Published:Updated:

ஏரிகளை மீட்டெடுக்கும் ஓய்வுபெற்ற ஆசிரியர்... 4 ஆண்டுகளாக தொடரும் ஓய்வில்லா சேவை!

விளாங்குடி பெரிய ஏரி
பிரீமியம் ஸ்டோரி
விளாங்குடி பெரிய ஏரி

சேவை

ஏரிகளை மீட்டெடுக்கும் ஓய்வுபெற்ற ஆசிரியர்... 4 ஆண்டுகளாக தொடரும் ஓய்வில்லா சேவை!

சேவை

Published:Updated:
விளாங்குடி பெரிய ஏரி
பிரீமியம் ஸ்டோரி
விளாங்குடி பெரிய ஏரி

அரியலூர் மாவட்டம், விளாங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற ஆசிரியர் தியாகராஜன். 70 வயதான இவர் இப்பகுதியில் ஏரி, குளங்களுக்குப் புத்துயிர் கொடுத்து வருகிறார். மோசமான நிலையில் கிடக்கும் நீர்நிலைகளைக் கண்டு ஆதங்கப்படும் பலரும், அரசின் செயல்பாடுகளைக் குறை சொல்லிவிட்டு கடந்து செல்வது வழக்கம். ஆனால் இவரோ... அரசை நம்புவதைவிட நாமே களத்தில் இறங்கி நீர் நிலைகளைத் தூர் வாரலாம் என்ற முடிவுக்கு வந்து இந்த உன்னதச் சேவையில் ஈடுபட்டு வருகிறார். 25.8.2019 தேதியிட்ட இதழில் ‘நல்லாசிரியரின் நற்பணி... தூர் வாரப்படும் ஏரிகள்’ என்ற தலைப்பில் இவரைப் பற்றிக் கட்டுரை வெளியிட்டுள்ளோம். இவருடைய சேவையைப் பாராட்டி விகடன் நம்பிக்கை விருதும் வழங்கப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளில் தியாகராஜனின் நீர்நிலைகள் மீட்பு பணி மேலும் தீவிரமடைந்துள்ளது.

தியாகராஜன்
தியாகராஜன்

2019-ம் ஆண்டுக்குப் பிறகு இவருடைய முயற்சியால் தூர்வாரப்பட்ட ஏரி, குளங்களைப் பார்வையிட விளாங்குடி சென்றோம். இவர் நல்லாசிரியர் விருது பெற்றவர் என்பதாலும், வயதான காலத்தில் நீர்நிலைகளை மீட்டெடுக்கும் உயரிய சேவையில் ஈடுபட்டு வருவதாலும், இப்பகுதி மக்கள் இவர் மீது மிகுந்த மதிப்பும் அன்பும் கொண்டுள்ளார்கள். இப்பகுதியில் உள்ள ஏரி ஒன்றில் மண்டிக்கிடந்த முட்புதர்களை அகற்றும் பணியை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்த ஆசிரியர் தியாகராஜனை சந்தித்தோம்.

‘‘தமிழ்நாட்டுல ஒரு பக்கம் தண்ணி பஞ்சம் தலைவிரிச்சாடிக்கிட்டு இருக்கு. இன்னொரு பக்கம் பார்த்தீங்கன்னா, பெரும்பாலான ஊர்கள்ல நீர்நிலைகள் தூர்ந்து போயி மோசமா கிடக்கு. மனுசங்க நாம எப்படி யாவது தண்ணி பிரச்னையைச் சமாளிச் சுடுறோம். ஆனா, பாவம் விலங்குகளும் பறவைகளும் என்ன செய்யும்? அதுக்காக வாவது நாம ஏதாவது செய்யணும்னு யோசிச்சேன். நம்மலால முடிஞ்ச அளவுக்கு ஏரி, குளம், கண்மாயைத் தூர்வாரலாம்னு முடிவு செஞ்சேன். இதுசம்பந்தமா, அமெரிக்காவுல உள்ள என்னோட மகள் கிட்ட பேசினேன். என் கருத்துக்கு உடன்பட்டு என்னை ஊக்கப்படுத்தினாள்’’ என மிகுந்த உற்சாகமாகப் பேசும் தியாகராஜன், தன்னு டைய முயற்சியால் தூர்வாரப்பட்ட நீர்நிலை களுக்கு நம்மை அழைத்துச் சென்றபடியே இதுகுறித்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

