Published:Updated:

போர் எதிரொலி: ரஷ்யாவிலிருந்து இந்தியாவுக்கு உரம் இறக்குமதி பாதிப்பு; எச்சரிக்கும் வல்லுநர்கள்!

உரம்

உரத்துக்காக ரஷ்யாவைச் சார்ந்துள்ள இந்தியா போன்ற நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், ரஷ்யாவுக்கு மாற்றாக உரத்தை வழங்கும் விநியோகஸ்தர்களை இந்தியா தேட வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டு உள்ளது.

போர் எதிரொலி: ரஷ்யாவிலிருந்து இந்தியாவுக்கு உரம் இறக்குமதி பாதிப்பு; எச்சரிக்கும் வல்லுநர்கள்!

உரத்துக்காக ரஷ்யாவைச் சார்ந்துள்ள இந்தியா போன்ற நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், ரஷ்யாவுக்கு மாற்றாக உரத்தை வழங்கும் விநியோகஸ்தர்களை இந்தியா தேட வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டு உள்ளது.

Published:Updated:
உரம்

ரஷ்யா உலகின் மிகப் பெரிய உர ஏற்றுமதியாளர் என்றே சொல்லலாம். உலக அளவில் பொட்டாஷ் எனும் உரத்தை 20% ஏற்றுமதி செய்து வருகிறது. இந்தியாவும் இந்த உரத் தேவைக்காக ரஷ்யாவைச் சார்ந்துள்ளது. கிட்டத்தட்ட 30 லட்சம் டன் பொட்டாஷை ரஷ்யா மற்றும் பெலாரஸில் இருந்து இறக்குமதி செய்து வருகிறது இந்தியா. இந்நிலையில், உக்ரைனில் நடந்து வரும் போரால், ரஷ்யாவின் உர ஏற்றுமதி முடங்கியுள்ளது. குறிப்பாக, மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகளால் உர ஏற்றுமதியை ரஷ்யா நிறுத்துவும் செய்யலாம்.

உரம்
உரம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதனால் உரத்துக்காக ரஷ்யாவைச் சார்ந்துள்ள இந்தியா போன்ற நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், ரஷ்யாவுக்கு மாற்றாக உரத்தை வழங்கும் விநியோகஸ்தர்களை இந்தியா தேட வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டுள்ளது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

யூரியா, டை அமோனியம் பாஸ்பேட், மியூரேட் ஆஃப் பொட்டாஷ் மற்றும் நைட்ரஜன்-பாஸ்பரஸ்-பொட்டாசியம் போன்ற நான்கு வகையான உரங்களை இந்தியா இறக்குமதி செய்து வருகிறது. இதில் பொட்டாஷ் உரம் விவசாயிகளுக்கு மலிவான விலையில் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு பட்ஜெட்டில் உரம்-மானியத் திட்டத்துக்காக சுமார் ரூ.1.05 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டது.

பொட்டாஷ்
பொட்டாஷ்

இந்நிலையில், உக்ரைனில் நடந்து வரும் போரால், ரஷ்யாவின் உர ஏற்றுமதி முடங்கியுள்ளது. இது இந்தியாவுக்கு உரம் சார்ந்த விநியோகஸ்தரைத் தேடுவது குறித்த நெருக்கடியை வழங்கி உள்ளது. இந்தியாவில் உரப் பற்றாக்குறை ஏற்பட்டால் விவசாயம் பெரிய நெருக்கடிக்கு உள்ளாகும். உற்பத்தி பாதிக்கும் என்று எச்சரிக்கிறார்கள் வல்லுநர்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism