Published:Updated:

``உடனடியாக வருமானம் கிடைக்காதுதான், ஆனா..." - சந்தன மரச் சாகுபடி அனுபவம்

சந்தன மரச் சாகுபடி
சந்தன மரச் சாகுபடி

20 சதவிகித நிர்வாகச் செலவு எடுத்துக்குவாங்க. மீதி 80 சதவிகிதம் நம்மகிட்ட கொடுப்பாங்க. கடைசியில் கையில் குறைஞ்சது 8 கோடி ரூபாய் நிக்கும்” என்றார்.

பருவநிலை மாற்றம், தண்ணீர்ப் பிரச்னை, விவசாயப் பொருள்களுக்குரிய விலை கிடைக்காதது என இன்றைய சூழலில் விவசாயம் செய்வதே பெரும் சவாலாக இருக்கிறது.

இந்த நிலையில், ஈரோட்டைச் சேர்ந்த விவசாயி தங்கவேல் அதிக ஆட்கள் தேவைப்படாத, பராமரிப்பு செலவில்லாத, சந்தனம், செஞ்சந்தன மரங்களைச் சாகுபடி செய்துவருகிறார்.

''சந்தனம், செம்மரம் ரெண்டிலும் உடனடியாக வருமானம் கிடைக்காதுதான். ஆனா, பிற்காலத்துல நல்ல லாபம் கிடைக்கும்னு செய்யறோம். சந்தன மரத்தை வளர்க்க இப்போ எந்தப் பிரச்னையுமில்லை.

``உடனடியாக வருமானம் கிடைக்காதுதான், ஆனா..." - சந்தன மரச் சாகுபடி அனுபவம்

இன்னும் 10 வருஷத்துக்கு மேலதான் பாதுகாப்பை வலுவாகச் செய்யணும். நான் இப்பவே ரெண்டடுக்கு முள் வேலியும், கம்பி வேலியும் போட்டு, பாதுகாப்பு செஞ்சி வெச்சிருக்கேன். சந்தன நாற்று, குழியெடுத்தது, நடவு, சொட்டுநீர்க் குழாய் எல்லாம் சேர்த்து 60,000 செலவாச்சு. ரெண்டு வருஷத்துக்கு ஒரு தடவை பராமரிப்புச் செலவு 10,000 ஆகுது.

அஞ்சு வருஷத்துக்கு ஒரு தடவை சொட்டுநீர்க் குழாய் மாத்தணும். அதுக்கு 30,000 ரூபாய் செலவாகும். 1,200 சந்தன மரம் நட்டதுல இப்போ 1,000 மரங்கள்தான் இருக்கு. 30 வருஷத்துக்குப் பிறகுதான் சந்தன மரம் வாசம் வீசும்; அதுக்கு மதிப்பும் கிடைக்கும். சந்தன மரத்துக்குள்ள இருக்கிற கட்டைக்குத்தான் மதிப்பு.

ஒரு மரத்துல குறைஞ்சபட்சம் எட்டு கிலோ கட்டை கிடைக்கும். அந்த வகையில், என் நிலத்துல இருந்து குறைஞ்சது 7,500 கிலோ சந்தனக் கட்டை கிடைக்கும்.

``உடனடியாக வருமானம் கிடைக்காதுதான், ஆனா..." - சந்தன மரச் சாகுபடி அனுபவம்

இன்னைக்கு சந்தனக் கட்டையோட விலை ஒரு கிலோ 14 ஆயிரம் ரூபாய். இன்னும் 20 வருஷம் கழிச்சு, இதே விலைக்கு வித்தாலும்கூட, குறைஞ்சது 10 கோடி ரூபாய் கிடைக்கும்.

வனத்துறையினர் தான் சந்தன மரத்தை அறுத்து, டெண்டர் விட்டு, விற்பனை செஞ்சு தருவாங்க. அதுக்கு அவங்க 20 சதவிகித நிர்வாகச் செலவு எடுத்துக்குவாங்க. மீதி 80 சதவிகிதம் நம்மகிட்ட கொடுப்பாங்க. கடைசியில் கையில் குறைஞ்சது 8 கோடி ரூபாய் நிக்கும்” என்றார்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை தாலுக்கா, மூணாம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தங்கவேல் - பழனியம்மாள் தம்பதி. பெருந்துறை - கோயம்புத்தூர் புறவழிச்சாலையிலிருந்து கீழே இறங்கிச் செல்லும் சாலையில், 'குளு குளு' வென்று வீசும் காற்றைக் கடந்து தங்கவேலின் தோட்டத்தைச் சென்றடைந்தோம். `தோட்டம்' என்று சொல்வதைவிட, `அழகிய பண்ணை' என்றே சொல்லலாம்.

``உடனடியாக வருமானம் கிடைக்காதுதான், ஆனா..." - சந்தன மரச் சாகுபடி அனுபவம்

அழகாக ஒரு சின்ன ஓட்டு வீடு, 'கொக்... கொக்...' என ஒலியெழுப்பியபடி மேயும் கோழிகள், புல்வெளியில் குனிந்து மேயும் ஆடுகள், நாட்டு மாடுகள் என இந்த ரம்மியமான சூழலுக்குப் பின்னால் நீண்ட கதை உண்டு. அதை முழுமையாக பசுமை விகடன் இதழில் வாசிக்க > சந்தனமரச் சாகுபடி - வங்கியிலிருக்கும் வைப்புநிதி! click here https://bit.ly/3c6Eu6E

சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி அவள் கிச்சன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு