Published:Updated:

லட்சக்கணக்கில் லாபம் தரும் வெள்ளாட்டுப்பால் பண்ணை; வழிகாட்டும் நேரடி களப்பயிற்சி!

பால் பதப்படுத்தும் பணியில்

இதுவரை வெள்ளாடு வளர்ப்பு என்பது இறைச்சிக்காகவும் இனபெருக்கத்துக்காகவும் என்றே இருந்து வந்தது. அதை மாற்றி வெள்ளாடுகளிலிருந்து பால் உற்பத்தி செய்து 1 லிட்டர் பால் 250 ரூபாய் என்று விற்பனை செய்து அசத்தி வருகிறார் இவர்.

லட்சக்கணக்கில் லாபம் தரும் வெள்ளாட்டுப்பால் பண்ணை; வழிகாட்டும் நேரடி களப்பயிற்சி!

இதுவரை வெள்ளாடு வளர்ப்பு என்பது இறைச்சிக்காகவும் இனபெருக்கத்துக்காகவும் என்றே இருந்து வந்தது. அதை மாற்றி வெள்ளாடுகளிலிருந்து பால் உற்பத்தி செய்து 1 லிட்டர் பால் 250 ரூபாய் என்று விற்பனை செய்து அசத்தி வருகிறார் இவர்.

Published:Updated:
பால் பதப்படுத்தும் பணியில்

மகாத்மா காந்தி, ‘ஊட்டச்சத்துப் பற்றாக்குறையால் அவதிப்படும் அனைவரும் வெள்ளாட்டுப்பாலை உணவாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும்’ என்று தன் வாழ்நாள் முழுவதும் வலியுறுத்தி வந்தார். வெள்ளாட்டுப்பாலில் அவ்வளவு சத்துகள் இருப்பதுதான் காரணம். தாய்ப்பால் கிடைக்கப்பெறாத குழந்தைகளுக்கு பரிந்துரைக்கப்படுவதில் வெள்ளாட்டுப்பால் முதன்மையானது. இயற்கையாகவே வெள்ளாட்டுப்பாலில் ‘ஆன்டி ஆக்ஸிடன்ட்’ இருக்கிறது. ஆஸ்துமா, இருமல், காசநோய் பிரச்னைகளுக்கு வெள்ளாட்டுப்பால் மிகவும் ஏற்றது. உலக அளவில் மொத்த பால் உற்பத்தியில் வெள்ளாட்டுப்பால் 2 சதவிகிதம்தான். அதனால் வெள்ளாட்டுப்பால் உற்பத்தி இன்னும் பெருக வேண்டும் என்று அழைப்பு விடுத்து வருகிறார்கள் ஆயுர்வேத மருத்துவர்கள்.

ஶ்ரீனிவாஸார்ச்சார்யா
ஶ்ரீனிவாஸார்ச்சார்யா

இதுவரை வெள்ளாடு வளர்ப்பு என்பது இறைச்சிக்காகவும் இனபெருக்கத்துக்காகவும் என்றே இருந்து வந்தது. அதை மாற்றி வெள்ளாடுகளிலிருந்து பால் உற்பத்தி செய்து 1 லிட்டர் பால் 250 ரூபாய் என்று விற்பனை செய்து அசத்தி வருகிறார் கர்நாடக மாநிலம், மைசூரைச் சேர்ந்த ஶ்ரீனிவாஸாச்சார்யா என்ற விவசாயி. கொட்டில் முறையில் ஆடுகளை வளர்க்க இவர் கடைப்பிடிக்கும் தனித்துவமான முறைகள், இவருக்கு ஆட்டுப்பால் உற்பத்தியில் லட்சக்கணக்கில் லாபம் கொடுத்து வருகிறது. 10 ஆண்டுகளுக்கு முன் வெளிநாட்டிலிருந்து 1 லிட்டர் 800 ரூபாய் என்று இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளாட்டுப்பால், இன்று நம் நாட்டின் விவசாயிகளும் இதில் கால் பதித்திருப்பதால் நல்ல லாபம் பார்த்து வருகிறார்கள். அவர்களில் முன்னோடியாக இருந்து வருகிறார் ஸ்ரீனிவாஸாச்சார்யா. தென்னிந்திய அளவில் வெள்ளாட்டுப்பால் உற்பத்தியில் முன்னோடியாக இருந்து வருகிறார்.