சீரமைக்கப்பட்ட விளாங்குடி பெரிய ஏரி
சீரமைக்கப்பட்ட விளாங்குடி பெரிய ஏரி

அனுமதி கொடுத்த கலெக்டர்... ஊற்றெடுத்த உத்வேகம், “2017-ம் வருஷம், எங்க விளாங்குடி கிராமத்துல இருக்குற 64 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய ஏரியைத் தூர்வார ஆசைப்பட்டேன். அதுக்கான அனுமதியை வாங்க, பொதுப்பணித்துறை அதிகாரிகள்கிட்ட பல தடவை அலைஞ்சேன். ஆனாலும், அனுமதி கிடைக்கவே இல்லை. ரொம்பவே நொந்துபோய், அப்பயிருந்த அரியலூர் கலெக்டர் சரவணவேல்ராஜை சந்திச்சு விவரத்தைச் சொன்னதும், உடனே அனுமதி கொடுத்தார். உடனடியா வேலையை ஆரம்பிச்சேன். அதுக்கு என்னோட சொந்த பணம் 4 லட்சம் ரூபாயை செலவு செஞ்சேன். இந்தப் பகுதியில உள்ள சில தன்னார்வலர் களும் தங்களால முடிஞ்ச பங்களிப்பை செஞ்சாங்க. அந்த ஏரியில இருந்து எடுக்கப் பட்ட மண்ணை... அரசு அலுவலகம், கால்நடை மருத்துவமனை, பள்ளிக்கூடம் இதுமாதிரியான இடங்கள்ல இருந்த பள்ளமான பகுதிகளை மேடாக்க பயன் படுத்தினோம். குளத்துக்கரைகளைப் பலப்படுத்தவும் பயன்படுத்தினோம். மண் அரிப்பைத் தடுக்க ஏரியைச் சுத்திலும் சுமார் 3,000 பனை விதைகளை ஊர்மக்கள் ஒத்துழைப்போடு விதைச்சேன். விளாங்குடி பெரிய ஏரியைத் தூர்வாரினது எனக்கு மிகப் பெரிய மனநிறைவை கொடுத்துச்சு. அதனால அடுத்தடுத்து இன்னும் பல ஏரி, குளங்களைத் தூர்வாரணும்ங்கற உத்வேகம் எனக்குள்ள உருவாச்சு.

ஏரி
ஏரி

மனமுவந்து பணம் கொடுக்கும் மகள்

இந்தப் பகுதிகள்ல உள்ள 5 குளங்களைத் தூர்வாரினேன். அமெரிக்காவிலுள்ள என்னோட மகள் ஆனந்தவள்ளி அங்கவுள்ள தன்னோட நண்பர்களோட பங்களிப்புத் தொகையையும் சேர்த்து மொத்தம் 10 லட்சம் ரூபாய் அனுப்பி வச்சார். சில தொண்டு நிறுவனங்களும் பங்களிப்பு செஞ்சாங்க. தூர் வாரப்பட்ட அஞ்சு குளங்களோட மொத்த பரப்பளவு 80.77 ஏக்கர்.

நடைப்பயிற்சி செல்வதற்கான வசதி

இந்த நிலையில், இந்த வருஷம் 60 ஏக்கர் பரப்புள்ள ஒரு பெரிய ஏரி, 5 ஏக்கர் பரப்புள்ள தொண்டன் ஏரி, 6 ஏக்கர் அளவுள்ள கொங்கன் ஏரி, 4 ஏக்கர் பரப்புள்ள நாச்சியார் குளம், 5 ஏக்கர் பரப்புள்ள ஒரு ஏரி... இங்கெல் லாம் மண்டிக்கிடந்த முட்புதர்கள், சீமைக் கருவேல மரங்களை எல்லாம் முழுமையா அகற்றி சுத்தப்படுத்தினோம். என்னோட முயற்சியில தூர்வாரப்பட்ட பெரிய ஏரியோட கரைகள்ல மக்கள் நடைப்பயிற்சிக்கு 1,50,000 ரூபாய் செலவு செஞ்சு மாவட்ட நிர்வாகம் வசதி பண்ணியிருக்கு.

சீரமைக்கும் பணியில்
சீரமைக்கும் பணியில்

தேளூர் ஊராட்சியில் உள்ள 17 ஏக்கர் பரப்புகொண்ட கொள்ளங்குழி ஏரி, 6 ஏக்கர் பரப்புள்ள கண்ணாபூரி ஏரிகளையும் தூர்வாரியிருக்கேன். அதுக்கு 3,20,000 ரூபாய் செலவு ஆனது. அதுக்கு என்னோட மகளும் நானும் 3,00,000 ரூபாயும் ஊர் மக்கள் 20,000 ரூபாயும் பங்களிப்பு செஞ்சோம். ஒரு தொண்டு நிறுவனம், ஜே.சி.பி இயந்திரத்தை வாடகை இல்லாமல் கொடுத்ததுனால ஓரளவுக்குச் செலவு குறைஞ்சது.

இளைஞர்களிடம் ஏற்படுத்திய ஈர்ப்பு

என்னோட ஓய்வுக்காலத்துலதான் இந்தப் பணிகள்ல நான் ஈடுபட்டுக்கிட்டு இருக்கேன். இதை நிறைய பேர் மனதார பாராட்டுறாங்க. ஆனா, இதைவிட எனக்குப் பெரிய சந்தோஷம் என்னென்னா, என்னோட செயல்பாடுகளால ஈர்க்கப்பட்ட இந்தப் பகுதி இளைஞர்கள் பலர், இதுமாதிரியான பணிகள்ல அவங்க தனியாவும் ஈடுபட்டுக் கிட்டு இருக்காங்க. அதேசமயம் நான் முன்னெடுக்கக்கூடிய பணிகளுக்கும் தங்களால முடிஞ்ச ஒத்துழைப்பு கொடுக் குறாங்க. இதே மாதிரி ஒவ்வோர் ஊர்லயும் இளைஞர்கள் களம் இறங்கினா, நிலத்தடி நீர்மட்டம் உயரும். விவசாயம் செழிக்கும். கால்நடைகளும் பயனடையும்’’ என்றார் முகமலர்ச்சியுடன்.

பிச்சபிள்ளை
பிச்சபிள்ளை

முன்மாதிரி கிராமம்!

விளாங்குடி கிராமத்தைச் சேர்ந்த பிச்சபிள்ளையிடம் பேசினோம். “அரியலூர்னு சொன்னாலே வறட்சியான மாவட்டம், மிகவும் பின்தங்கிய மாவட்டம்னு பேராயிடுச்சு. ஆனா, ஒரு காலத்துல இது நீர்வளத்தோடு செழிப்பாக இருந்த பகுதி. ராஜராஜசோழனோட மகன் ராஜேந்திர சோழன், ஆட்சிக் காலத்துல, இந்தப்பகுதி நீர்நிலைகளை சிறப்பா பராமரிச்சிருக்காங்க. நீர்வளம், நிலவளம் சிறப்பாக இருக்கக்கூடிய பகுதியை மையமா வச்சுதான் அந்தக் காலத்துல மன்னர்கள் ஆட்சி செஞ்சிருக்காங்க. குறிப்பா இந்தப் பகுதியில பிரமாண்டமான ஏரி, குளங்கள் நிறைய இருந்திருக்கு. ஆனா, காலப்போக்குல அதெல்லாம் இருந்ததுக்கான அடையாளம்கூட இல்லாம போயிடுச்சு. இப்ப தூர்ந்து கிடக்கக்கூடிய ஏரி, குளங்களைத் தூர்வாரி மீட்டெடுக்கலைனா, இன்னும் கொஞ்ச காலத்துல இதுவும் அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப்போயிடும்.

ஏரி, குளங்கள்ல உள்ள வண்டலை எடுக்க அதிகாரிகள் அனுமதி கொடுக்குறதில்லை. ஆனா, இப்ப அரியலூர் மாவட்ட கலெக்டரா இருக்கக்கூடிய ரமண சரஸ்வதி, சில கட்டுப்பாடுகளோடயும் வழிகாட்டுதல்களோடயும் விவசாயிகளுக்கு அனுமதி கொடுக்குறாங்க. ஆசிரியர் தியாகராஜனோட முன் முயற்சியால எங்க பகுதியில உள்ள நிறைய ஏரி, குளங்கள் தூர்வாரப்பட்டுருக்கு. அரியலூர் மாவட்டத்துல விளாங்குடி முன்மாதிரி கிராமமா மாறிக்கிட்டு இருக்கு’’ என்றார்.

ரமண சரஸ்வதி
ரமண சரஸ்வதி

பாராட்டப்படக்கூடியது!

அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதியிடம் நாம் பேசியபோது, “ஓய்வுப் பெற்ற ஆசிரியர் தியாகராஜனோட செயல்பாடுகள், பாராட் டப்படக்கூடியது. மற்ற பகுதிகள்ல உள்ள கண்மாய், ஏரி, குளங்களை மீட்டெடுக்குற துக்கும் நிறைய யோசனைகள் சொல்லி யிருக்கார். இது சம்பந்தமா அதிகாரிகளோடு கலந்தாலோசிக்கிட்டு இருக்கேன்’’ எனத் தெரிவித்தார்.