Published:Updated:

'ஒரே ஒரு செடிதான் வெச்சேன்..!’ -மாடித் தோட்டத்தில் திராட்சைக் கொத்துகள்; அசத்தும் காரைக்குடி பெண்

திராட்சை

கண்காட்சி போல பலரும் என் வீட்டுக்கு வந்து திராட்சைக் கொத்துகளை பார்த்துச்செல்கின்றனர். நண்பர்கள், உறவினர்கள், பக்கத்து தெருக்காரர்கள் எனப் பலருக்கும் திராட்சையை பறித்துக் கொடுத்துவருகிறேன். ஒரு செடி தான் வைத்தேன். அது படர்ந்து நல்ல பலனைக் கொடுக்கிறது.

'ஒரே ஒரு செடிதான் வெச்சேன்..!’ -மாடித் தோட்டத்தில் திராட்சைக் கொத்துகள்; அசத்தும் காரைக்குடி பெண்

கண்காட்சி போல பலரும் என் வீட்டுக்கு வந்து திராட்சைக் கொத்துகளை பார்த்துச்செல்கின்றனர். நண்பர்கள், உறவினர்கள், பக்கத்து தெருக்காரர்கள் எனப் பலருக்கும் திராட்சையை பறித்துக் கொடுத்துவருகிறேன். ஒரு செடி தான் வைத்தேன். அது படர்ந்து நல்ல பலனைக் கொடுக்கிறது.

Published:Updated:
திராட்சை

’வீட்டில் இடம் இல்லை என்றால் என்ன, மாடியில் இருக்கே... என்று எளிமையாக மாடியில் காய்கறிகளை விளைவித்து தங்களது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளும் குடும்பங்கள் அதிகரித்துள்ளன. சொந்தமாக உற்பத்திசெய்யும் இந்தக் காய்கறிகள், பெரும்பாலும் இயற்கைவழி விவசாயத்தைப் பின்பற்றியே செய்யப்படுகிறது. இதனால் உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது.

சிலர் இதில் நீர் மேலாண்மையைக்கூட சிறப்பாக கடைபிடிக்கின்றனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த கவிதா, தன் வீட்டில் ஆரஞ்சு, ஆப்பிள், திராட்சை போன்ற பழ வகைத் தாவரங்களையும், காய்கறிகளையும் பயிரிட்டு வளர்த்துவருகிறார்.

திராட்சைக் கொடிக்குள் கவிதா
திராட்சைக் கொடிக்குள் கவிதா

பலரும் ஆச்சர்யமாகப் பார்க்கும் தனது தோட்டம் குறித்து கவிதா தமிழ்ச்செல்வன், "எங்கள் வீடு காரைக்குடியிலிருந்து அரியக்குடி செல்லும் சாலையில் உள்ளது. நான் எம்.எஸ்.சி பி.எட் படித்திருக்கிறேன். வேதியியல் துறையில் பட்டம் படித்தாலும் தாவரங்கள், விலங்குகள்மீது அதிக ஆர்வம். சிறு வயதிலிருந்தே செடிகள் நடவுசெய்வது ரொம்பப் பிடிக்கும். அந்த ஆர்வத்தால் என் வீட்டில் கடந்த 3 ஆண்டுகளாக மரம், செடி, கொடிகளை வளர்த்து வருகிறேன். மொத்தம் அஞ்சரை சென்ட் இடத்தில் வீடு போக, மீதமுள்ள இடங்களில் செடி, மரம், கொடினு வளர்க்கிறேன். மாடியையும் சும்மா விடாம, தோட்டம் போட்டிருக்கேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

எல்லாரையும் போல காய்கறிகள் ஒருபுறம் வளர்த்தாலும் குளிர்ப் பிரதேசங்களில் வளரும் செடியையும் வளர்த்துப் பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. அதனால் ஆரஞ்சு, ஆப்பிள், மாதுளை, அன்னாசி எனப் பழவகைகளையும் வளர்த்துட்டுவர்றேன். இதில், திராட்சைப் பழம் நல்ல பலனைக் கொடுக்கிறது. கடந்த 2 வருடத்திற்கு முன்பு, நான் வளர்த்த திராட்சைக் கொடியை வீட்டின் அருகில் வளர்த்தேன். வளர்ச்சி பெரிதாகவும் அதை மாடியில் படரவிட்டேன். செழிப்பாக வளர்ந்த கொடிகள், 6 மாதத்தில் காய்க்கத் தொடங்கிவிட்டன.

மாடியில் திராட்சை
மாடியில் திராட்சை

கொத்துக் கொத்தான திராட்சை என்னை ஆசுவாசப்படுத்தியது. அதற்குப் பின், கண்காட்சி போல பலரும் என் வீட்டுக்கு வந்து திராட்சைக் கொத்துகளைப் பார்த்துச்செல்கின்றனர். நண்பர்கள், உறவினர்கள், பக்கத்து தெருக்காரர்கள் என்று பலருக்கும் திராட்சையை பறித்துக் கொடுத்துவருகிறேன். ஒரு செடிதான் வைத்தேன். அது தற்போது படர்ந்து நல்ல பலனைக் கொடுக்கிறது. என்னைப் பார்த்து 10-க்கும் மேற்பட்ட நபர்கள் வீட்டில் திராட்சை வளர்க்க ஆரம்பித்துவிட்டனர். இதனால் மகிழ்ச்சியாக உள்ளது. திராட்சைச் செடிகளை சினிமாவில்தான் பார்த்துள்ளேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தற்போது நானே விவசாயம் செய்கிறேன் என்பது பெருமையாக இருக்கிறது. வீட்டில் இடம் உள்ளவர்கள், தங்களின் தேவையைப் பூர்த்தி செய்துகொள்ள வேண்டும். அதைத்தான் நம்மாழ்வார் அய்யா சொல்கிறார். ஒவ்வொரு வீட்டிலும் ஒரு முருங்கை மரமாவது இருக்க வேண்டும். என்னுடைய வீட்டில் இருக்கும் ஆப்பிள், அன்னாசி, ஆரஞ்சு எல்லாம் நல்லபடியாக வளர்ந்துள்ளன. விரைவில் அதிலும் நேரடியாக கனிகளைப் பெறுவேன். எனது வீட்டில் விளையும் காய்கறி, பழங்களை எப்போதும் யாராவது கேட்டால் இலவசமாகக் கொடுப்பேன்.

திராட்சைகளுடன் கவிதா
திராட்சைகளுடன் கவிதா

ஆனால், பணத்திற்கு விற்பனை செய்யக்கூடாதென்று உறுதியாக உள்ளேன். என்னைப் போல் வீட்டில் இருக்கும் பெண்கள், இது போன்ற பயிர்களை வீட்டுத் தோட்டத்திலோ, மாடியிலோ வளர்க்கலாம். என்னுடைய குழந்தைகளுக்கும் பயிர்கள் வளர்ப்புமுறையை கற்றுக்கொடுக்கிறேன். அதனால் அவர்களின் மனத்தில் என்னால் நல்ல எண்ணங்களை விதைக்க முடியும் என்று நம்புகிறேன். எனக்கு செடி வளர்ப்பில் சந்தேகம் இருந்தால் யூடியூப் தான் உதவி. என்னுடைய தொட்டிகளில் தேங்காய் நாறு, மணல், செம்மண், ஆடு, மாடுகளின் சாணம் ஆகியவற்றை அடியுரமாக இட்டுள்ளேன்.

மேலும், வீட்டில் மிஞ்சும் காய்கறிக் கழிவு, டீத்தூள், முட்டைக்கூடு ஆகியவற்றைப் பதம் செய்து தெளிப்பேன். பூச் செடிகளுக்கு, நறுக்கிய வாழைப் பழத் தோலுடன் ஒரு ஸ்பூன் காபித்தூள், டீத்தூள் சேர்த்து தண்ணீரில் நன்றாகக் கொதிக்க வைப்பேன். பின்னர், ஆறவைத்த அந்தக் கலவையுடன் தயிரை சேர்த்து இரண்டு நாள் கழித்து அதிக அளவு நீருடன் கலந்து பூச்செடிகளுக்குத் தெளிப்பேன். இதனால் பூக்கள் பூத்துக் குலுங்கும். இப்படி, ஒவ்வொரு ரக பயிருக்கும் வெவ்வேறு விதமான செயல்முறைகளைக் கையாள்கிறேன். திராட்சை உள்ளிட்ட பயிர்களுக்கு நேரடியாக விதைகள் பயன்படுத்துவதில்லை.

'ஒரே ஒரு செடிதான் வெச்சேன்..!’ -மாடித் தோட்டத்தில்  திராட்சைக் கொத்துகள்; அசத்தும் காரைக்குடி பெண்

பதிய முறையில் செடிகளை வெட்டி தான் வளர்க்கிறேன். எனக்கு இந்தச் செடிகள்மீது மிகுந்த ஆர்வம் வந்துவிட்டது. இதனால் எனக்கு எந்தப் பிரச்னை வந்தாலும் சமாளிக்கும் திறன் உள்ளது. மன அழுத்தம், கவலை என்று எது வந்தாலும் செடிகளைப் பார்த்தால் பறந்துவிடுகிறது" என்று சிலாகிக்கிறார், கவிதா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism