Published:Updated:

சட்டம்: வேளாண்மை அலுவலர் உங்கள் கிராமத்துக்கு வரவில்லையா?

சட்டம்
பிரீமியம் ஸ்டோரி
News
சட்டம்

சட்டப்பஞ்சாயத்து வழிகாட்டும் தொடர்...12

ருவாய்த் துறையைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள், மக்களுக்கு அருகிலிருந்து எப்படிப் பணி செய்து வருகிறார்களோ… அதேபோல, விவசாயிகளின் அருகிலிருந்து பணிபுரிபவர்கள்தாம் வேளாண்மைத் துறையைச் சேர்ந்த ‘வேளாண்மை உதவி அலுவலர்கள்’ (AAO-Assistant Agriculture Officer). முன்பு இவர்கள், ‘வேளாண் விரிவாக்கப் பணியாளர்கள்’ என அழைக்கப்பட்டார்கள். வேளாண்மை உதவி அலுவலரின் பணிகள் மற்றும் கடமைகளை இந்த இதழில் பார்ப்போம்.

வேளாண்மைத் துறையின் முக்கிய நோக்கம் விளைபொருள்களின் உற்பத்தியைப் பெருக்கி, விவசாயிகளின் வருமானத்தைக் கூட்டுவதுதான். வேளாண் உற்பத்தியைப் பெருக்கும் வகையில், வேளாண்மை உதவி அலுவலர்கள் விவசாயிகளின் அருகிலிருந்து உதவிகள் மற்றும் ஆலோசனைகளை வழங்க வேண்டும். தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வட்டாரத்துக்கும் (ஒன்றியம்) 6 வேளாண்மை உதவி அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

சட்டம்: வேளாண்மை அலுவலர் உங்கள் கிராமத்துக்கு வரவில்லையா?

ஒவ்வொரு வேளாண்மை உதவி அலுவலருக்கும் 8-16 வருவாய் கிராமங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கிராமத்துக்கும் குறைந்தபட்சம் மாதம் இருமுறை (ஒரு வாரம் விட்டு ஒரு வாரம்) வேளாண்மை உதவி அலுவலர்கள் சென்று விவசாயிகளைச் சந்திக்க வேண்டும். திங்கள்கிழமை முதல் வியாழக்கிழமை வரை வேளாண்மை உதவி அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கிராமங்களுக்குச் சென்று… புதிய வேளாண் தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்குச் சொல்வதோடு, செயல் விளக்கமும் அளிக்க வேண்டும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வட்டாரத்துக்கும் (ஒன்றியம்) 6 வேளாண்மை உதவி அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆய்வுக்கூட்டத்தில் விவசாயிகளுக்குக் கொடுத்த ஆலோசனைகள் குறித்து வேளாண்மை அலுவலர் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

புது ரக விதைகளை விவசாயிகளிடம் சேர்ப்பது, நோய்கள் மற்றும் பூச்சிகள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் முறைகளைச் சொல்லித்தருவது, மருந்துகள் மற்றும் பூச்சிக்கொல்லிகளைப் பரிந்துரை செய்வது, அரசின் விற்பனை நிலையங்களில் உள்ள இடுபொருள்களின் இருப்பு குறித்து விவசாயிகளுக்குத் தகவல் தெரிவிப்பது, பண்ணைக் கருவிகள் குறித்துத் தகவல் தெரிவிப்பது, சந்தை நிலவரம் குறித்து விளக்குவது உள்ளிட்ட பல பணிகளை இவர்கள் மேற்கொள்ள வேண்டும். திருந்திய நெல் சாகுபடி, திருந்திய பயறுச் சாகுபடி, முழுக் கிராம திட்ட அணுகுமுறை, மண்வள அட்டை விநியோகம், பயிர் அறுவடை பரிசோதனை, காப்பீட்டுத் திட்டம், பயிர் விளைச்சல் போட்டி போன்றவை குறித்தும் விவசாயிகளுக்குத் தகவல் அளிக்க வேண்டும்.

வாராவாரம் வெள்ளிக்கிழமை அன்று, வட்டார அலுவலகத்தில் நடைபெறும் ஆய்வுக்கூட்டத்தில் விவசாயிகளுக்குக் கொடுத்த ஆலோசனைகள் குறித்து வேளாண்மை அலுவலர் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். அக்கூட்டத்தில் அடுத்த வாரம் விவசாயிகளுக்குக் கொண்டு சேர்க்கவேண்டிய திட்டங்கள், ஆலோசனைகள் போன்றவை குறித்து வேளாண்மை உதவி அலுவலர்களுக்குச் சொல்வார்கள்.

‘‘கடன், மானியம், இடுபொருள், விவசாய உபகரணங்கள் பெறுவதில், உதவிகள் தேவையெனில் வேளாண்மை உதவி அலுவலரை உங்கள் கிராமத்திலேயே சந்தித்து விளக்கம் பெற முடியும்.’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வேளாண்மை உதவி அலுவலர்களை மேற்பார்வை செய்ய, வட்டார அளவில் வேளாண்மை துணை அலுவலர்கள் மற்றும் வேளாண்மை அலுவலர்கள் இருப்பார்கள். மாவட்ட அளவில் வேளாண்மை துணை இயக்குநர் மற்றும் வேளாண்மை இணை இயக்குநர் ஆகியோர் இருப்பார்கள். நெல் உற்பத்தியாளர்கள் குழு, உளுந்து உற்பத்தியாளர்கள் குழு எனத் திட்டங்கள் சார்ந்து உருவாக்கப்பட்ட குழுக்கள் ஏற்கெனவே இருந்தன. இந்நிலையில் வேளாண்மை உதவி அலுவலரின் பணிப் பொறுப்பை மேலும் உறுதி செய்ய வேண்டும் என்ற நோக்கில் 2 ஆண்டுகளுக்கு முன், பயிர் ஆர்வலர் குழுக்கள் உருவாக்கப்பட்டன. ஒவ்வொரு குழுவிலும் சொந்தமாக நிலம் வைத்திருக்கும் ஒத்த கருத்துள்ள 20 விவசாயிகள் சேர்க்கப்படுவார்கள். இவர்களில் தலைவர், செயலாளர், பொருளாளர் போன்றோர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

சட்டம்: வேளாண்மை அலுவலர் உங்கள் கிராமத்துக்கு வரவில்லையா?

இதேபோல் ஒரு வருவாய் கிராமத்துக்கு 5 பயிர் ஆர்வலர் குழுக்கள் உருவாக்கப்படுகின்றன. ஒவ்வொரு பயிர் ஆர்வலர் குழுவிலிருந்தும் 4 பேர் வீதம், மொத்தம் ஐந்து குழுவிலிருந்து 20 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு ‘பயிர் உற்பத்தியாளர் குழு’ உருவாக்கப்படுகிறது. அதில் தலைவர், செயலாளர், பொருளாளர் போன்றோர் தேர்ந்தெடுக்கப்பட்டு, மாவட்டப் பதிவாளர் அலுவலகத்தில் குழு பதிவு செய்யப்படும்.

5 பயிர் ஆர்வலர்கள் குழுவில் உள்ள மொத்தம் நூறு பேரிடம் தேவைக்கேற்ப 1,000 ரூபாய் முதல் 2,000 ரூபாய் வரை குழு நிதியாகப் பெறப்பட்டு… பதிவு செய்யப்பட்ட பயிர் உற்பத்தியாளர்கள் குழுவின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். பதிவு செய்யப்பட்ட உற்பத்தியாளர்கள் குழுவுக்கு அரசு சார்பில்... 5,00,000 ரூபாய் நிதி உதவி செய்யப்படும். இத்துடன் விவசாயிகளிடம் பெறப்பட்ட குழு நிதியையும் சேர்த்து டிராக்டர் வாங்கப்படும். இந்த டிராக்டருக்குக் குழுவில் உள்ள நூறு பேரும் உரிமையாளர்கள் ஆவர். இந்த டிராக்டர் மூலம் விவசாயிகள், தங்களின் சொந்த நிலங்களுக்கு உழவு செய்தது போக, மீதி நேரங்களில் மற்ற விவசாயிகளுக்கு வாடகைக்கு விட்டு வருமானம் ஈட்டலாம். இதேபோல, விவசாயத்துக்குத் தேவைப்படும் உபகரணங்களை வாங்கிக்கொள்ளலாம்.

இந்த முக்கியப் பணியை உதவி வேளாண்மை அலுவலர்கள்தாம் விவசாயிகளுக்குச் செய்து தர வேண்டும். கிராமத்தில் இதுபோலக் குழுவை உருவாக்க, அருகிலுள்ள கிராம உதவி வேளாண்மை அலுவலரை அணுகுங்கள். பயிர் உற்பத்தியாளர் குழுவை ஒவ்வொரு கிராமத்திலும் உருவாக்கிப் பயன் பெறுங்கள். அரசின் அறிவிப்புக்கு ஏற்ப கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நிதி ஒதுக்கப்படும்.

கடன், மானியம், இடுபொருள், விவசாய உபகரணங்கள் பெறுவதில், உதவிகள் தேவையெனில் வேளாண்மை உதவி அலுவலரை விவசாயிகள், தங்களின் கிராமத்திலேயே சந்தித்து விளக்கம் பெற முடியும். கிராமத்துக்கு வேளாண்மை உதவி அலுவலர் வரவேண்டுமென்றால் தமிழக வேளாண்மைத் துறையால் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் உழவன் செயலியில் உதவி வேளாண்மை அலுவலர்களின் தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைவைத்துத் தொடர்புகொள்ள முடியும். வேளாண்மை அலுவலர் வரவில்லையென்றால் அந்தப் பகுதி வட்டார வேளாண்மை அலுவலரிடமோ, மாவட்ட வேளாண்மை இணை இயக்குநரிடமோ புகார் செய்யலாம்.

மேலும் விவரங்களுக்குச் சட்டப்பஞ்சாயத்து உதவி மையத்தை 76671 00100 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்.

-வழிகாட்டல் தொடரும்