Published:Updated:

ஏக்கருக்கு 100 டன்... உயர் விளைச்சல் தரும் சவுக்கு சாகுபடி!

பயிற்சி
பிரீமியம் ஸ்டோரி
News
பயிற்சி

பயிற்சி

சுமை விகடன் விவசாயம் சார்ந்து பல பயிற்சிகளை வழங்கி வருகிறது. கொரோனா காலத்திலும் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்க நேரலை (ஆன்லைன்) பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன் தொடர்ச்சியாகப் பசுமை விகடன் மற்றும் கோவையில் உள்ள வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனமும் இணைந்து கடந்த ஜூன் 5-ம் தேதி காலை 10 மணி முதல் 11 மணிவரை ‘உயர் விளைச்சல் தரும் புதிய சவுக்கு ரகங்கள்’ என்ற தலைப்பில் ஆன்லைன் பயிற்சியை நடத்தின.

பயிற்சி
பயிற்சி

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

‘‘எங்கள் நிறுவனத்தின் தொழில்நுட்பங்களை நிறுவனம் சார்ந்த நிலையிலிருந்து மின்னணு தளங்களுக்கு மாற்றவேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம். பல்வேறு தலைப்புகளில் ஆவணப்படங்கள், குறும்படங்கள் போன்றவை இந்நேரத்தில் சமூக ஊடகங்கள் வழியாக கடைக்கோடி விவசாயிக்கும் சென்று சேரும். ICFE-NFRP விரிவாக்க திட்டத்தின் மூலம் எங்கள் துறை சார்பில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். அதன்படி, ‘தமிழக மரச்சாகுபடியாளர் மற்றும் பயனாளர்களுக்கு மின்னணு செயல்தளத்தை உருவாக்கி பரவலாக்குதல்’ எனும் செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நிகழ்வை பசுமை விகடன் இதழுடன் இணைந்து நடத்துவதில் மகிழ்ச்சி அடைக்கிறோம்’’ என தொடக்கவுரையாற்றினார் இந்த விரிவாக்க திட்டத்தின் நிர்வாகக் குழு தலைவரும், வன விரிவாக்கத்துறை தலைவருமான ராஜேஷ் கோபாலன், இ.வ.ப

. இப்பயிற்சியில் ‘உயர் விளைச்சல் தரும் புதிய சவுக்கு ரகங்கள்’ என்ற தலைப்பில் சவுக்குச் சாகுபடியில் அதிக மகசூல் தரும் சவுக்கு ரகங்கள், நாற்றுகள் கிடைக்குமிடம், விற்பனை மற்றும் சந்தை வாய்ப்புகள் குறித்துப் பேசினார், மரம் வளர்ப்பு விஞ்ஞானி ஏ.நிக்கோடிமஸ்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

“இன்றைய காலகட்டத்தில் குறைந்த கால அளவில் ஒரு மரத்தை வளர்த்து அதிகமாகப் பயன்பெற முடியுமென்றால் அது சவுக்கு மரச் சாகுபடியாகத்தான் இருக்கும். சவுக்கு மரத்தை இரண்டு ஆண்டுகள் முதலே அறுவடை செய்யலாம். வேறு எந்த மரப் பயிரையும் அறுவடை செய்ய முடியாது. மண்ணின் வளத்தைப் பாதுகாக்க இந்த மரம் பயன்படுகிறது. இதற்குக் குறைந்த ஆள் மற்றும் குறைந்த தண்ணீரே போதுமானது. சவுக்கு மரத்துக்கு என்றும் நியாயமான ஒரு விலை இருந்து கொண்டுதான் இருக்கிறது. புதிதாக சவுக்குச் சாகுபடி செய்பவர்கள்கூடத் தயங்காமல் சவுக்கை நடலாம். சவுக்கு மகசூலைப் பொறுத்தவரை மூன்று பகுதிகளில் மூன்று விதமான மகசூல் கிடைக்கிறது. நல்ல மழையும் நல்ல மண்வளமும் இருக்கும் கடலோரப் பகுதிகளில் ஏக்கருக்கு 100 டன் வரை கிடைக்கும். மிதமான மழைப்பொழிவு, மண்வளம் மற்றும் பாசனப் பகுதிகளில் ஏக்கருக்கு 75 டன் வரை கிடைக்கும். இறுதியாகக் குறைந்த மண்வளம் மற்றும் குறைவான மழைப்பொழிவு கொண்ட பகுதிகளில் 50 டன் வரை சவுக்கு மகசூல் கிடைக்கும். 50 டன் மகசூல் என்றாலே சவுக்கில் நல்ல லாபம்தான். தேர்வு செய்யும் ரகம், சரியான நடவு இடைவெளி, களை மேலாண்மை, நீர்ப் பாசனம், முறையான பராமரிப்பு ஆகிய ஐந்து வழிகளைக் கையாண்டால் சவுக்கில் நிச்சயம் நல்ல மகசூல் எடுக்கலாம்.

நேரலையில் நிக்கோடிமஸ்
நேரலையில் நிக்கோடிமஸ்

வீரிய ரகமான CJ-9 ஜூங்குனியானா, அதிக வறட்சியைத் தாங்கும்; நோய் எதிர்ப்பு சக்தி அதிகம்; மானாவாரிக்கு ஏற்றது; அனைத்து மண் வகைகளிலும் வளரும் எனப் பல பண்புகளைக் கொண்டது. CHI-1, 2, 5 கலப்பின ரகங்கள், களிமண் தவிர மற்ற அனைத்து மண் வகைகளிலும் வளரும். நான்கு ஆண்டுகளில் அறுவடை செய்யும் ரகங்களை, 5 அடி நீளம், 5 அடி அகலம் என்ற இடைவெளியிலும், மூன்று ஆண்டுகளில் அறுவடை செய்யும் ரகத்தை 4 அடி நீளம், 4 அடி அகலம் என்ற இடைவெளியிலும் நடவு செய்யலாம். இடைவெளிவிட்டு நடவு செய்தபிறகு, முதல் 6 ஆண்டுகளுக்குக் களை மேலாண்மை அவசியம். அடிக்கடி களை எடுத்துவிட வேண்டும். சவுக்கில் மணிலா, உளுந்து போன்ற ஊடுபயிர்களும் சாகுபடி செய்யலாம். மண்ணின் தன்மைக்கு ஏற்ப அளவான உரமும் தண்ணீரும் கொடுத்தால் போதுமானது. களிமண் பாங்கான நிலங்களில் அதிக தண்ணீர் ஊற்றுவது பயிருக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஊடுபயிராக மிளகாய், தக்காளி போன்றவற்றைப் பயிர் செய்த நிலங்களில் சவுக்கில் நோய்வாய்ப்பட வாய்ப்பு உண்டு. அறுவடைக் காலத்தைப் பொறுத்தவரை, குறித்த கால அளவில் அறுவடை செய்துவிட்டு, அடுத்த பயிருக்குச் செல்வது நல்லது. விவசாயிகள், தங்கள் கட்டைகளை ‘சைகஸ்’ (CYCUS) என்ற செயலிமூலம் தாங்களே மதிப்பீடு செய்யலாம். காகித ஆலைகளின் கள அலுவலர்கள், வேளாண் பல்கலைக்கழகச் சந்தை மூலமாகவும் ஆலோசனை பெறலாம். கூழ்மரக் கட்டைகளின் தேவை 2020 முதல் அதிகரிக்க இருப்பதால், தற்போது பயிரிடும் மரங்கள் விற்பனையில் பிரச்னை இருக்காது. தற்போதைய விலை டன்னுக்கு ரூ.3,700 முதல் ரூ.5,500 வரை இருக்கிறது” என்றவர், நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வாசகர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

பயிற்சி
பயிற்சி

நிறைவுரையாற்றிய வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தின் இயக்குநர் செந்தில்குமார், இ.வ.ப,. “மரம் வளர்ப்பு என்பது வங்கியில் போட்டு வைத்திருக்கும் சேமிப்புப் பணம் போன்றது. எப்போதுமே நமது கையில் ஒரு தொகை இருப்பது போன்றது. எங்கள் நிறுவனம் மூலமாக மரம் வளர்ப்பு தொடர்பான பல்வேறு விதமான பயிற்சிகளைக் கொடுத்துக்கொண்டிருக்கிறோம். மரம் வளர்ப்பு சம்பந்தமாக விவசாயிகள் எப்போதும் எங்களை அணுகலாம். வரும் 12-ம் தேதி ‘வருமானம் செழிக்க வேளாண் காடு வளர்ப்பு’, 19-ம் தேதி ‘குமிழ் மரச் சாகுபடியில் குறைவில்லா வருமானம்’, 26-ம் தேதி ‘கைமேல் காசு தரும் கடம்ப மரச் சாகுபடி’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன’’ என்றார்.

சவுக்கு சாகுபடி கேள்வியும் பதிலும்!

“தென்னைக்கு உயிர்வேலியாக சவுக்குப் பயிரிடலாமா?”

‘‘தென்னை பலன் கொடுக்கும் பருவத்திலிருந்தால் சவுக்கு நடுவதைத் தவிர்க்கலாம். ஏனெனில், சவுக்கு அவ்வளவு வீரியமாக வளராது. தென்னை நடவு செய்த ஆரம்பகட்டத்தில் அதனுடன் சவுக்குப் பயிரிட்டால் சவுக்கு வளர்ச்சி நன்றாக இருக்கும்.

“உயர் ரக சவுக்கு நாற்றுகள் எங்கு கிடைக்கும்?”

‘‘எங்கள் நிறுவனத்திலேயே கன்றுகள் தருகிறோம். தனியார் நாற்றுப் பண்ணையாளர்களுக்கு நாங்கள் உரிமம் கொடுத்திருக்கிறோம். அதை எங்கள் வலைதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.’’

“எந்தெந்த மண் வகைகளுக்கு சவுக்கு ஏற்றது?”

‘‘மணற்பாங்கான அனைத்து மண் வகைகளுக்கும் சவுக்கு ஏற்றது. உதாரணமாக மானாவாரி நிலங்களிலும், களர், உவர் நிலங்களிலும் CJ-9 என்கிற ஜூங்குனியானா என்ற ரகத்தைப் பயிரிடலாம்.’’

“சவுக்குக்கு இருக்கும் தேவை மற்றும் சந்தை வாய்ப்பு பற்றிச் சொல்லவும்?”

‘‘கூழ் மரங்கள், கம்பங்கள் ஆகியவற்றுக்குத்தான் சவுக்கு மரங்கள் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கம்பங்கள் கட்டுமானப் பணிக்கும், கூழ் மரங்கள் காகிதம் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன. இரண்டுக்கும் போக மீதம் இருப்பது விறகுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. வருடத்துக்கு 10 லட்சம் டன் சவுக்கு மரங்களுக்கான தேவை தமிழ்நாட்டில் இருக்கிறது. அதனால் தாராளமாக சவுக்குப் பயிரிடலாம்.’’

“ஊடுபயிராக என்னென்ன பயிர்கள் வளர்க்கலாம்?”

‘‘சவுக்கு ஓராண்டு பயிராக இருக்கும்போது வேளாண்மைப் பயிர்களில் குறிப்பாக, நிலக்கடலையை ஊடுபயிராக வளர்க்கலாம். மணற்பாங்கான நிலங்களில் தர்ப்பூசணியும், செம்மண்ணில் எண்ணெய் வித்துப் பயிரான எள்ளையும், கடின மண்ணில் பயறு வகைகளையும் ஊடுபயிராகப் பயிரிடலாம்.’’

“மண்ணின் தன்மை எவ்வாறு இருக்க வேண்டும்?”

‘‘சவுக்கு மணல் சார்ந்த பகுதிகளிலும் கடற்கரை மண் உள்ள பகுதிகளிலும் நன்கு வளரும். கடற்கரை அல்லாத உள்நாட்டுப் பகுதிகளில் நல்ல வடிகால் அமைப்புள்ள மண் வகைகளில் நன்கு வளரும். மணல் கலந்த செம்மண், உப்பு மண், சுண்ணாம்பு மற்றும் அமில மண் பகுதிகளில் வளரும். இம்மரத்தின் வேர் முடிச்சுகளில் நைட்ரஜனைத் தக்கவைக்கும் திறன் உள்ளதால் நைட்ரஜன் அதிகம் அளிக்கும் தேவை இருக்காது.’’