Published:Updated:

ஒன்றரை கோடிக்கு ஆடுகள் விற்பனை! களைகட்டிய ஆட்டுச் சந்தை; மகிழ்ச்சியில் விவசாயிகள்…

ஆட்டுச்சந்தை

கரூர் அருகே நடைபெற்ற ஆட்டுச்சந்தையில் சுமார் 1.5 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர். ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஒன்றரை கோடிக்கு ஆடுகள் விற்பனை! களைகட்டிய ஆட்டுச் சந்தை; மகிழ்ச்சியில் விவசாயிகள்…

கரூர் அருகே நடைபெற்ற ஆட்டுச்சந்தையில் சுமார் 1.5 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர். ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Published:Updated:
ஆட்டுச்சந்தை

கரூர் மாவட்டத்தில், காவிரி, நொய்யல், அமராவதி உள்ளிட்ட ஆறுகள் பாய்ந்தாலும், இங்குள்ள 70 சதவிகிதம் பகுதிகள் வறட்சியானவை. மழைநீரை அதிகம் ஈர்க்காத இங்குள்ள சுண்ணாம்பு மண்ணும், அதிகப்படியாக நிலவும் வெப்பமும் இதற்கு காரணமாகும்.

இதனால், இங்குள்ள பெரும்வாரியான விவசாய நிலங்கள் வானம் பார்த்த பூமியாக உள்ளன. அதனால், இங்குள்ள விவசாயிகள் விவசாயம் செய்யமுடியாத நிலையில் வருமானத்துக்காக ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருகின்றனர்.

ஆட்டுச்சந்தை
ஆட்டுச்சந்தை

கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி, தென்னிலை, க.பரமத்தி, சின்னதாராபுரம், தென்னிலை, கடவூர், தோகைமலை உள்ளிட்டப் பல பகுதிகளில் வசிக்கும் மக்கள் பெரும்பாலும் கால்நடை வளர்ப்பு மற்றும் அதுசார்ந்த பொருளாதாரத்தையே நம்பியிருக்கின்றனர். இந்த நிலையில், கரூர் மாவட்டம், மணல்மேடு பகுதியில் கரூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலை அருகில் வாரம்தோறும் ஆட்டு சந்தை நடைபெற்று வருவது வழக்கம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆனால், கடந்த சில வருடங்களாக மழை சரியாக பெய்யாததால், கால்நடைகளை மேய்க்க வழியில்லாமல், விவசாயிகள் அவதியுற்றனர். இந்த நிலையில், தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருவதன் காரணமாக, முன் அனுமதி பெற்று இன்று மற்றும் நாளை என இரண்டு நாட்கள் ஆட்டுச் சந்தையில் செம்மரி ஆடு, வெள்ளாடு, கொடியாடுகள் உள்ளிட்ட ஆடுகள் விற்பனைக்கு வந்தன.

இந்த வார சந்தைக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து 100 -க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்த வியாபாரிகள், அதிகாலை முதலே தங்களுக்கு தேவையான ஆடுகளை வாங்கி சென்றனர். வாரச் சந்தைக்கு 3 ஆயிரத்திற்கும் மேல் ஆடுகள் விற்பனைக்காக வந்தன.

ஆட்டுச்சந்தை
ஆட்டுச்சந்தை

ஒரு ஆட்டின் விலை சுமார் 8 ஆயிரம் ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரையில் விற்பனை நடைபெற்றதாக விவசாயிகள் சொல்கின்றனர். அதோடு, இங்கு நடைபெற்ற ஆட்டுச் சந்தையில் சுமார் 1.5 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

இதனால் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். "தொடர்ந்து மழை பெய்து, கரூர் மாவட்டத்தில் உள்ள தரிசு நிலங்களில் புல் நன்றாக முளைத்துள்ளதால், கூடுதலாக ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து, வருமானம் பார்க்க இருக்கிறோம்" என்று விவசாயிகள் சிலர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.