Published:Updated:

`மெலிந்த உடல் பருக்கும், பருத்த உடல் இளைக்கும்' - `அமுக்கரா' மூலிகை சிறப்புகள்

சீமை அமுக்கரா
சீமை அமுக்கரா

அமுக்கராவைத் தனியாகச் சாப்பிட்டால் உடல் பருத்துவிடும் என்ற ஒரு தவறான கருத்து மக்களிடையே பரப்பப்பட்டு வருகிறது.

அமுக்கராவின் பயன்கள் குறித்து விளக்குகிறார் சித்த மருத்துவர் மைக்கேல் செயராசு.

``சித்த மருத்துவத்தில் நீண்ட நாள்களாக உடலை வளமாக்குவதற்கும் வலிமையாக்குவதற்கும் பயன்படுத்தப்பட்டு வரும் மூலிகைதான் அமுக்கராக்கிழங்கு.

`அமுக்கராச்சூரண மாத்திரை' என்ற பெயரில் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கிறது. இருப்பினும், அவை எல்லாவற்றையும்விட, நாமே சரியான முறையில் தயாரித்துச் சாப்பிடுவதே மிகுந்த நன்மை தரும். பக்குவப்படுத்தப்பட்ட அமுக்கரா வேர், தூதுவேளை சமுலம், இரண்டையும் சம எடை எடுத்துப் பொடி செய்து அரை முதல் ஒரு தேக்கரண்டி தேன் அல்லது காய்ச்சின பசும்பாலில் கலந்து சாப்பிட்டுவர, நாட்பட்ட சளிக்கட்டு நீங்கி, உடல் வலிமை அடையும்.

அமுக்கராவைத் தனியாகச் சாப்பிட்டால் உடல் பருத்துவிடும் என்ற ஒரு தவறான கருத்து மக்களிடையே பரப்பப்பட்டு வருகிறது. அமுக்கராக்கிழங்குப் பொடியைச் சாப்பிட்டு வந்தால் `மெலிந்த உடல் பருக்கும், பருத்த உடல் இளைக்கும்' என்பதே உண்மை.

நாட்டு அமுக்கரா, நாட்டு அமுக்கராக்கிழங்கு
நாட்டு அமுக்கரா, நாட்டு அமுக்கராக்கிழங்கு

படிக்க வேடிக்கையாக இருந்தாலும், இதுவே சித்த மருத்துவத்தின் மகிமை. முறையாகச் செய்து முடிக்கப்பட்ட சித்த மருந்துகள், நவீன மருந்துகளைப் போல ஒரு குறிப்பிட்ட விளைவை மட்டுமே ஏற்படுத்துவதில்லை. பாதிக்கப்பட்ட வளி (வாதம்), அழல் (பித்தம்), ஐயம் (கபம்) ஆகிய குற்றங்களைச் சமன்படுத்தி உடலை நல்ல நிலையில் இருத்தி வைப்பதே சித்த மருத்துவத்தின் தனிச்சிறப்பாகும். இது அறிவியல் ஆய்வுகளுக்கு அடங்காதது. ஆனால், அனுபவத்தில் கண்டறியப்பட்டதாகும்.

அமுக்கராக்கிழங்குப் பொடியைத் தனியாக உபயோகித்துக் கொள்வதைவிட உடலில் உள்ள குற்றங்கள், தாதுக்களை நிலைப்படுத்தும் விதமாகப் பயன்படுத்தலாம். இதற்குச் சித்த மருத்துவ அடிப்படை மெய்யியல் மூலம் வடிவமைக்கப்பட்ட பின்வரும் சூரணம், மிகுந்த நன்மை தருவதாகும்.

கிராம்பு 10 கிராம்,

சிறுநாகப்பூ 20 கிராம்,

ஏலக்காய் 30 கிராம்,

இலவங்கப்பட்டை 40 கிராம்,

இலவங்கப்பத்திரி 50 கிராம்,

சீரகம் 60 கிராம்,

கொத்தமல்லி 70 கிராம்,

மிளகு 80 கிராம்,

திப்பிலி 160 கிராம்,

சுக்கு 320 கிராம்,

பாலாவியலாக வேகவைத்துப் பக்குவப்படுத்தப்பட்ட சீமை அமுக்கராக்கிழங்கு 640 கிராம்

இவை அனைத்தையும் நன்கு இடித்துப் பொடி செய்து ஒரு மெல்லிய துணியில் சலித்து வைத்துக்கொள்ளவும். இதுவே அமுக்கராச்சூரணம் ஆகும்.

இதைக் காலை, மாலை இருவேளை 1 முதல் 2 கிராம் தேன் அல்லது காய்ச்சின பசும்பாலில் கலந்து உண்டுவர உடல் உரமாகும். வெள்ளைப்படுதல், மேகச்சூடு, மேக ஊறல், உடல் மெலிதல் ஆகியவை நீங்கும். அமுக்கராக்கிழங்கு சேர்த்துச் செய்யக்கூடிய `அமுக்கரா லேகியம்' அல்லது `அசுவகந்தி இளகம்', எல்லாச் சித்த மருந்துக்கடைகளிலும் கிடைக்கும். இதை உட்கொண்டால் மேற்கண்ட எல்லா நன்மைகளும் கிடைக்கும். கடைகளில் கிடைக்கும் அசுவகந்தா பலாத்தைலம் தேய்த்துக் குளித்துவர தலை மற்றும் கபம், சுரம் தொடர்பான அனைத்து நோய்களும் நீங்கி உடல் வலிமை அடையும்.

அமுக்கராக்கிழங்கு குறித்து முழுமையாகவும், நிலப்பனைக் கிழங்கு மற்றும் தண்ணீர்விட்டான் கிழங்கு ஆகியவை குறித்தும் பசுமை விகடன் தொடரில் விரிவாக அறிய கிளிக் செய்க - https://bit.ly/3hyZl4g

நல்மருந்து 2.0 - ஆண்மையைப் பெருக்கும் அமுக்கரா! தாய்ப்பாலை அதிகரிக்கும் தண்ணீர் விட்டான்! https://bit.ly/3hyZl4g

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிஷங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV

Pasumai Youtube Channel
Pasumai Youtube Channel

இதுபோன்ற விவசாயம் தொடர்பான செய்திகள் மற்றும் பயனுள்ள வீடியோக்களைக் காண பசுமை விகடன் யூ-டியூப் சேனலுக்கு வாங்க. பசுமை விகடன் சேனலை சப்ஸ்கிரைப் செய்ய: bit.ly/pasumaiYoutube

அடுத்த கட்டுரைக்கு