Published:Updated:

குண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு வேண்டும்!

மிளகாய்
பிரீமியம் ஸ்டோரி
மிளகாய்

கோரிக்கை

குண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு வேண்டும்!

கோரிக்கை

Published:Updated:
மிளகாய்
பிரீமியம் ஸ்டோரி
மிளகாய்

மிழகத்தின் வறட்சியான மாவட்டம் ராமநாதபுரம். ஆனால், கடும் வறட்சியிலும் மற்ற மாவட்ட விவசாயிகளுக்கு இணையாக விவசாயத்தில் ஈடுபடுகிறார்கள். மானாவாரி புழுதிக்காட்டில் நெல் விளைவித்துக் கொண்டிருக்கிறார்கள் விவசாயிகள். இந்த மாவட்டத்திற்கான தனிச்சிறப்பு, குண்டு மிளகாய்.

‘முண்டு’ என அழைக்கப்படும் இந்தக் குண்டு மிளகாய் உலகளவில் பிரசித்திபெற்றது. ‘மானாவாரியாக விளையும், மருத்துவக் குணங்கள் நிறைந்த குண்டு மிளகாயின் தனித்துவத்தை அங்கீகரிக்கும் வகையில் புவிசார் குறியீடு பெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என ராமநாதபுரம் மாவட்ட மிளகாய் விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். இந்தக் கோரிக்கை நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், பரமக்குடி, ஆர்.எஸ்.மங்களம், கமுதி, நயினார் கோயில் தாலுக்காக்கள் மற்றும் ஒன்றுபட்ட ராமநாதபுரம் மாவட்டப் பகுதியான இளையான்குடியிலும் குண்டு மிளகாய் அதிகளவு விளைவிக்கப்படுகிறது. அதிக காரம் கொண்ட இந்த வகை மிளகாயை அரைக்கும்போது, அதிக பொடி கிடைக்கும். மருத்துவக் குணம் கொண்டது. இதனால் நாடு முழுவதும் இதற்கெனத் தனி மவுசு உள்ளது.

துரை அசோகன்
துரை அசோகன்

குண்டு மிளகாயின் தனித்தன்மைக் குறித்து விவரித்த ஆர்.எஸ்.மங்களம் வர்த்தகர் சங்கத் தலைவரான துரை அசோகன், ‘‘ராமநாதபுரம் பகுதியில் விளைவிக்கப்படும் குண்டு மிளகாயில் வைட்டமின் ‘சி’ நிறைந்துள்ளது. இதை உணவில் சேர்த்துக் கொள்பவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி அதிகளவில் கிடைப்பதுடன் நோய்த் தொற்று ஏற்படுவதும் தடுக்கப்படுகிறது. இந்த மிளகாயைப் பச்சையாகக் கடித்தால் அதிகளவிலான உமிழ்நீர் சுரந்து ஜீரண சக்தி கிடைக்கும். மேலும் ரத்த அழுத்தத்தைச் சரியான நிலையில் வைத்திருக்கவும் உதவுகிறது. சர்க்கரைநோய் உள்ளவர்கள் இந்தப் பச்சைக் குண்டு மிளகாயை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் சர்க்கரையின் அளவு கட்டுப்படும். மேலும், நோய்களை உருவாக்கும் கெட்டக் கொழுப்புகளைக் குறைத்து ஆரோக்கியத்தைத் தரும் இந்தக் குண்டு மிளகாய், மற்ற மிளகாய் ரகங்களைவிடத் தனிச்சிறப்புப் பெற்றுத் திகழ்கிறது. எனவேதான் இந்த மிளகாய்க்கு மார்க்கெட்டில் தனி மவுசு உள்ளது’’ என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
மிளகாய்
மிளகாய்

மிளகாயைப் பயிர் செய்து வரும் கண்ணன், ‘‘கரிசல் மண்ணுக்கு ஏற்ற ரகம் இது. அதிக தண்ணி தேவைப்படாது. மாவட்டத்துல 25,000 ஏக்கர்ல மிளகாய் விவசாயம் நடக்குது. சம்பா மிளகாய், குண்டு மிளகாய்னு ரெண்டு ரகங்கள் இங்க விளையுது. மானாவாரிப் பயிராக விளையுற இதுல, குண்டு மிளகாய்க்குத் தான் தனி மவுசு. இதோட நிறம், காரம் மத்த மிளகாய் ரகங்களைக் காட்டிலும் தனித்துவமானது. குண்டு மிளகாயில் பொடியும் அதிகமாகக் கிடைக்குது. புரட்டாசி, ஐப்பசி மாசத்துல நடவு செஞ்சு, மாசி முதல் வைகாசி வரை அறுவடை செய்வாங்க. இதை, பச்சையாகவும், மண்ணுல காயவெச்சு, வத்தலாகவும் வெளிமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் வியாபாரிகள் மூலமா ஏற்றுமதி செய்யறாங்க. இதுக்காக ஆர்.எஸ்.மங்களத்துல வாரந்தோறும் சனிக்கிழமை சந்தை நடக்குது. இந்தச் சந்தைக்குப் பல ஊர்கள்ல இருந்து வியாபாரிகள் வந்து, குண்டு மிளகாயை மொத்தமாகக் கொள்முதல் செய்யறாங்க.

கண்ணன்
கண்ணன்

தமிழ்நாட்டுல விளையக்கூடிய மஞ்சள், மலைப்பூண்டுக்குக் கிடைச்ச மாதிரி, ஒருங்கிணைந்த ராமநாதபுரம் பகுதியில விளையக்கூடிய தனித்துவமான குண்டு மிளகாய்க்கும் புவிசார் குறியீடு வாங்க, அரசு நடவடிக்கை எடுக்கணும். அது மூலமா இந்தியாவுல விளையுற மிளகாய் ரகங்கள்ல ராமநாதபுரம் முண்டு மிளகாய்க்கு உலக அளவுல தனி இடம் கிடைக்கும். இதை நம்பி இருக்கிற பல லட்சம் மிளகாய் விவசாயிகளுக்கு நல்ல விலையும் கிடைக்கும். அது மூலமா எங்களோட வாழ்க்கைத் தரமும் உயரும்’’ என்றார்.

இதுசம்பந்தமாக மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவின் கவனத்துக்குக் கொண்டு சென்றோம். உரிய நடவடிக்கை எடுப்பதாகச் சொல்லியிருக்கிறார்.

காய்ந்துபோன கரிசல் மண்ணில் விளைவிக்கப்படும் காரம் நிறைந்த குண்டு மிளகாய்க்குத் தனிப் பெருமை கிடைக்க வேண்டும் என்பதே மிளகாய் விவசாயிகளின் விருப்பம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism