Published:Updated:

சட்டம் : கிராம நிர்வாக அலுவலர்கள் விவசாயிகளுக்கு உதவ வேண்டும்!

சட்டம்
பிரீமியம் ஸ்டோரி
News
சட்டம்

சட்டப்பஞ்சாயத்து வழிகாட்டும் தொடர்... - 18

விவசாயிகளுக்கு அருகிலிருந்து விவசாய வளர்ச்சிக்கு வழிகாட்டுபவர்கள் வேளாண்மை உதவி அலுவலர்கள். அதேபோல் விவசாயிகள் அரசின் திட்டங்களைப் பெற, சான்றுகள் கொடுத்து சேவை செய்துவருபவர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள். இவர்களின் பணிகள், கடமைகள், விவசாயிகளுக்கு இவர்கள் செய்துவரும் சேவைகள்குறித்து இந்த இதழில் பார்க்கலாம். கிராம நிர்வாக அலுவலர்கள் மக்களின் அருகிலிருந்து பணியாற்ற வேண்டியவர்கள். அதனால்தான், `வேலை செய்யும் கிராமத்தில் தங்கியிருந்து பணியாற்ற வேண்டும்’ என்ற விதிமுறையின் அடிப்படையில் கிராம நிர்வாக அலுவலர்கள் பணியில் சேர்க்கப்படுகிறார்கள். இவர்கள், 24 வகை முக்கியமான கணக்குகளைப் பராமரித்துவருகிறார்கள்.

சட்டம் : கிராம நிர்வாக அலுவலர்கள் விவசாயிகளுக்கு உதவ வேண்டும்!

கிராமக் கணக்குகளைப் பராமரித்தல் மற்றும் பயிராய்வு செய்தல். நிலவரிக் கடன்கள், அபிவிருத்தி வரி மற்றும் அரசுக்குச் சேர வேண்டிய தொகைகளை வசூலித்தல். சாதிச் சான்று, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று, சொத்து மதிப்புச் சான்று போன்றவற்றை வழங்குவது குறித்து அறிக்கை அனுப்புதல். பொதுமக்களுக்கு வங்கிகள் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களிடமிருந்து கடன்கள் பெறுவதற்குச் சிட்டா மற்றும் அடங்கல்களின் நகல்களை வழங்குதல். பிறப்பு மற்றும் இறப்புப் பதிவேடுகளைப் பராமரித்தல். தீ விபத்து, வெள்ளம், புயல் போன்ற இயற்கைப் பேரிடர்களின்போது உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்புதல். இயற்கைப் பேரிடர்களின்போது ஏற்பட்ட இழப்புகளை வருவாய் ஆய்வாளர் மதிப்பீடு செய்யும்போது உதவி செய்தல். கொலை, தற்கொலை மற்றும் அசாதாரண மரணங்கள் குறித்து காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தல் மற்றும் விசாரணைக்கு உதவி புரிதல். காலரா, பிளேக் உள்ளிட்ட நோய்கள் மற்றும் கால்நடைத் தொற்று நோய்கள் குறித்து அரசுக்கு அறிக்கை அனுப்புதல். இருப்புப் பாதை கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்தல். கிராம ஊழியர்களின் சம்பளப் பட்டியலைத் தயாரித்தல். கால்நடைப் பட்டியல் மற்றும் சாவடிகளின் கணக்குகளைப் பராமரித்தல். கட்டடங்கள், மரங்கள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களைப் பாதுகாத்தல். புதையல்கள் குறித்து மேலதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தல். முதியோர் ஓய்வூதியம் வழங்குவது குறித்த பணிகளை கவனித்தல். பொதுச் சொத்துகள் குறித்தப் பதிவேடுகளைப் பராமரித்தல். முதியோர் ஓய்வூதிய பதிவேட்டைப் பராமரித்தல். வளர்ச்சிப் பணிகள் வெற்றிகரமாக நடைபெற, சேவை நிறுவனங்களுக்குத் தேவையான விவரங்களை அளித்தல் மற்றும் ஒத்துழைப்புத் தருதல். உழவர்கள் நிலப் பட்டாக்களை மாறுதல் செய்து பெறவும், புலங்களை உட்பிரிவு செய்துகொள்ளவும், தனிப் பட்டாக்களைப் பெற இயலும் வகையில் நிலப் பதிவேடு, நில அளவை ஆவணங்கள் தொடர்பாகக் கணக்குகளை முறையாகவும் சரியாகவும் வைத்து வருதல். பாசன வாய்க்கால்களை முறையாகப் பராமரித்தல், ஏரிகளிலும், நீர் வழங்கு பாசனக் கால்வாய்களிலும் ஆக்கிரமிப்புகளில்லாமல் பார்த்துக்கொள்வதன் மூலம் நீர்ப்பாசனத்துக்கு வகை செய்தல். சட்டம் ஒழுங்கு பேணுதல், உரிய நேரத்தில் நடவடிக்கை எடுப்பதன் மூலம் குற்றங்களைத் தடுத்தல், குற்ற நிகழ்வுகள் நடந்தவுடன் அவை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தகவல் அனுப்புதல். நிலச்சீர்திருத்தச் சட்டங்கள் தொடர்பாக முறையான நடவடிக்கைகள் எடுத்தல். துப்புரவுப் பணிகளை முறையாகப் பேணுதல். அரசாங்கம் அவ்வப்போது தொடங்கும் ஏனைய நலத் திட்டங்கள் முதலியவற்றை நடைமுறைப்படுத்த அளிக்கப்படும் பணிகளை நிறைவேற்றல். கள்ளச்சாராயம் காய்ச்சுவோர் பட்டியலைத் தயாரித்து வருவாய் அலுவலர்கள் மற்றும் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தல் போன்றவை.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
சட்டம் : கிராம நிர்வாக அலுவலர்கள் விவசாயிகளுக்கு உதவ வேண்டும்!

மேலே சொன்னவை தவிர வரக்கூடிய அனைத்துக் கணக்குகளும் `பூஜ்ஜியக் கணக்குகள்’ என வகைப்படுத்தப் பட்டுள்ளன. அகதிகள் பதிவேடு, கல் பதிவேடு, சந்தன மரப் பதிவேடு, செம்மரப் பதிவேடு உள்ளிட்டவை பூஜ்ஜியக் கணக்கில் எழுதப்படுகின்றன. மேற்கண்ட கணக்குகளை, கிராம நிர்வாக அலுவலர்கள் பராமரித்து வருகிறார்கள். கிராம நிர்வாக அலுவலர்கள் பராமரித்துவரும் கணக்குகளை ஒவ்வோர் ஆண்டும் மே, ஜூன் மாதங்களில் நடக்கும் ஜமாபந்தியில் மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர், வட்டாட்சியர் ஆய்வுசெய்வார்கள். கிராம நிர்வாக அலுவலர்கள் இது போன்ற முக்கியப் பணிகளைச் செய்ய வேண்யிருப்பதால்தான், அந்தந்த கிராமத்தில் தங்கிப் பணியாற்ற வேண்டும் என்ற விதிமுறை வகுக்கப் பட்டிருக்கிறது.

சிவ.இளங்கோ
சிவ.இளங்கோ

விவசாயிகளுக்கு, கிராம நிர்வாக அலுவலர்கள் `அடங்கல்’ வழங்குகிறார்கள். கிராம நிர்வாக அலுவலர்கள் பராமரிக்கும் கணக்குகளில் `அடங்கல்’, மிக முக்கியக் கணக்காகப் பார்க்கப்படுகிறது. கிராமத்திலுள்ள அனைத்து புல எண்களிலும் என்னென்ன இருக்கின்றன என்ற விவரங்கள் அடங்கலில் எழுதப்படுகின்றன. விவசாயம் செய்யப்பட்டிருந்தால், ஒவ்வொரு புல எண்ணிலும் என்னென்ன விவசாயம் செய்யப்பட்டிருக்கிறது என்ற விவரம் எழுதப்பட வேண்டும். மேலும் பயிரின் வகைகள், அதன் வயது உள்ளிட்ட விவரங்கள் அதிலிருக்க வேண்டும். வீடு, என்ன வகை வீடு, கடை, கோயில், மருத்துவமனை, பள்ளிக்கூடம், காவல் நிலையம், பேருந்து நிலையம் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் புல எண்கள்வாரியாக விவரங்கள் எழுதப்பட வேண்டும். கிராம நிர்வாக அலுவலரிடம் விவசாயிகள் `அடங்கல்’ கேட்கும்போது இவற்றைப் பார்த்து, `அடங்கல்’ சான்று எழுதிக் கொடுக்கப்படுகிறது. இதேபோல் நத்தம் சிட்டா சான்று, சொட்டுநீர்ப் பாசனம் பெற விவசாயச் சான்று, இலவச மின் இணைப்பு பெறச் சான்று, உர மானியம் பெற விவசாயச் சான்று உள்ளிட்ட சான்றுகள் கிராம நிர்வாக அலுவலரால் விவசாயிகளுக்குக் வழங்கப்படுகிறது.

கிராம நிர்வாக அலுவலர்கள் 24 வகையான கணக்குகளைப் பராமரித்துவருகிறார்கள். கிராம நிர்வாக அலுவலர்கள், பணியாற்றும் கிராமத்தில் தங்கியிருந்து வேலை செய்ய வேண்டும்.

பெரும்பாலான கிராம நிர்வாக அலுவலர்கள் பணியாற்றும் வருவாய் கிராமத்தில் தங்குவதில்லை. சட்ட விதிமுறைப்படி, பணியாற்றும் கிராமத்தில் தங்கியிருக்க வேண்டும் என மதுரை உயர் நீதிமன்றக் கிளையின் உத்தரவும் இருக்கிறது. உங்கள் ஊர் கிராம நிர்வாக அலுவலர் சட்டத்தையும் உயர் நீதிமன்ற உத்தரவையும் மதிக்காமல் கிராமத்தில் தங்கிப் பணிபுரியவில்லை எனில் வட்டாட்சியர், கோட்டாட்சியரிடம், மாவட்ட ஆட்சியரிடம் புகார் செய்யவும். சான்றுகள் கொடுக்க லஞ்சம் கேட்டாலும் புகார் செய்யலாம். மேலும் விவரங்களுக்குச் சட்டப் பஞ்சாயத்து இயக்க உதவி மையத்தை 7667-100-100 என்ற எண்ணில் தொடர்புகொள்ளவும்.

-பஞ்சாயத்து தொடரும்