Published:Updated:

1 பழம் ஒன்றரை கிலோதான்; சிவப்பு பலாப்பழம் சிறப்பான வருமானம்; அசத்தும் ஏரோ ஸ்பேஸ் இன்ஜினீயர்!

பிரேம்குமார்

செம்பருத்தி ரக பலா மரக்கன்றுகள் மழையே இல்லை என்றாலும் தாக்குப் பிடிக்கும். மூன்று ஆண்டுகளுக்கு மட்டும் காப்பாற்றிவிட்டால் போதும். அடுத்து 100 ஆண்டுகளுக்குப் பலன் தரும்.

1 பழம் ஒன்றரை கிலோதான்; சிவப்பு பலாப்பழம் சிறப்பான வருமானம்; அசத்தும் ஏரோ ஸ்பேஸ் இன்ஜினீயர்!

செம்பருத்தி ரக பலா மரக்கன்றுகள் மழையே இல்லை என்றாலும் தாக்குப் பிடிக்கும். மூன்று ஆண்டுகளுக்கு மட்டும் காப்பாற்றிவிட்டால் போதும். அடுத்து 100 ஆண்டுகளுக்குப் பலன் தரும்.

Published:Updated:
பிரேம்குமார்

ராணிப்பேட்டை மாவட்டம், திமிரி அருகேயுள்ள மழையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரேம்குமார். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இவர் ஏரோ-ஸ்பேஸ் இன்ஜினீயராகப் பெங்களூருவில் பணிபுரிந்து வருகிறார். உழவுத் தொழிலில் ஆர்வம் கொண்ட பிரேம்குமார் கர்நாடக மாநிலத்தின் வறட்சியானப் பகுதிகளில் அமோகமாக விளையும் சிவப்பு நிறமுடைய பலாச்சுளை மரங்களைப் பார்த்து வியந்துபோயிருக்கிறார். `வீடுதோறும் ஒரு பலாமரம் இருக்க, பசியைக் கண்டு கலங்குவதேன்...’ என்ற மலைப்பகுதி முதுமொழியால் ஈர்க்கப்பட்ட அவர்... சிவப்பு ரக பலா மரக்கன்றுகளைத் தமிழக விவசாயிகளிடமும் கொண்டு சேர்க்க வேண்டும் என்று முடிவுசெய்தார். சிவப்பு ரக பலாச்சுளைகளைப் பார்க்கும்போது, செம்பருத்திப் பூக்களைப்போல அவருக்குத் தெரிந்ததால், `செம்பருத்தி’ பலா கன்று எனப் பெயரிட்டு உற்பத்தி செய்யத் தொடங்கியிருக்கிறார்.

ராணிப்பேட்டை ஆட்சியர் பாஸ்கர பாண்டியனுடன் பிரேம்குமார்
ராணிப்பேட்டை ஆட்சியர் பாஸ்கர பாண்டியனுடன் பிரேம்குமார்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சொந்தக் கிராமமான மழையூரில், மாதிரி தோட்டக்கலை பண்ணை அமைத்து, இதுவரை 1,500 செம்பருத்தி வகை பலா கன்றுகளை ராணிப்பேட்டை விவசாயிகளிடம் கொண்டு சேர்த்திருக்கிறார். ஒரு கன்று 250 ரூபாய் என விற்பனைச் செய்கிறார். தமிழகத்தில் விளையும் மஞ்சள் பலாச்சுளைக்கும், சிவப்பு நிறமுடைய செம்பருத்தி ரக பலாச்சுளைக்கும் உண்டான வேறுபாடுக் குறித்து பிரேம்குமாரிடமே கேட்டோம். ``செம்பருத்தி ரக பலா சிவப்பு நிறத்தில் ஒரே அளவில் மிகவும் சுவையான சுளைகளைக் கொண்டிருக்கும். கொட்டைகள் சிறியதாகவும், சுளைகளின் சதைப்பகுதி அதிகமாகவும் இருக்கும். 5 நாள்கள் வரை அழுகாமல் தாக்குப்பிடிக்கும். பிஞ்சு வகை பலாக்காய்கள் அசைவத்துக்கு மாற்றாகவும் பயன்படுத்தப்படுகின்றன.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் டென்டர் ஜாக் ஃப்ரூட் என்று சொல்லக்கூடிய பலாப் பழத்தை அதிக அளவில் விரும்பிச் சாப்பிடும் பழக்கம் உருவாகியிருக்கிறது. பலாக்காயைத் தூளாக்கி சர்க்கரை நோய்க்கு மருந்தாகவும் பயன்படுத்தலாம். பலாப்பழத்தின் தோலிலிருந்து எடுக்கப்படும் ஆசிட் `ஜாம்’ தயாரிப்புக்கும் பயன்படுகிறது. மஞ்சள் நிறப் பலாச்சுளை ஒன்றை 5 ரூபாய்க்கு விற்பனைச் செய்தால், சிறப்பு நிறப் பலாச்சுளை ஒன்று ரூ.10-லிருந்து 15 ரூபாய் வரை விற்பனையாகும். இதனால், விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும். மஞ்சள் பழத்தைவிட சிவப்பு நிறப் பழத்தில் ஊட்டச்சத்து அதிகம்.

சிவப்பு நிறப் பலாச்சுளைகள்
சிவப்பு நிறப் பலாச்சுளைகள்

செம்பருத்தியில் நான்கைந்து ரகங்களை வைத்திருக்கிறேன். ஒன்றரை கிலோ எடையில் காய்க்கும் ரகம், 30 சுளைகள் உடைய இரண்டரை கிலோ எடையிலான ரகம், ஐந்திலிருந்து பத்து கிலோவுக்குள் காய்க்கும் ரகம், 15 கிலோ எடை மற்றும் 20 கிலோ எடையில் காய்க்கும் ரகங்களை தாய் மரத்திலிருந்து உற்பத்தி செய்து வருகிறேன். மாந்தோட்டம் வைப்பதுபோல பலாத்தோட்டத்தை அமைக்கலாம். ஒரு ஏக்கரில் 70 பலா மரக்கன்றுகளை நடவு செய்யலாம். மழையே இல்லை என்றாலும் செடிகள் தாக்குப் பிடிக்கும். மூன்று ஆண்டுகளுக்கு மட்டும் காப்பாற்றிவிட்டால் போதும். அடுத்து 100 ஆண்டுகளுக்குப் பலன் தரும். இது, நாட்டு ஒட்டு ரகம்தான். ஹைபிரீட் ரகம் கிடையாது’’ என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism