Published:Updated:

சிறப்பு வாய்ந்த கள்ளிமடையான் நெல் ரகம்; பாதுகாக்கக் களமிறங்கிய ஓய்வு பெற்ற ஆசிரியர்!

விதைப்பரவல்
விதைப்பரவல்

பாரம்பர்ய நெல் வேண்டுபவர்கள் விலை இல்லாமல் பெற்றுக்கொண்டு அவற்றை விளைவித்துக் கொடுத்தால் மீண்டும் அந்த நெல்லை உழவர்களுக்குக் கொடுத்து பரவல் செய்கிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இந்த லிங்க் மூலம் இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பாரம்பர்ய நெல் ரகமான கள்ளிமடையான் நெல்லை விதை நெல்லாக சுமார் 100 கிலோ வரையிலும் விலையில்லாமல் வழங்கி விதைப் பகிர்வு முறையையே தொடங்கி வைத்திருக்கிறார் ஓய்வுபெற்ற ஆசிரியர் வரதராசன்.

கள்ளிமடையான் விதைப்பகிர்வு
கள்ளிமடையான் விதைப்பகிர்வு
``விதைகள் பரவலாக்கம்தான் இலக்கு; விற்பனை அல்ல!" - ஆரோவில்லில் களைகட்டிய விதைத் திருவிழா

பெரம்பலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கள்ளிமடையான், களரன் சம்பா, மூங்கில் சம்பா, சன்னச் சம்பா, சடைச்சம்பா, கார்த்திகைச்சம்பானு கிட்டத்தட்ட பத்துக்கும் மேற்பட்ட பாரம்பர்ய ரகங்கள் இருந்திருக்கின்றன. இதில் முதன்மையானது கள்ளிமடையான் ரகம்தான். உவர் மண்ணுக்கும், களர் மண்ணுக்கும் ஏத்த ரகம் இது. களர் மிக்க நிலங்களில் பெரும்பாலான நெல் ரகங்கள் வளர்வதில்லை. அதற்கு ஏற்ற வகையில் நம் முன்னோர்கள் இப்பகுதியிலேயே உருவான கள்ளிமடையான் என்ற நெல் ரகத்தைக் கண்டறிந்து அவற்றைக் காலங்காலமாகப் பயிரிட்டு வந்தார்கள்.

இது ஐந்தரை மாதங்களில் 5 அடி உயரம் வரை வளரக்கூடியது. குறைந்த அளவு தண்ணீர் போதுமானது. மழை, புயல் வெள்ளம், வறட்சி ஆகியவற்றைத் தாங்கி வளரக்கூடியது. பூச்சித் தாக்குதல் இதில் குறைவு.

விதைப்பகிர்வு நிகழ்வு
விதைப்பகிர்வு நிகழ்வு

இலை, தழை, கடலை பிண்ணாக்கு, ஆடு மாடு எரு மட்டுமே போதுமானது. செலவில்லாத வகையில் நல்ல லாபம் ஈட்டக் கூடியது. வைக்கோல் ஐந்தடி உயரம் என்பதால் மற்ற நெல் ரகங்களைவிட நான்கு மடங்கு மாட்டுத் தீவனமும் இதில் கிடைக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இப்படி சிறப்புகள் வாய்ந்த, களர் நிலத்துக்கு ஏற்ற நெல்லான கள்ளிமடையான் ரகத்தைப் பரவலாக்கும் வகையில், உழவர் வரதராசன் விதை பகிரும் முறையைத் தொடங்கி வைத்துள்ளார். நெல் வேண்டுபவர்கள் விலை இல்லாமல் பெற்றுக்கொண்டு அவற்றை விளைவித்துக் கொடுத்தால் மீண்டும் அந்த நெல்லை உழவர்களுக்குக் கொடுப்பார். பெரம்பலூர் மாவட்ட அடையாளமான இந்த நெல்லைப் பாதுகாக்கவே இந்த முயற்சியைத் தொடங்கியுள்ளார். அத்தோடு பாரம்பர்ய நெல் ரகங்களைத் தேடிக் கண்டுபிடித்து, பயிர் செய்து, விதைநெல்லைப் பரவலாக்கம் செய்யும் முயற்சியிலும் ஈடுபட்டிருக்கிறார்.

விதைப்பகிர்வு நிகழ்வு
விதைப்பகிர்வு நிகழ்வு
156 நெல் ரகங்கள்... விதைத் தூய்மை காக்க ஒரு முயற்சி!

இந்நிகழ்வில் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் ரமேஷ் கருப்பையா, பாமரர் ஆட்சியியல் கூடம் சரவணன் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் கலந்துகொண்டு விதை நெல் பெற்றுச்சென்றனர். கள்ளிமடையான் நெல்லில் செய்யப்பட்ட பொங்கல் அனைவருக்கும் வழங்கப்பட்டது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு