கேரளாவில் `பாம்பு மனிதன்', `பாம்பு பிடி மன்னன்' என்றழைக்கப்படும் வாவா சுரேஷ், ராஜநாகம் உட்பட 50,000-க்கும் மேற்பட்ட பாம்புகளைப் பிடித்திருக்கிறார். அவருடைய பாம்பு பிடிக்கும் புகைப்படங்களுக்கென்று சமூக ஊடகத்தில் ரசிகர் பட்டாளமும் உண்டு. இந்நிலையில், கோட்டயம் அருகே ஒரு நாகப் பாம்பை அவர் பிடிக்கும்போது, அது சுரேஷை கடித்துவிட்டது. சுரேஷ் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்ற செய்தி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
வாவா சுரேஷ் பாம்பிடம் கடி வாங்குவது முதல் முறை அல்ல என்றாலும், அவர் குணமடைய பலரும் பிரார்த்தனை செய்து வந்தனர். தற்போது, வாவா சுரேஷின் உடல் நிலை குணமடைந்த தாகவும், அவர் நினைவு திரும்பி பேசினார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது.
மனிதாபிமான அடிப்படையில் வாவா சுரேஷுக்காக மக்கள் பிரார்த்தனை செய்தாலும், அறிவியல்பூர்வமாகப் பார்த்தால் அவர் செய்த தவறுகள் அடிப்படையிலேயே, அவரை பாம்பு கடித்ததாகவும், பாம்பு பிடிப்பதற்கென சில விதிமுறைகள் உள்ளது, அதை மீறி திறமைகளையும் வீரத்தையும் வெளிக்காட்டுவதற்காகப் பாம்பு பிடிப்பதைப் பயன்படுத்திக் கொண்டதே இதற்குக் காரணம் என்கின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.

பாம்புகளைப் பிடித்த பின்னர், அவற்றை உடனடியாகப் பாதுகாப்பான பைகளில் அடைக்க வேண்டும் எனவும், சுற்றியிருக்கும் கூட்டத்துக்கு படம் பிடித்து போஸ் கொடுத்து, சமூகவலைதளங்களில் பதிவிட்டு, அதற்கு கிடைக்கும் கமென்ட்ஸ், லைக் போன்றவற்றுக்காக உயிரைப் பணயம் வைப்பது நல்லததல்ல என்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.