காவிரி ஆற்றில் வரும் தண்ணீரைப் பார்க்க டெல்டா விவசாயிகள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். ஆனால், கடைமடை வரை அனைத்து வாய்க்கால்களிலும் தண்ணீர் பாயுமா என்ற ஆதங்கக் குரல்கள் ஒலிக்கின்றன. காலதாமதமாகத் தொடங்கப்பட்ட தூர்வாரும் பணி, அதில் நடக்கும் ஊழல்கள் ஆகியவைதான் இந்த ஆதங்கத்துக்குக் காரணம்.

இது குறித்துப் பேசிய பட்டுக்கோட்டையைச் சேர்ந்த விவசாயி வீரசேனன், “எங்கள் பகுதியில் தூர்வாரும் பணியை, தமிழக அரசின் வேளாண்மைப் பொறியியல்துறைக்குச் சொந்தமான மண் அள்ளும் இயந்திரங்களை வைத்துத்தான் செய்யறாங்க. இதற்காக மாநிலம் முழுவதிலுமிருந்து இயந்திரங்களை டெல்டா மாவட்டங்களுக்குக் கொண்டு வந்திருக்காங்க. இதுக்கு ஒரு மணி நேரத்துக்கு வாடகை 840 ரூபாய். `3 கிலோமீட்டர் தூரம் தூர் வாரும் பணிக்கு 200 மணி நேரம்’னு நிர்ணயிச்சு அதுக்கு 1,68,000 ரூபாய் வாடகை நிர்ணயம் பண்ணியிருக்காங்க. தூர்வாரும் பணிக்கு 3 கிலோமீட்டர் தூரத்துக்கு 8 லட்சம் ரூபாய்னு டெண்டர் விட்டிருக்காங்க.

டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர், அரசாங்கத்துக்குச் சொந்தமான இயந்திரங்களை வாடகைக்கு எடுத்து, பணிகளைச் செஞ்சுட்டு 1,68,000 வாடகை கொடுத்துடுவார். மீதிப் பணத்தை அரசியல்வாதிகள், அதிகாரிகள் பங்கு போட்டுக்குவாங்க. இப்படிச் செய்யும் பணிகளையும் ஒழுங்கா செய்யறதில்லை. மக்கள் பார்வையில் படும் இடங்களில் மட்டும் வேலைகளைச் செஞ்சுட்டு, மத்த இடங்கள்ல பெயர் அளவுக்குத்தான் செய்யறாங்க. இன்னும் பாதியளவு பணிகள்கூட முடியலை. அதனால, ஆத்துல தண்ணீர் திறக்கிறப்போ கடைமடை வரை பாயுமாங்கிறது சந்தேகம்தான்” என்றார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் சாமி.நடராஜன், “தூர் வாரும் பணிகளில் வெளிப்படைத்தன்மை இல்லை. `பணி நடக்கும் இடத்தில் தகவல் பலகை வைக்கணும்’கிறது விதி. அதில், திட்ட மதிப்பீடு, ஒப்பந்தாரர் பெயர் உள்ளிட்ட விவரங்கள் இருக்கணும். ஆனா, எங்கேயுமே தகவல் பலகை கிடையாது. ஆளுங்கட்சிப் பிரமுகர்களின் பினாமிகள்தான் ஒப்பந்ததாரர்களாக இருக்குறாங்க. அவங்ககூட அரசு அதிகாரிகளும் கூட்டுவெச்சுக்கிறாங்க. இந்தப் பணிகளைக் கண்காணிக்க, விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளைக்கொண்ட கண்காணிப்புக்குழு அமைக்கணும். அப்போதான் பணிகள் ஒழுங்கா நடக்கும்” என்றார்.

பொதுப்பணித்துறையில் சிலரிடம் பேசியபோது, “வேளாண் பொறியியல் துறையும், பொதுப் பணித்துறையும் இணைந்துதான் முன்பு தூர்வாரும் பணிகளைச் செய்தன. அரசியல்வாதி களின் தலையீட்டால்தான் தனியார் ஒப்பந்ததாரர்கள் உள்ளே நுழைந்தனர்” என்றார்கள்.

வேளாண் பொறியியல்துறை அதிகாரிகளிடம் பேசியபோது, “தூர்வாரும் பணி ஒழுங்கா நடக்கணுங்கற நல்ல நோக்கத்தில்தான் எங்கள் இயந்திரங்களைப் பயன்படுத்தணும்னு நிபந்தனை விதிக்கப்பட்டது. எங்களது ஆபரேட்டர்கள்தான் இயந்திரங்களை இயக்குகின்றனர். ஆகையால், கான்ட்ராக்டர்கள் ஏமாற்ற வாய்ப் பில்லை” என்றனர்.

திருவாரூர் மாவட்டத்தில் பணியாற்றும் பொதுப்பணித்துறை உதவிச் செயற்பொறியாளர் சங்கர், “வேளாண் பொறியியல்துறையின் இயந்திரங்கள் மட்டும் இந்தப் பணிக்குப் போதாது. வேறு சில இயந்திரங்களையும் கான்ட்ராக்டர்கள் வெளியே வாடகைக்கு எடுத்துத்தான் பணிகளைச் செய்ய முடியும். அதையும் சேர்த்துத்தான் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்படுகிறது. தூர்வாரும் பணி நேர்மையாக நடக்கிறது. ஆத்துல தண்ணீர் வர்றப்போ, உண்மை தெரியும்” என்றார்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ், “தஞ்சாவூர் மாவட்டத்தில் தூர்வாரும் பணிகள் 72 சதவிகிதம் நிறைவடைந்துள்ளன. கிளை ஆறுகள், வாய்க்கால்களில் தண்ணீர் வருவதற்குள் எஞ்சியுள்ள பணிகளும் முடிவடைந்துவிடும். இப்பணிகளில் முறைகேடுகள் எதுவும் நடந்துவிடக் கூடாது என்பதில் மாவட்ட நிர்வாகம் கவனமாக உள்ளது. நானே நேரடியாகச் சென்று ஆய்வு செய்கிறேன். வேளாண்மைத் துறைச் செயலாளரும் நேரடியாக ஆய்வு செய்கிறார். ஏதேனும் குறைபாடுகள் இருந்து, விவசாயிகள் எனது கவனத்துக்குக் கொண்டு வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். `இப்பணியை பொதுப்பணித்துறையும் வேளாண் பொறியியல்துறையும் நேரடியாக மேற் கொள்ளலாம்’ என்ற விவசாயிகளின் கோரிக்கை அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும்” என்றார்.

போட்டோ எடுக்க ரூ.2 கோடி!

தூர் வாரும் பணிக்கு தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் தொகை 69 கோடி ரூபாய். இப்பணிகளை ட்ரோன் கேமராவில் படம் எடுப்பதற்கும், பணிகளைப் பார்வையிடப் பத்திரிகையாளர்களை அழைத்துச் செல்வதற்கும் மட்டும் திட்ட மதிப்பீட்டில் 2 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. “போட்டோ எடுக்க இவ்வளவு தொகையா?” என்று அதிர்ச்சியுடன் கேட்கிறார்கள் விவசாயிகள்.