் அடுத்த கடும்பாடியிலுள்ள இயற்கை விவசாயி இறையழகனின் (தெய்வசிகாமணி) தமிழ் நிலம் தமிழ்ப் பண்ணைக்கு விவசாயிகள் வந்தடைந்தனர். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட நடிகர் பொன்வண்ணன், “ஒரு தலைமுறை விவசாயத்திலிருந்து விடுபட்ட காலத்தில், இயற்கை விவசாயத்தின் மீதான பார்வையை விவசாயிகளிடம் கொண்டு செல்வதற்காகத் தன் அரசாங்கப் பதவியைத் தூக்கி எறிந்தவர் நம்மாழ்வார். பயிர்கள், உயிர்களை விதைப்பதற்கான இடமாக இருந்த நிலம், பணத்தை வைத்து மதிப்பிடும் முறைக்கு மாறியது. விவசாயப் பழக்க வழக்கங்களிலிருந்து ஒரு தலைமுறை விடுபட்டது அந்தக் காலகட்டத்தில்தான். நமது வாழ்வின் அடையாளமாகவே இருந்த விவசாயத்தை இளைஞர்கள் தூக்கி எறிந்ததற்கு அரசாங்கம் காரணமாக இருந்தது.

மீண்டும் விவசாயத்தைத் தொடர நினைக்கும் இளைஞர்களுக்கு தொழிலாளர்கள் கிடைப்பதில்லை. உழைப்பின் மூலம் சுகம் காணும் தலைமுறை இப்போது இல்லை. இந்த நிலையில் இளைஞர்களே உழைப்பாளிகளாக மாற வேண்டும். படித்த பெண்கள் விவசாயம் செய்யும் இளைஞர்களைத் துணையாகத் தேர்ந்தெடுக்க மறுக்கிறார்கள். விவசாயம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மாறிவிட்டால் இளைஞர்கள் படித்த கூலி ஆட்களாக மாறிவிடுவார்கள். இளைஞர்கள் தங்களுடைய நிலத்தில் உழைக்கத் தயாராக இருந்தால் மட்டுமே இயற்கை விவசாயம் மீண்டும் தழைக்கும்” என்று பேசினார்.