முன்பதிவுக்கு லிங்க்கை க்ளிக் செய்யவும்.

https://bit.ly/3sdR12j

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வெள்ளாட்டுப்பால் உற்பத்தி குறித்து ஶ்ரீனிவாஸார்ச்சார்யா பேசும்போது, “2016-ம் வருஷம் ஒரு லிட்டர் பால் 300 ரூபாய்னு மைசூரு, பெங்களுரு, சென்னைக்கு அனுப்பினேன். விளம்பரம் செஞ்சேன். வெள்ளாட்டுப்பால் சம்பந்தமா டிவியில விவாத நிகழ்ச்சி நடத்துனேன். ஆயுர்வேத மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர்கள் எல்லாம் அதுல பங்கெடுத்தாங்க. மக்கள் மத்தியில கொஞ்சம் கொஞ்சமா விழிப்புணர்வு உருவாச்சு. அதனால பால் விற்பனை உயர ஆரம்பிச்சது. எங்கிட்ட இப்போ மொத்தம் 600 தாய் ஆடுகள் இருக்குது. அதுங்க மூலமா ஒரு நாளைக்கு, சராசரியா 250 லிட்டர் பால் கிடைக்குது.

பண்ணையில்
பண்ணையில்

ஒரு லிட்டர் பால் 400 ரூபாய்னு மைசூரு, பெங்களூரு, சென்னைனு அனுப்பிக்கிட்டு இருக்கேன். பண்ணை விலையா லிட்டர் 250 ரூபாய்க்குக் கொடுக்கிறேன். அந்த வகையில ஒரு நாளைக்கு 62,500 ரூபாய். மாசம் 18,75,000 ரூபாய் வருமானம் கிடைக்குது. பண்ணையில 10 பேர் வேலை செய்றாங்க. அவங்களுக்கான சம்பளம், ஆடுகளுக்கான மருத்துவம், போக்குவரத்து, இதரச் செலவு, முதலீட்டுக்கான வட்டினு மாசம் 14 லட்சம் செலவாகுது. அதுபோக மாசம் 4,75,000 ரூபாய் லாபம். என்னை மாதிரியே பெரிய அளவுல செய்ய வேண்டிய அவசியம் இல்ல. 30 ஆடுகள்ல இருந்தே தொடங்கலாம். அதுக்கான ஆலோசனையும், பயிற்சியும் கொடுக்க காத்திருக்கிறேன்” என்று அழைப்பு விடுக்கிறார்.

முன்பதிவுக்கு லிங்க்கை க்ளிக் செய்யவும்.

https://bit.ly/3sdR12j

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வெள்ளாட்டுப்பால் உற்பத்திக்கு ஏற்ற ஆட்டினங்கள், வெளியிலிருந்து தீவனம் வாங்காமல் ஆடு வளர்க்கும் முறைகள், நோய் மேலாண்மை, வெள்ளாட்டுப்பாலை பதப்படுத்தி நீண்ட நாட்களுக்கு வைத்து விற்பனை செய்தல், நெய், சோப், கிரீம் உள்ளிட்ட பொருட்களாக மதிப்புக்கூட்டுதல், நவீன பேக்கிங் முறைகள் உள்ளிட்ட விஷயங்களை மற்றவர்களும் கற்றுக்கொள்ள ஏதுவாக இவருடைய பண்ணையில் மே 27, 28 (வெள்ளி, சனி) ஆகிய தேதிகளில் நேரடி களப்பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வெள்ளாட்டுப்பால் பண்ணை நிகழ்ச்சி
வெள்ளாட்டுப்பால் பண்ணை நிகழ்ச்சி

பசுமை விகடன், யசோதவனா கோட் ஃபார்ம் இணைந்து வழங்கும் இந்த பயிற்சி, மைசூருக்கு அருகே உள்ள ஸ்ரீனிவாஸாச்சார்யாவின் வெள்ளாட்டுப் பண்ணையில் நடைபெற உள்ளது. பயிற்சி கட்டணம் ரூ.3,000.

இரண்டு நாள்களுக்கான உணவு, வெள்ளாட்டுப்பால் தேநீர், தங்கும் இடம், நோட்பேட், பேனா, சான்றிதழ் வழங்கப்படும். பதிவு செய்தவர்கள் தங்கள் சொந்த செலவில் மைசூரு வந்துவிட வேண்டும். 27-ம் தேதி காலை 8 மணிக்கு மைசூருவிலிருந்து பண்ணைக்குச் செல்ல வாகன வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கட்டணம் செலுத்த லிங்க்கை க்ளிக் செய்யவும்.

https://bit.ly/3sdR12j

மேலும் விவரங்களுக்கு: 99400 72144, 96205 90777

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism