Published:Updated:

கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் அமைப்பதா, கூடாதா? மீண்டும் வெடிக்கும் பிரச்னை..!

கீழ்பவானி அணை

கீழ்பவானி வாய்க்கால் காமராஜர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட மண் அணையாகும். இது ஆசியாவிலேயே மண்ணால் கட்டப்பட்ட இரண்டாவது மிகப்பெரிய ஆணை ஆகும். இந்த அணை அரசால் கட்டப்பட்டிருந்தாலும், அணையை சுற்றியுள்ள விவசாயிகள்தான் அதற்கான முழுப் பணத்தையும் வரியாகச் செலுத்தியுள்ளனர்.

கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் அமைப்பதா, கூடாதா? மீண்டும் வெடிக்கும் பிரச்னை..!

கீழ்பவானி வாய்க்கால் காமராஜர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட மண் அணையாகும். இது ஆசியாவிலேயே மண்ணால் கட்டப்பட்ட இரண்டாவது மிகப்பெரிய ஆணை ஆகும். இந்த அணை அரசால் கட்டப்பட்டிருந்தாலும், அணையை சுற்றியுள்ள விவசாயிகள்தான் அதற்கான முழுப் பணத்தையும் வரியாகச் செலுத்தியுள்ளனர்.

Published:Updated:
கீழ்பவானி அணை

திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்ட விவசாயத்தின் நீர் ஆதரமாக விளங்கும் கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைப்பதா, கூடாதா? என்று பிரச்னை மீண்டும் வெடித்துள்ளது.

கீழ்பவானி வாய்க்கால் காமராஜர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட மண் அணையாகும். இது ஆசியாவிலேயே மண்ணால் கட்டப்பட்ட இரண்டாவது மிகப்பெரிய ஆணை ஆகும். மேலும் இந்த அணை அரசால் கட்டப்பட்டிருந்தாலும், அணையை சுற்றியுள்ள விவசாயிகள்தான் அதற்கான முழுப் பணத்தையும் வரியாகச் செலுத்தியுள்ளனர். இந்த மண் அணை மூலம் அந்த பகுதியை சுற்றியுள்ள கிணறு, குட்டை, போர்வெல் என அனைத்திலும் நீர் ஊறுகிறது.

கீழ்பவானி கால்வாய்
கீழ்பவானி கால்வாய்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கீழ்பவானி வாய்க்கால் மூலம் திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களில் உள்ள சுமார் 2.7 லட்சம் ஏக்கர் நிலம் நேரடியாகவும், 40,000 ஏக்கர் நிலம் மறைமுகமாகவும் பயன்பெறுகின்றன. ஆண்டிற்கு இரண்டு மண்டலங்கள் என இந்த அணையிலிருந்து பாசன வசதி பெறும் நிலங்கள் சரிபாதியாக பிரிக்கப்பட்டுள்ளது.

முதல்போக பாசனமாக 1,03,500 ஏக்கர் நிலங்களுக்கு ஆகஸ்ட் 15 முதல் டிசம்பர் 15 வரை நன்செய் பயிர்களுக்கும் , இரண்டாம் போக பாசனமாக மீதமுள்ள 1,03,500 ஏக்கர் நிலங்களுக்கு டிசம்பர் 15 முதல் மார்ச் 15 வரை புன்செய் பயிர்களுக்கும் இந்த அணையிலிருந்து நீர் வழங்கப்படுகிறது. பவானிசாகர் அணையின் நீர் இருப்பை பொறுத்து வருடத்தில் 9 மாதங்கள் கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படுகிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த மண்டலங்கள் மூலம் நேரடியாக தண்ணீர் பெறாத 40,000 ஏக்கர் நிலங்களுக்கு மறைமுகமாக கசிவு நீர் முறை மூலமாகவும் நிலத்தடி நீர் செறிவூட்டுதல் மூலமாகவும் கீழ்பவானி வாய்க்கால் பயன் தருகிறது.
2009-ம் ஆண்டு கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க அப்போதைய தி.மு.க அரசு பிள்ளையார்சுழி போட்டது. அதன்பிறகு, 2012-ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில், கீழ் பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் போடும் திட்டம் தீட்டப்பட்டது. அதற்காக உலக வங்கியில் 1200 கோடி ரூபாய் கடன் பெறுவதற்கும் முயற்சிகள் நடைபெற்றது. அப்பொழுது விவசாயிகள் எல்லாம் ஒன்று கூடிப் போராடியதால் அத்திட்டம் கைவிடப்பட்டது.

கீழ்பவானி கால்வாய்
கீழ்பவானி கால்வாய்

மீண்டும் 2020-ம் ஆண்டு அ.தி.மு.க அரசு இந்த திட்டத்தை கையில் எடுத்தது. வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்தை நபார்டு வங்கியின் உதவியோடு 709 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்த ஆலோசிக்கப்பட்டது. தற்போது ஆட்சி மாற்றம் நடந்துள்ள நிலையில், தி.மு.க அரசும் கால்வாயில் கான்கிரீட் அமைக்கும் பணிக்காக ஆங்காங்கே பூமி பூஜை போட்டு திட்டப் பணிகளில் வேகம் காட்டத் தொடங்கியிருக்கிறது. இந்த திட்டம் பற்றிய பேச்சு எழுந்தப் போதிருந்தே, இத்திட்டத்திற்கு ஒரு தரப்பு விவசாயினர் ஆதரவும், இன்னொரு தரப்பு விவசாயினர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

இந்த திட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் அணியினர், கடைமடைப் பகுதிகளுக்குப் பாசன நீரை கொண்டு சேர்ப்பதற்கு இத்திட்டம் தேவை என்கின்றனர். ஆனால் எதிர்தரப்பினரோ பாசன வாய்க்கால்களையும், கால்வாய்களையும், சிறு ஓடைகளையும் முறையாகத் தூர்வாரி, கரைகளை வலுப்படுத்தினாலே கடைமடைப் பகுதி வரை நீர் பிரச்னை இருக்காது என்று கூறுகின்றனர்.
கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்தை எதிர்த்து கடந்த மார்ச் மாதம் 35,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒரு மிகப்பெரிய கவன ஈர்ப்பு மாநாடு நடத்தினர்.

கீழ்பவானி அணை
கீழ்பவானி அணை

இந்த திட்டத்தை பற்றி பேசிய விவசாயி ஒருவர், "இந்த திட்டத்தை நிறைவேற்றினால் இந்த அணையின் மூலம் பாசனம் பெரும் கிராமங்களின் நிலத்தடி நீர் முழுவதுமாக குறைந்துவிடும். குடிநீர் மற்றும் ஆழ்துளைக் கிணற்றுப் பாசனமும் பெரும் பாதிப்படையும். ஏரிகள், குளங்கள், குட்டைகள் ஆகியவை வறண்டு போகும் நிலையும் ஏற்பட்டுவிடும். மேலும் பல்லுயிர் பெருக்கத்தை அழித்துச் சுற்றச்சூழலுக்கும், விவசாயத்திற்கும் பெருமளவு பாதிப்பு ஏற்படுத்தும்" என்று கூறினார்.

கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்க அமைப்பாளர் மு.ரவி, "இதுவரை 5 முறை அமைச்சர் முத்துசாமி ஆய்வு மேற்கொண்டுள்ளார். மேலும் ஈரோடு மாவட்ட செயலாளர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். எந்த ஒரு பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படவில்லை. மாநாட்டிற்கு பிறகு சென்னை சென்று நீர்வளத்துறை அமைச்சரிடம் மனு கொடுத்தோம்.

அமைச்சர் துரைமுருகன்
அமைச்சர் துரைமுருகன்

எங்களுடைய ஒரே கோரிக்கை மண் வாய்க்கால், மண் வாய்க்காலாகத்தான் இருக்க வேண்டும் என்பதுதான். பழைய கட்டுமானங்களை சீரமைத்தும், தூர்வாரியும் தருமாறு கேட்டிருந்தோம். தூர்வார நிதி இல்லை என்று சொல்லியிருந்த நிலையில் கடந்த 4-ம் தேதி முதல் தூர்வார தொடங்கியுள்ளனர். 65 வருடம் தூர்வாராமல் இப்போது தூர்வார தொடங்கியிருக்கும் நிலையில் கடைமடை வரை நிச்சயம் நீர் செல்லும்.தூர்வாரி கொடுத்ததற்கு நன்றி தெரிவித்தோம். மேலும் கான்கிரீட் தரை இல்லாமல் மண் தரையை மண்ணாகவே பலப்படுத்துமாறு கேட்டுக்கொண்டோம்" என்று கூறினார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், "கீழ்பவானியில் உள்ள வாய்க்காலில் உலக வங்கியில் கடன்பெற்று கான்கிரீட் தரை அமைப்பது குறித்து பேசப்பட்டது. இதற்கு ஒரு அணி ஆதரவும், இன்னொரு அணி எதிர்ப்பும் தெரிவித்தனர். இந்த இரண்டு அணியிருடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதற்கான முடிவு இன்னொரு அமர்வில்தான் தெரியவரும்" என்று கூறினார்.