Published:Updated:

1,200 சதுர அடியில் செழிக்கும் காய்கறிகள்... மகிழ்ச்சி தரும் மாடித்தோட்டம்!

தோட்டத்தில் மைத்ரேயன் மற்றும் பாலசுப்ரமணியம்
பிரீமியம் ஸ்டோரி
தோட்டத்தில் மைத்ரேயன் மற்றும் பாலசுப்ரமணியம்

வீட்டுத்தோட்டம்

1,200 சதுர அடியில் செழிக்கும் காய்கறிகள்... மகிழ்ச்சி தரும் மாடித்தோட்டம்!

வீட்டுத்தோட்டம்

Published:Updated:
தோட்டத்தில் மைத்ரேயன் மற்றும் பாலசுப்ரமணியம்
பிரீமியம் ஸ்டோரி
தோட்டத்தில் மைத்ரேயன் மற்றும் பாலசுப்ரமணியம்

`விவசாயம் செய்ய நிலமில்லையே...’ எனக் கவலைப்படும் பலருக்கும் வரப்பிரசாதமாக இருக்கிறது வீட்டுத் தோட்டம். அதிலும் மாடித்தோட்டம் பலரை நவீன விவசாயிகளாகவே மாற்றியிருக்கிறது. நஞ்சில்லா காய்கறிகளைத் தாங்களே உற்பத்தி செய்து உண்பதால் உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கிறது; மனமும் மகிழ்ச்சியடைகிறது. இதனால் அண்மைக் காலமாக மாடித்தோட்டம் அமைப்பது அதிகரித்துவருகிறது. சென்னை போன்ற பெருநகரங்களில் ஆர்வத்தோடு மாடித்தோட்டம் அமைத்து வருகிறார்கள் பலர். அந்த வரிசையில், சென்னை கோவிலம்பாக்கத்தைச் சேர்ந்த மைத்ரேயன், தன் வீட்டில் மாடித்தோட்டத்தைச் சிறப்பாக அமைத்து, ஆர்வமுள்ள பலருக்கும் மாடித்தோட்டம் அமைக்க வழிகாட்டிவருகிறார். ஒரு காலை வேளையில் மைத்ரேயனைச் சந்தித்தோம்.

மைத்ரேயன்
மைத்ரேயன்

‘‘எனக்குப் பூர்வீகம் சென்னைதான். சின்ன வயசுல இயற்கை மீதான ஆர்வத்துல வீட்டுல நிறைய செடிகளை வளர்த்தோம். இப்போ சொந்த அப்பார்ட்மென்ட்ல குடியிருக்கோம். எங்க பக்கத்து பிளாட்ல என்னோட மைத்துனர் குடும்பத்தினர் இருக்காங்க. 2013-ம் வருஷம் மாடித்தோட்டம் குறித்த விழிப்புணர்வுக் கருத்தரங்குல நானும் என் மைத்துனர் பாலசுப்ரமணியமும் கலந்துகிட்டோம். அங்கேதான் இயற்கை விவசாயத்தைப் பத்தியும் மாடித்தோட்டம் அமைக்கிறது பத்தியும் பல விஷயங்களைத் தெரிஞ்சுகிட்டோம். வீட்டுக்கு வந்ததும் மாடித்தோட்டம் அமைக்க முடிவெடுத்தோம். சோதனை முயற்சியாக வெண்டைக்காய், கத்திரிக்காய், தக்காளி, கீரைகள் மட்டும் ஆறு தொட்டிகள்ல வளர்க்க ஆரம்பிச்சோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

1,200 சதுர அடியில் செழிக்கும் காய்கறிகள்... மகிழ்ச்சி தரும் மாடித்தோட்டம்!

கீரைகள் வேகமா வளர்ந்திடுச்சு. ஆனா, காய்கறிச் செடிகள்ல பூச்சித் தாக்குதல் அதிகமாகிடுச்சு. நாங்க எதிர்பார்த்த மகசூல் கிடைக்கலை. அதுக்கப்புறம்தான் பூச்சிகளைச் சமாளிக்கறதைப் பத்தித் தெரிஞ்சுக்க மாடித்தோட்டம் வெச்சிருந்தவங்களை நேரில் சந்திச்சு ஆலோசனை செஞ்சோம். யூடியூப் சேனல்கள், பத்திரிகைகள் மூலமாகவும் நிறைய தகவல்களைத் தெரிஞ்சுகிட்டோம். ஒன்றரை வருஷம் அனுபவப் பாடங்களைத்தான் கத்துக்க முடிஞ்சது. நாங்க செய்யற தவறுகளுக்குத் தீர்வுகளைக் கண்டறிஞ்சு, தவறுகளைச் சரிபடுத்திகிட்டோம். அதுக்குப் பிறகு, செடிகளை நடவு செஞ்சு பராமரிச்சோம். பூச்சித் தாக்குதல் குறைஞ்சு, விளைச்சலும் அதிகரிக்க ஆரம்பிச்சது” என்ற மைத்ரேயன், பாலசுப்ரமணியத்தை நமக்கு அறிமுகப்படுத்திவிட்டு காய்களைப் பறிக்கத் தொடங்கினார். தொடர்ந்து பேசினார் பாலசுப்ரமணியம்,

1,200 சதுர அடியில் செழிக்கும் காய்கறிகள்... மகிழ்ச்சி தரும் மாடித்தோட்டம்!

‘‘படிப்படியா செடிகளோட எண்ணிக்கையை அதிகப்படுத்தினோம். இப்போ மொத்தமுள்ள 1,200 சதுர அடியிலயும் செடிகளை வளர்க்கிறோம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
தோட்டத்தில் மைத்ரேயன் மற்றும் பாலசுப்ரமணியம்
தோட்டத்தில் மைத்ரேயன் மற்றும் பாலசுப்ரமணியம்

இதுல, 400 சதுர அடிக்கு மட்டும் நிழல்வலை அமைச்சிருக்கோம். கத்திரிக்காய், வெண்டைக்காய், தக்காளி, பூசணி, செடி முருங்கை, மர முருங்கை, முள்ளங்கி, பீட்ரூட், கறிவேப்பிலை, கொத்தமல்லி, பாகல், புடலை, பீர்க்கன், வெள்ளரி, கொத்தவரங்காய், காராமணி, அவரை, பச்சைமிளகாய், எலுமிச்சை, சப்போட்டா, கொய்யா, மாதுளை, சீத்தா, அத்தி, சாத்துக்குடி, பப்பாளி, ஆரஞ்சு, சோளம், டிராகன் ஃப்ரூட், வாழை, மூலிகைச் செடிகள், பூச்செடிகள், அழகுச் செடிகள்னு 350-க்கும் மேற்பட்ட செடிகளை வளத்துட்டு வர்றோம். ரெண்டு வீட்டுக்குமான காய்கறிகளை இங்கேயே உற்பத்தி பண்ணிக்கிறோம்’’ என்றவர் தொட்டிகளைப் பற்றி விளக்கினார்.

1,200 சதுர அடியில் செழிக்கும் காய்கறிகள்... மகிழ்ச்சி தரும் மாடித்தோட்டம்!

‘‘தேங்காய்நார்க் கழிவு 50 சதவிகிதம், இயற்கை உரங்கள் 35 சதவிகிதம், செம்மண் 15 சதவிகிதம் என்ற விகிதத்துல ஒவ்வொரு தொட்டியிலயும் செடி வளர்றதுக்கான ஊடகத்தைப் போட்டு, அதுலதான் செடிகளை நடவு செய்யறோம். தேங்காய்நார்க் கழிவு அதிகமா இருக்குறதால தண்ணி அதிகமா தேவைப்படாது. ஒரு தடவை ஊத்துற தண்ணியை உறிஞ்சு வெச்சுக்கும். இதனால செடிகள்ல எப்பவும் ஈரப்பதம் இருந்துகிட்டே இருக்கும். தண்ணீர்த் தேவையும் குறைவா இருக்குது. சொட்டுநீர்ப் பாசனம் அமைக்கலாம்னு நினைச்சோம். அப்படி செஞ்சா செடிகளைக் கவனிச்சுக்கிற நேரம் குறைஞ்சுடும்னு தெரிஞ்சது. அதனால அதை அமைக்கலை. தினமும் ரெண்டு வேளையும் நாங்களே தண்ணீர் பாய்ச்சி, பராமரிப்புப் பணிகளைக் கவனிச்சுக்குவோம். அப்போ ஒவ்வொரு செடியிலும் ஏற்படுற சின்ன சின்ன மாற்றத்தையும் உன்னிப்பா கவனிப்போம். அதனால நோய், பூச்சித் தாக்குதல் இருந்தாலும் தெரிஞ்சிடும். அதை ஆரம்ப நிலையிலேயே சரிப்படுத்திடுவோம்.

1,200 சதுர அடியில் செழிக்கும் காய்கறிகள்... மகிழ்ச்சி தரும் மாடித்தோட்டம்!

பஞ்சகவ்யா, தேமோர்க் கரைசல், புளித்த மோர்க் கரைசல், மீன் அமினோ அமிலம், மாட்டுக் கோமியத்தில் ஊறவெச்ச இலை தழைக் கரைசல்னு பலவகையான கரைசல்களை வீட்டிலேயே தயாரிச்சுப் பயன்படுத்துறோம். அந்தந்தப் பருவத்துக்கு ஏற்றப் பயிர்களை மட்டுமே வளர்க்கிறோம். அதனால, நல்ல விளைச்சல் கிடைக்குது. ஒரு பயிரின் வளர்ச்சி முடியுறதுக்கு முன்பே அந்த இடத்துல வளர்க்க வேண்டிய அடுத்த பயிருக்கான நாத்தைத் தனியா வளர்த்திடுவோம்” என்றபடியே செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றத் தொடங்கினார்.

வெண்டைக்காய், கத்திரிக்காய், தக்காளி, கீரைகள் மட்டும் ஆறு தொட்டிகள்ல வளர்க்க ஆரம்பிச்சோம். ரெண்டு வீட்டுக்குமான காய்கறிகளை இங்கேயே உற்பத்தி பண்ணிக்கிறோம்.

பறித்த காய்கறிகளை நம்மிடம் காட்டியவாறே மீண்டும் பேசத் தொடங்கிய மைத்ரேயன், ‘‘குடும்பத்துல எல்லோரும் மாடித்தோட்டப் பராமரிப்புல ஆர்வமா ஈடுபடுறாங்க. எங்க குழந்தைகளும் அதிக நேரத்தை இங்கேதான் செலவு செய்யறாங்க. அவங்க இயற்கையுடன் இணைந்து வளர்றதோட, டி.வி., செல்போன் பயன்பாட்டிலிருந்தும் முடிஞ்ச அளவுக்கு விலகியிருக்காங்க. நானும் என் மச்சானும் தனியார் நிறுவனங்கள்ல வேலை செய்யறோம். ஆனாலும், மாடித்தோட்டத்துக்காக நேரத்தை ஒதுக்கிடுவோம். பள்ளி, கல்லூரி மாணவர்கள், இயற்கை ஆர்வலர்கள், மாடித்தோட்ட விவசாயிகள் பலரும் எங்க மாடித்தோட்டத்துக்கு வந்து பார்த்துட்டுப் போறாங்க.

‘‘தேங்காய்நார்க் கழிவு 50 சதவிகிதம், இயற்கை உரங்கள் 35 சதவிகிதம், செம்மண் 15 சதவிகிதம் என்ற விகிதத்துல ஒவ்வொரு தொட்டியிலயும் செடி வளர்றதுக்கான ஊடகத்தைப் போட்டு, அதுலதான் செடிகளை நடவு செய்றோம்.’’

இடவசதி உள்ளவங்க வீடுகள்ல மாடித்தோட்டம் அமைச்சா, காய்கறிகளை இயற்கை முறையில உற்பத்தி செஞ்சு சாப்பிடலாம். காய்கறிகள் விலை உயர்வு பத்திக் கவலைப்படத் தேவையில்லை. அதோடு காற்று மாசுபாட்டைக் குறைப்பதில் நாமும் சிறு பங்கு வகிக்கலாம். எங்க ஆர்வத்துக்கு, இடப்பற்றாக்குறைதான் சவாலாக இருக்கு” என்று சொல்லி விடைகொடுத்தார்.

தொடர்புக்கு, மைத்ரேயன், செல்போன்: 98842 94021

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism