Published:Updated:

`ஊதியம் உயர்த்துவதால் மட்டுமே ஊழல் ஒழிந்துவிடாது முதல்வரே!' - நெல் கொள்முதல் நிலைய நிலவரம்

மு.க.ஸ்டாலின்
News
மு.க.ஸ்டாலின்

நெல் கொள்முதல் நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு போதுமான அளவு ஊதியம் வழங்கப்படாததால்தான் இவர்கள் இதுபோன்ற தவறுகளில் ஈடுபடுகிறார்கள் என்ற ஒரு பொதுவான கருத்து நிலவி வருகிறது.

Published:Updated:

`ஊதியம் உயர்த்துவதால் மட்டுமே ஊழல் ஒழிந்துவிடாது முதல்வரே!' - நெல் கொள்முதல் நிலைய நிலவரம்

நெல் கொள்முதல் நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு போதுமான அளவு ஊதியம் வழங்கப்படாததால்தான் இவர்கள் இதுபோன்ற தவறுகளில் ஈடுபடுகிறார்கள் என்ற ஒரு பொதுவான கருத்து நிலவி வருகிறது.

மு.க.ஸ்டாலின்
News
மு.க.ஸ்டாலின்

தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தாண்டவமாடும் லஞ்ச லாவண்யம் மற்றும் முறைகேடுகளால், விவசாயிகள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகிறார்கள். தங்களது கடும் உழைப்பையும் முதலீட்டையும் செலுத்தி, பல்வேறு இடர்பாடுகளுக்கு இடையே நெல்லை விளைவிக்கிறார்கள். இதனை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்வது என்பது பெரும் சவாலாகவே இருந்து வருகிறது. பல மணிநேர காத்திருப்போடு மட்டுமல்லாமல் பல ஆயிரம் ரூபாய் லஞ்சமும் கொடுக்க வேண்டிள்ளது. இதுமட்டுமல்லாமல், கொசுறு நெல், ஈரப்பத சோதனை, கூடுதல் எடை எனப் பல விதங்களிலும் நெல் அபகரிக்கப்படுகிறது. இங்கு பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு போதுமான அளவு ஊதியம் வழங்கப்படாததால்தான் இவர்கள் இதுபோன்ற தவறுகளில் ஈடுபடுகிறார்கள் என்ற ஒரு பொதுவான கருத்து நிலவி வருகிறது.

நெல் கொள்முதல்
நெல் கொள்முதல்

இந்நிலையில்தான் இவர்களின் ஊதியத்தை உயர்ந்த தமிழக அரசு முடிவெடுத்திருப்பதாக, முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தஞ்சாவூரில் நடைபெற்ற, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், ``நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களது ஊதியத்தை உயர்த்தி தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.

அந்தக் கோரிக்கையை ஏற்று, மாத ஊதியமாக பட்டியல் எழுத்தருக்கு ரூ.5,285, உதவியாளர்களுக்கு ரூ.5,218 என உயர்த்தி வழங்கப்படும். இதில், அகவிலைப்படி ரூ.3,499-ம் சேர்த்து வழங்கப்படும். இதேபோல, சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு ஒரு மூட்டைக்கு ரூ.3.25 என்பது ரூ.10 என உயர்த்தி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக கூடுதலாக ரூ.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. எனவே, கொள்முதல் பணியாளர்கள் எவ்வித புகாருக்கும் இடமளிக்காமல் பணியாற்ற வேண்டும்" எனத் தெரிவித்தார். இதுகுறித்து விவசாயிகள் என்ன நினைக்கிறார்கள்?

நெல் கொள்முதல்
நெல் கொள்முதல்

தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் துணைச் செயலாளர் சுகுமாறனிடம் பேசினோம்.

``கொள்முதல் நிலைய ஊழியர்கள், சுமைதூக்கும் தொழிலாளர்களோட ஊதியத்தை உயர்த்தினது பாராட்டத்தக்கது. இதை நாங்க வரவேற்கிறோம். ஆனால் இதனால் இங்க லஞ்ச லாவண்யமும் முறைகேடுகளும் ஒழிஞ்சிடும்னு நம்பினால், அது மிகப்பெரிய முட்டாள்தனம். இதனால் விவசாயிகளுக்கு ஏமாற்றமும் விரக்தியும் அதிகமாகும். ஏன் இதை நான் சொல்றேனா, இங்கவுள்ள ஊழியர்களும், தொழிலாளர்களும் தன்னிச்சையா லஞ்ச லாவண்யங்கள்லயும் முறைகேடுகள்லயும் ஈடுபடுறதில்லை. மேலதிகாரிகளுக்கு இவங்க ஒரு கருவி. இதுல இவங்களுக்கும் ஆதாயம் இருக்குதான். ஆனால் விவசாயிகள்கிட்ட இருந்து சுரண்டப்படும் பணத்துல பெரும் பகுதி மேலதிகாரிகளுக்குத்தான் போய்கிட்டு இருக்கு.

கொள்முதல் அலுவலர், தர ஆய்வாளர், பறக்கும் படை அதிகாரிகள், துணை மேலாளர், முதுநிலை மண்டல மேலாளர் மட்டுமல்லாமல், இதுக்கு மேல உள்ள அதிகாரிகளுக்கும் லஞ்சப் பணத்தோட பங்கு போகுது. சணல், சாக்கு கொண்டு வரக்கூடிய அலுவலர்கள், கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை குடோன் கொண்டு போகக்கூடிய அதிகாரிகள் எல்லாருக்கும் கொள்முதல் நிலைய ஊழியர்கள் லஞ்சம் கொடுத்தாகணும்ங்கறது எழுதப்படாத விதிமுறையாக இருக்கு, இதுதான் யதார்த்தம் நிலைமை. கொள்முதல் நிலைய ஊழியர்களோட ஊதியத்தையும், சுமை தூக்கும் தொழிலாளர்களோட கூலியையும் உயர்த்திட்டா மட்டும் லஞ்சம், முறைகேடுகள் ஒழிஞ்சிடாது.

விவசாயி சுகுமாறன்i
விவசாயி சுகுமாறன்i

உண்மையாகவே இதை சரி பண்ணனும்னு நினைச்சா, லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு போலீஸ், கொள்முதல் நிலையங்களுக்கு திடீர் ஆய்வு செய்யணும். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் வீட்டுலயும் திடீர் சோதனை மேற்கொள்ளணும். சொத்து மதிப்பு, வங்கி கணக்குகளையும் ஒவ்வொரு வருசமும் ஆய்வு செய்யணும். வருமானத்துக்கு மீறி சொத்து, பணம் சேர்ந்து இருந்தால், முறையான விசாரணை நடத்தி சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளணும். இதையெல்லாம் செஞ்சாதான் ஓரளவுக்காவது லஞ்ச முறைகேடுகளை ஒழிக்க முடியும்’’ என்றார்.