Published:Updated:

`ட்ரோன்' மூலம் மருந்து தெளிப்பு - விதை தூவுதல்: விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம்!

பயிர்களுக்கு ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கப்பட்டது

ராமநாதபுரம் மாவட்டத்தில் முதல் முறையாக 'ட்ரோன் மூலம் பயிர்களுக்கு மருந்து மற்றும் விதை தூவுதல் குறித்து விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

`ட்ரோன்' மூலம் மருந்து தெளிப்பு - விதை தூவுதல்: விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம்!

ராமநாதபுரம் மாவட்டத்தில் முதல் முறையாக 'ட்ரோன் மூலம் பயிர்களுக்கு மருந்து மற்றும் விதை தூவுதல் குறித்து விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

Published:Updated:
பயிர்களுக்கு ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கப்பட்டது

ராமநாதபுரம் வேளாண் அறிவியல் ஆராய்ச்சி நிலையம் சார்பில் விவசாயிகளுக்கு ட்ரோன் தொழில்நுட்பம் மூலம் மருந்து தெளிப்பது எப்படி, அதனால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் தீமைகள் குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கம் செய்து காண்பிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆராய்ச்சி நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ராகவன் தலைமை தாங்கினார்.

வயலில் உரம் தெளிக்கும் ட்ரோன்
வயலில் உரம் தெளிக்கும் ட்ரோன்
ம.அரவிந்த்

தோட்டக்கலை விஞ்ஞானி டாக்டர் பாலசுப்பிரமணியன், 'ட்ரோன் தொழில்நுட்பம்' மூலம் மருந்து தெளிப்பதில் உள்ள விவசாயிகளின் சந்தேகங்களுக்கு விடையளித்தார் . நிகழ்ச்சிக்கு பின்னர் விவசாயிகளுக்கு 'ட்ரோன்' மூலம் மருந்து தெளித்தல், விதைகள் தூவுதல் பணிகளை செயல்முறை விளக்கம் செய்து காட்டப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த தொழில்நுட்பம் முதன் முறையாக அறிமுகப் படுத்தப்பட்டு உள்ளது.

இதுகுறித்து திட்ட ஒருங்கிணைப்பாளர் ராகவன் பேசும்போது, "விவசாயத்தில் ட்ரோனின் பயன்பாடு அடுத்த தொழில்நுட்ப அலையாகும். விவசாயத்தில் ட்ரோன்களை பயன்படுத்துவதன் மூலம் காலநிலை மாற்றங்களை சமாளித்து எதிர்கால வேளாண் உற்பத்தி தேவைகளை பூர்த்தி செய்ய முடிகிறது.

'ட்ரோன் பயன்படுத்துவதால் மருந்து கலவை நீர்த்துளிகள் பயிர்களில் இலைகளின் மீது நேரடியாக பாய்வதால் சராசரியை விட அதிக விளைச்சல் கிடைக்கிறது. மேலும், 90 சதவீத தண்ணீர் உபயோகத்தையும், 40 சதவீத பூச்சிக்கொல்லி மருந்தின் அளவையும் கணிசமாக குறைக்க முடிகிறது. இந்த தொழில் நுட்பத்தின் மூலம் மரங்கள், செடிகள், பந்தல் கொடிகளுக்கும் மருந்து தெளிக்கலாம்.

விவசாயிகளுக்கு ட்ரோன் செயல்முறை விளக்கம் செய்து காட்டப்பட்டது.
விவசாயிகளுக்கு ட்ரோன் செயல்முறை விளக்கம் செய்து காட்டப்பட்டது.

சவாலான மலைச்சரிவுகள், மனிதர்கள் நுழைய முடியாத பகுதிகளில் குறிப்பாக கரும்பு. குச்சிகிழங்கு விளையும் இடங்களில் ட்ரோன் மூலம் விரைவில் மருந்து தெளிக்கலாம். ஒரு நாளைக்கு 30 முதல் 40 ஏக்கர் வரை ட்ரோன் மூலமும், 10 முதல் 15 நிமிடங்களில் ஒரு ஏக்கரிலும் மருந்து தெளிக்கலாம். நிலத்தில் ரசாயனங்களை சரியான அளவு முறையாக பயன்படுத்துவதால் விவசாயிகளின் உற்பத்தி செலவு குறைகிறது. லாபம் அதிகரிக்கிறது.

வேலையாட்கள் பற்றாக்குறையால் குறித்த நேரத்தில் மருந்து தெளிக்க முடியாத நிலையை இந்த ட்ரோன் தொழில்நுட்பம் நீக்குகிறது. தாவரங்களின்மேல் சரியான அளவு சீராக மருந்து தெளிக்கப்படுவதால் பயிர்களின் வளர்ச்சி நன்றாக இருக்கிறது. தஞ்சாவூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த ட்ரோன் தொழில்நுட்பம் அதிக அளவில் பயன்படுத்தி வரும் சூழ்நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் முதன் முறையாக இந்த தொழில் நுட்பம் அறிமுகப் படுத்தப்படுகிறது. பெரு விவசாயிகளுக்கு இந்த ட்ரோன் தொழில்நுட்பம் அதிக அளவில் கை கொடுக்கும்'' என தெரிவித்தார்.