Published:Updated:

சிறு, குறு விவசாயிகளின் அட்சயப் பாத்திரம்... சம்பங்கி சாகுபடி செய்வது எப்படி?

சம்பங்கி சாகுபடி
சம்பங்கி சாகுபடி

'நம்பினோர் கைவிடப்படார்' என்பது இதற்கு மிகவும் பொருந்தும். ஒரு முறை பயிர் செய்தால், பல ஆண்டுகளுக்கு வருமானம் கொடுக்கக்கூடியது. ஆண்டு முழுவதும் மகசூல் கிடைப்பதால் விலை ஏற்ற இறக்கங்கள் சமன் செய்யப்பட்டு, உத்தரவாதமான லாபம் கிடைத்துவிடும்

60 சென்ட் நிலத்தில் இயற்கை முறையில் சம்பங்கிச் சாகுபடி செய்யும் தொழில்நுட்பம் குறித்து கிருஷ்ணசாமி சொன்ன தகவல்கள் இங்கே பாடமாக...

தேர்ந்தெடுக்கப்பட்ட நிலத்தில் இரண்டு சால் உழவு ஓட்டி, மாட்டு எரு, ஆட்டு எரு, கம்பஞ்சக்கை, எள்ளுச்சக்கை கலந்த மூன்று டன்னை அடியுரமாக இட வேண்டும். அதனுடன், தலா இரண்டு கிலோ சூடோமோனஸ், டிரைக்கோடெர்மா விரிடி, தலா ஐந்து கிலோ கடலைப் பிண்ணாக்கு, ஆமணக்கு பிண்ணாக்கு, வேப்பங்கொட்டைதூள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அடியுரம் இட்ட பிறகு மீண்டும் ஓர் உழவு ஓட்ட வேண்டும். பிறகு இரண்டரை அடி அகலம் கொண்ட பார் அமைக்க வேண்டும். பாருக்கு பார் ஓரடி இடைவெளி இருக்க வேண்டும். பாரின் இரு ஓரங்களிலும் விதைக்கிழங்கை தலா முக்கால் அடி இடைவெளியில் நடவு செய்ய வேண்டும்.

விதைப்புக்கு 300 கிலோ விதைக்கிழங்கு தேவைப்படும். இதை ஜீவாமிர்தத்தில் விதை நேர்த்திசெய்து நடவு செய்ய வேண்டும். விதைப்பிலிருந்து 15-ம் நாள் 200 லிட்டர் தண்ணீரில் ஒரு லிட்டர் மீன் அமிலம் கலந்து, தெளிப்புநீர்ப் பாசனம் மூலம் கொடுக்க வேண்டும்.

சிறு, குறு விவசாயிகளின் அட்சயப் பாத்திரம்... சம்பங்கி சாகுபடி செய்வது எப்படி?

அடுத்த ஒரு வாரம் கழித்து, 200 லிட்டர் தண்ணீரில் இரண்டு லிட்டர் இ.எம் திரவத்தைக் கலந்து தெளிப்புநீர்ப் பாசனம் மூலம் தர வேண்டும். ஒரு வாரத்துக்கு 200 லிட்டர் தண்ணீரில் திரவ நிலையிலான வேஸ்ட் டீகம்போஸர் கலந்து கொடுக்க வேண்டும். இதுபோல் மாற்றி மாற்றித் தொடர்ச்சியாகக் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். மாதம் ஒரு முறை களையெடுக்க வேண்டும்.

மாதம் ஒரு முறை 500 கிலோ மேம்படுத்தப்பட்ட எருவுடன் தலா 10 கிலோ கடலைப் பிண்ணாக்கு, ஆமணக்கு பிண்ணாக்கு, வேப்பங்கொட்டைக் கரைசலைக் கலந்து, நிலம் முழுக்கப் பரவலாகத் தூவ வேண்டும். தினமும் அரை மணி நேரம் மழைத்தூவான் மூலம் தண்ணீரைச் செடிகள் மீது பொழியச் செய்ய வேண்டும்.

சம்பங்கி... சிறு, குறு விவசாயிகளின் அட்சய பாத்திரம். 'நம்பினோர் கைவிடப்படார்' என்பது இதற்கு மிகவும் பொருந்தும். ஒரு முறை பயிர் செய்தால், பல ஆண்டுகளுக்கு வருமானம் கொடுக்கக்கூடியது. ஆண்டு முழுவதும் மகசூல் கிடைப்பதால் விலை ஏற்ற இறக்கங்கள் சமன் செய்யப்பட்டு, உத்தரவாதமான லாபம் கிடைத்துவிடும். அதனால்தான் அண்மைக்காலமாகச் சம்பங்கிச் சாகுபடி செய்யும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.

பல்வேறு காரணங்களால் கடுமையான சவால்களைச் சந்திக்கும் பெரம்பலூர் மாவட்ட விவசாயிகளுக்கு நம்பிக்கை நட்சத்திரமாகக் கைகொடுக்கத் தொடங்கியிருக்கிறது சம்பங்கி. இதற்கு உதாரணமாகத் திகழ்கிறார் குன்னம் தாலுக்கா, பேரளியைச் சேர்ந்த கிருஷ்ணசாமி.

- அவர் நம்மிடம் பகிர்ந்த மகசூல் உத்திகளையும், வருவாய் விவரம் அனைத்தையும் பசுமை விகடன் இதழில் முழுமையாக வாசிக்க > 60 சென்ட்... ரூ.1,20,000 - சந்தோஷமான வருமானம் தரும் சம்பங்கி! https://www.vikatan.com/news/agriculture/good-income-from-sampangi-flower-cultivation

வேதியியலன்றி விவசாயம் செய்ய இயலுமா?

ஒருமுறை ரயில் பயணத்தின்போது ஜன்னல் வழியே வயல்வெளிக் காட்சிகளைப் பார்த்துக்கொண்டே வந்தார். 'கண்ணுக்கெட்டிய தொலைவு வரை புள்ளியாகத் தேய்ந்து மறையும் பச்சை. இயற்கையைவிடச் சிறந்த ஓவியம் இருக்க முடியுமா' என்று மனதில் தோன்றியது. மீண்டும் முழுநேர விவசாயியாக வயல்களில் உழைக்கத் தொடங்கினார். பல வருடங்கள் ஓடின. 1978-ம் ஆண்டு, நாற்பது வயதை நெருங்கிக் கொண்டிருந்த கவாகுசியின் உடல் களைத்துப்போனது. ''கல்லீரல் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது'' என்றார்கள் மருத்துவர்கள். மருந்து, மாத்திரைகள் எந்தவிதமான நிவாரணமும் தரவில்லை. பாரம்பர்ய சீன மருத்துவத்தை நாடிச் சென்றார். சீன வைத்தியர்கள் கவாகுசியின் கல்லீரலுக்குப் புத்துயிர் கொடுத்தனர். அப்படியே பேருண்மை ஒன்றையும் சொன்னார்கள்.

''எந்நேரமும் வயலில் தானே கிடக்கிறாய்... அங்கே நீ பயன்படுத்தும் பூச்சிக்கொல்லிகளும், ரசாயன உரங்களும், களைக்கொல்லிகளும்தான் உன் கல்லீரலும் உடலும் கெடுவதற்குக் காரணம். ஆம், அந்த வேதிப்பொருள்களும், அவை கலந்த உணவுமே உன்னை இந்த நிலைக்கு ஆளாக்கியிருக்கின்றன!''

சிறு, குறு விவசாயிகளின் அட்சயப் பாத்திரம்... சம்பங்கி சாகுபடி செய்வது எப்படி?

அடுத்த அதிர்ச்சியும் நிகழ்ந்தது. முதன்முறையாகக் கர்ப்பம் தரித்திருந்த கவாகுசியின் மனைவி வயிற்றில் கட்டி என்றார்கள். ''கட்டியை அகற்றியே ஆக வேண்டும். குழந்தை பிழைப்பது கடினம். கட்டியை எடுக்காவிட்டால் தாயும் பிழைப்பது கடினம்'' என்று மருத்துவர்கள் பயமுறுத்தினார்கள். 90 வயது நிரம்பிய மருத்துவச்சியிடம் தன் மனைவியை அழைத்துச் சென்றார். அந்த மருத்துவச்சி, பாரம்பர்ய சீன மருத்துவ முறைப்படி கட்டியைக் கரைத்தார். தாயையும் சேயையும் பிழைக்கச் செய்தார். பெண் குழந்தைக்குத் தகப்பன் ஆனார் கவாகுசி.

'இனி பாரம்பர்ய சீன வைத்தியம் தவிர வேறு பக்கம் ஒதுங்கவே மாட்டேன்' என்று முடிவெடுத்தார். ஆனால், தொழிலை என்ன செய்ய... விவசாயம் செய்வதையே நிறுத்தி விடலாமா... இயற்கை விவசாயத்துக்கு மாறலாமா... வேதியியலன்றி விவசாயம் செய்ய இயலுமா என்ன..?'

அடுத்த இரண்டு ஆண்டுகள் தன் நிலத்தில் அவர் எதையுமே பயிரிடவில்லை. எவையெல்லாம் தானாக வளருகின்றனவோ, அவையெல்லாம் அப்படி அப்படியே வளரட்டும் என்று வேடிக்கை மட்டும் பார்த்துக்கொண்டிருந்தார். தன் உடலைப்போல நிலமும் இயற்கையாக மீண்டு வரட்டும் என்று காத்திருந்தார்.

அதன்பின்..?

- பசுமை விகடன் இதழ் தொடரில் முழுமையாக வாசிக்க > மாண்புமிகு விவசாயிகள்! - சாதனை விவசாயிகளின் சரித்திரம்! - 2 https://www.vikatan.com/news/agriculture/honouring-the-farmers-who-are-achievers-march-10

சிறப்புச் சலுகை > விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 2006 முதல் இப்போது வரை வெளிவந்த லட்சக்கணக்கான கட்டுரைகளையும் வாசிக்கலாம். ஒரேநேரத்தில் 5 டிவைஸ் வரை லாகின் செய்யும் வசதியும் உண்டு. உங்களுக்காக இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9

அடுத்த கட்டுரைக்கு