Published:Updated:

₹5,000 கோடியில் நீர்ப்பாசனத் திட்டங்கள்: `நல்ல விஷயம்தான்; ஆனால்..!' - மூத்த பொறியாளரின் அறிவுரை

கதவணை
கதவணை

நீர்ப்பாசன பணிகளுக்கென்று பட்ஜெட்டில் 6,607 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 5,000 கோடி ரூபாயில் பணிகள் தொடங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தமிழகத்தில் நீர்வளத்தைப் பெருக்க வேண்டும், பல இடங்களில் கதவணைகள், தடுப்பணைகள் கட்ட வேண்டும்; புதிய நீர்நிலைகளை உருவாக்க வேண்டும், ஏரி, குளங்களைச் சீரமைத்து பராமரிக்க வேண்டும் என்று விவசாயிகள், சூழல் ஆர்வலர்கிடையே இருந்து கோரிக்கைகள் எழுந்த வண்ணம் இருந்து வந்தன. இதையடுத்து 16,000 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு திட்டப்பணிகளுக்கான அறிக்கை தயார் செய்யப்பட்டு நீர்வளத்துறை சார்பில் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்காக நீர்வளத்துறை சார்பில் மாநிலம் முழுவதும் தடுப்பணை, கதவணை அமைப்பதற்கான இடங்களை தேர்வு செய்து அறிக்கை அனுப்ப பொறியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டது.

அதன்படி மழைநீர் நேரடியாக கடலில் கலப்பதைத் தடுக்க காவிரி ஆற்றுப்படுகையில் 2 இடங்களில் கதவணை, கொள்ளிடம் ஆற்றுப்படுகையில் 1 இடத்தில் கதவணை, தாமிரபரணி ஆற்றுப்படுகையில் 3 இடங்களில் கதவணை என மொத்தம் 6 கதவணைகள் 2,500 கோடி ரூபாயில் கட்ட திட்ட அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதைத் தவிர்த்து தமிழகத்தில் ஓடும் ஆறுகள், கிளையாறுகளில் 500 இடங்களில் தடுப்பணை கட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது ஒரு சட்டமன்ற தொகுதிக்கு குறைந்தபட்சம் ஒரு தடுப்பணையாவது அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கதவணை
கதவணை
தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2021: இந்த 20 முக்கிய விஷயங்களை கவனிச்சீங்களா?

இதைத்தவிர, மாநிலம் முழுவதும் 8 இடங்களில் புதிய நீர்நிலைகள், ஆற்றுப்படுகைகளில் கடல் நீர் உட்புகுவதைத் தடுக்கும் வகையில், கடைமடைகளில் நீரொழுங்கிகள் அமைப்பதற்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும், புதிதாக ஏரிகளை புனரமைப்பது, தூர்வாருவது உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகளுக்கான அறிக்கையும் தயார் செய்து அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நீர்ப்பாசன பணிகளுக்கென்று பட்ஜெட்டில் 6,607 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 5,000 கோடி ரூபாயில் பணிகள் தொடங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மூத்த பொறியாளர் முனைவர் வீரப்பனிடம் பேசியபோது, ``கதவணைகள், தடுப்பணைகள் கட்டுவதற்கு தமிழக அரசு முக்கியத்துவம் கொடுத்திருப்பதை வரவேற்கிறோம். முதல்வல் ஸ்டாலின் நீர்நிலை சம்பந்தப்பட்ட பணிகளில் ஆர்வமாக இருப்பது பாராட்டத்தக்க விஷயம்.

வீரப்பன்
வீரப்பன்

அதேபோன்று இந்தப் பணிகளைச் செய்யும்போது சில விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். கதவணைகள், தடுப்பணைகளை முதலில் எங்கெங்கு கட்ட வேண்டும், எதற்கு முதலில் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதை ஆராய்ந்து கட்ட வேண்டும். அதேமாதிரி 5 ஆண்டுகளில் முடிக்க வேண்டியவை எவை, 10 ஆண்டுகளில் முடிக்க வேண்டியவை எவை என்பதை தீர்மானித்து அதற்கேற்ப பணிகளை திட்டமிட வேண்டும்.

`அறிவிப்புகள் செயல் வடிவமானால் விவசாயிகளுக்கு பொற்காலம்தான்!' - வேளாண் பட்ஜெட் குறித்து விவசாயிகள்

நீர்நிலை சம்பந்தப்பட்ட பல பணிகள் பாதியிலேயே நிற்பதற்குக் காரணம் அது சரியாக திட்டமிடப்படாதுதான். ஆட்சி மாறினால் பல பணிகள் கிடப்பில் போடப்படுகின்றன. எனவே நிதியைப் பொறுத்து எதையெதை உடனே முடிக்க வேண்டும், எதை காலந்தாழ்த்தி முடிக்க வேண்டும், எந்தப் பணிகளால் மக்களுக்கு அதிக பலன், எந்தப் பணிகளால் அதிகளவு தண்ணீரைச் சேமிக்க முடியும் போன்ற விஷயங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும்” என்று சொல்லி முடித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு