Published:Updated:

1 ஏக்கர்... 45 நாள்கள்... ரூ.1,20,000... - கவிதாவின் மல்லித்தழை மகசூல் உத்திகள்!

கவிதா
கவிதா

வாழை இன்னும் அறுவடைக்கு வரலை. மல்லி அறுவடைக்குத் தயார்நிலையில இருக்கு. முழுக்க முழுக்க இயற்கை விவசாயம்தான் செய்யறோம்.

தனது குடும்பத்துக்குச் சொந்தமான ஆறு ஏக்கர் தென்னந்தோப்பில் ஊடுபயிராகச் சுழற்சி முறையில் மல்லித்தழைச் சாகுபடி செய்துவருகிறார் கோயம்புத்தூர் மாவட்டம், சுல்தான்பேட்டையை அடுத்துள்ள பச்சார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பெண் விவசாயி கவிதா. கமகம வாசம் வீசும் கொத்தமல்லி வயலில் அறுவடை வேலையிலிருந்த கவிதாவைச் சந்தித்துப் பேசினோம்.

''எங்களுக்கு மொத்தம் 10 ஏக்கர் நஞ்சை நிலம் இருக்கு. முழுக்க முழுக்க கிணத்துப்பாசனம்தான். இந்த இடத்தில ஆறு ஏக்கரும் இன்னொரு இடத்தில நாலு ஏக்கரும் இருக்கு. இந்த ஆறு ஏக்கர்ல தென்னை இருக்கு. நாலு ஏக்கர் நிலத்துல காய்கறிச் சாகுபடி செய்யறோம். அதுல ஒரு ஏக்கர்ல பந்தல் காய்கறிகளை ஏத்தி விட்டிருந்தோம். இப்போ பந்தல்ல காய்கறி இல்லை. அதனால அந்த நெலத்துல உழவு நடக்குது. விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/2XnVr61

1 ஏக்கர்... 45 நாள்கள்... ரூ.1,20,000... - கவிதாவின் மல்லித்தழை மகசூல் உத்திகள்!

10 ஏக்கர்லையும் முழுக்க முழுக்க இயற்கை விவசாயம்தான் பண்றோம். 10 ஏக்கர்லயும் காய்கறி போட விருப்பம் இருந்தாலும் ஆள் பற்றாக்குறையை மனசுல வெச்சு, ஆறு ஏக்கர்ல தென்னை நடவு செஞ்சிருக்கோம். அதுவும் காய்ப்புக்கு வந்திடுச்சு. போதுமான தண்ணி கிணத்துல இருக்கு. அதனால தென்னையில ஊடுபயிரா ரெண்டு ஏக்கர்ல வாழையும், ஒரு ஏக்கர்ல மல்லியும் போட்டிருக்கோம்.

வாழை இன்னும் அறுவடைக்கு வரலை. மல்லி அறுவடைக்குத் தயார்நிலையில இருக்கு. முழுக்க முழுக்க இயற்கை விவசாயம்தான் செய்யறோம். நாட்டு மாடுகள் வெச்சிருக்கோம். அதுக மூலமா பஞ்சகவ்யா, அமுதக்கரைசல்னு தயாரிச்சு பயிர்களுக்குக் கொடுக்கிறோம். தொழுவுரத்துல உயிர் உரங்கள் கலந்து, செறிவூட்டம் செய்யப்பட்ட உரமா மாத்தி பயிர்களுக்கு அடியுரமா கொடுப்பதை வழக்கமாவெச்சிருக்கோம்'' என்ற கவிதா மல்லிச் சாகுபடி குறித்து விரிவாகப் பேசினார்.

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo

''தென்னையில ஊடுபயிரா ரெண்டு ஏக்கர்ல மல்லி போடுறது வழக்கம், 45 நாள்கள்ல அறுவடைக்கு வந்திடும் குறுகியகாலப் பயிரான அதைச் சுழற்சி முறையிலதான் விதைப்போம். ரெண்டு ஏக்கர் நிலத்தை நான்கு பகுதியாகப் பிரிச்சு விதைப்போம். அதனால வருஷம் முழுசும் எங்க தோட்டத்துல மல்லி இருக்கும். இப்போ ஒரு ஏக்கர்ல மல்லி இருக்கு. அரை ஏக்கர்ல அறுவடை செஞ்சிட்டோம்.

அது கிலோ 40 ரூபாய்க்குப் போச்சு. நாங்க கேரள வியாபாரிகளுக்கு மொத்தமாக விலை பேசி வித்திடுவோம். அறுவடை, வேன் வாடகை எல்லாம் வியாபாரி கணக்குல வந்துடும். சரியாகப் பராமரிப்பு செஞ்சா, தனிப்பயிராக ஏக்கருக்குக் குறைந்தபட்சம் எட்டு டன் வரைக்கும் மகசூல் கிடைக்கும். ஊடுபயிராகச் செய்யும்போது மூணு டன் எடுக்கலாம். இப்போ ஒரு கிலோ 60 ரூபாய்க்கு விற்பனையாகுது. தழை நல்லா இருக்குது. மூணு டன் மகசூல் எதிர்பார்க்கிறோம்.

1 ஏக்கர்... 45 நாள்கள்... ரூ.1,20,000... - கவிதாவின் மல்லித்தழை மகசூல் உத்திகள்!

சராசரியா 40 ரூபாய் விலை போனாலும் அது மூலமா 1,20,000 ரூபாய் வருமானமாக் கிடைக்க வாய்ப்பிருக்குது. உழவுல இருந்து அறுவடை வரைக்கும் ஏக்கருக்கு 10,000 ரூபாய் செலவு பிடிக்கும். அதுபோக, 1,10,000 ரூபாய் லாபமாகக் கிடைக்கும். வேற எந்தப் பயிர்லயும் இவ்வளவு குறைஞ்ச நாள்கள்ல இந்த அளவுக்கு லாபம் கிடைக்காது'' என்றவர், ''மல்லியைத் திரும்பத் திரும்ப ஒரே நிலத்தில விதைக்கக் கூடாது. அதேபோல விதைத் தேர்வும் முக்கியம். விதைகளின் முளைப்புத்திறன் என்ன என்பதையும் பார்த்து வாங்கணும். அரை ஏக்கர், ஒரு ஏக்கர்னு நம்ம வசதிக்குத் தகுந்த மாதிரி பிரிச்சு சுழற்சி முறையில விதைக்கணும். இலை வகைப் பயிரான மல்லித்தழை அப்போதான் சிறப்பாக வளர்ந்து லாபம் கொடுக்கும்" என்றார்.

- மல்லிச் சாகுபடி செய்யும் முறைகள் குறித்து கவிதா சொன்ன தகவல்கள் இங்கே பாடமாக… > பசுமை விகடன் இதழில் முழுமையாக வாசிக்க > https://www.vikatan.com/news/agriculture/coriander-leaves-cultivation-brings-better-income

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo

அடுத்த கட்டுரைக்கு