Published:Updated:

சிவகங்கை: `விவசாயத்துக்காக உருவான கிராமம்’ - வேலிக்கருவையால் உருக்குலையும் அவலம்

இலந்தங்குடி கிராமம்
இலந்தங்குடி கிராமம்

கடந்த 5 வருசமா விவசாயம் இல்லை. கிராமம் முழுசும் வேலிக்கருவை மண்டிக்கிடக்கு. இதனால வறட்சியான பகுதியாக மாறிடிச்சு. பஸ் வசதிகள் கூட இல்லாம ரெம்ப கஷ்டப்படுறோம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தமிழகத்தில் மிகவும் பின் தங்கிய மாவட்டங்களில் சிவகங்கையும் ஒன்று. சொல்லும்படியா தொழில் வளங்களோ, வேலை வாய்ப்புகளோ இல்லை. பெருவாரியாக மானாவாரி விவசாயம்தான் செய்யப்படுகிறது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் கிராம மக்கள் வெளி மாவட்டங்களுக்கு பிழைப்பு தேடி வெளியேறிவருதாகக் கவலை தெரிவித்துள்ளனர்.

இலந்தங்குடி கிராமம்
இலந்தங்குடி கிராமம்

கிராமத்தைச் சேர்ந்த முருகன் நம்மிடம், "சிவகங்கை படமாத்தூர் அருகே உள்ளது இலந்தங்குடி கிராமம். வேங்கைமார்பன் காலத்தில் குடிகளை இழந்த வீரர்கள், மக்கள் வனமாகக் கிடந்த இடத்தில் குடியேறி கால்நடைகள் வளர்த்து விவசாயம் செய்துள்ளனர். அவ்வாறு குடிகளை இழந்த மக்கள் ஒன்றிணைந்து கிராமத்தை உருவாக்கியதால் 'இலந்தங்குடி' என்ற பெயர் பெற்றதாக வரலாறுகள் தெரிவிக்கின்றன. இப்படி விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான கிராமம், வரைபடத்தில் இருந்து அழியும் நிலைக்கு வந்துருக்கு.

சமீப காலகட்டத்தில்கூட எங்க கிராமத்தில் 150 குடியிருப்புகளுக்கு மேல் இருந்துச்சு. இன்றைய நிலைமைக்கு சொல்லும்படியாக 25 குடியிருப்புகூட இல்ல. காரணம் தற்போது வரை குடிதண்ணீர் கிடையாது. 2 கிலோ மீட்டர் இருக்கும் உப்பாற்றில்தான் தண்ணி. அதுவும் குழிதோண்டி தண்ணீர் ஊற்று ஊரும் வரை காத்திருந்து சிறுகச் சிறுக சேர்த்து எடுத்துட்டுவரணும். கேன் தண்ணி வேணும்னா படமாத்தூர் கிராமத்தூர் கடைக்குப் போன் அடுச்சா 3 மணி நேரத்துக்கு அப்பரம் தான் தண்ணி கொண்டுவருவாங்க.

இலந்தங்குடி கிராமம்
இலந்தங்குடி கிராமம்

உப்பாற்றில் செழுமையா தண்ணி வந்தாதாதான் விவசாயம் செய்ய முடியும். கடந்த 5 வருசமா விவசாயம் இல்லை. கிராமம் முழுசும் வேலிக்கருவை மண்டிக்கிடக்கு. இதனால வறட்சியான பகுதியாக மாறிடிச்சு. பஸ் வசதிகள்கூட இல்லாம ரொம்ப கஷ்டப்படுறோம். பஸ்க்கு போகணும்னாகூட 5 கிலோ மீட்டர் நடந்தே படமாத்தூர் இல்லாட்டி சித்தலூர் தான் போகணும். இதனால ஜனங்க பிழைக்க வழி இல்லாமல் கிராமத்தைவிட்டு பலரும் வெளியூர் பக்கம் போய்ட்டாங்க. இடிஞ்சு போன வீடுகளும் வேலிக்கருவையும் பெருகிப்போச்சு. இருக்க கரன்டு கம்பிங்க கூட பழுதாகிருச்சு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதனால கலெக்டர் சார் உதவி செய்து, வேலிக்கருவை மரங்களை அகற்றி, குடிதண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்யணும். ஆழ்துளைக் கிணறு அமைச்சு, விவசாயிகளுக்கு மாற்றுப் பயிர்கள் பயிரிட பயிற்சிகள் வழங்கி உதவி செய்யணும். வேலிக் கருவைய முழுசரா அழிச்சுட்டா கண்டிப்பாக ஊர் ஜனங்க வாழ்வாதாரத்தை மீட்க முடியும். கோழிப் பண்ணை, ஆடு வளர்ப்புனு விவசாய உப தொழில்களையும் வறட்சிக்கு தகுந்த பயிர்களைப் பயிரிட்டு தொழில பெருக்கிக் கொள்வோம்" என்றார்.

கிராமத்தில் வெறிச்சோடிய நிலை
கிராமத்தில் வெறிச்சோடிய நிலை

கிராமத்து பெண்கள் சிலர், ``குடிக்க தண்ணி இல்லாட்டியும் வெளியூர் போய் அண்டிப் பொழைக்க நினைக்காம தான் வாழ்ந்துக்கிட்டு இருக்கோம். எங்களுக்கு பெரிய உதவியெல்லாம் செய்யாட்டியும் அடிப்படை வசதியாவது பூர்த்தி செய்யணும். இல்லாட்டி எங்க ஊர்ல பொண்ணு எடுக்குறதுக்கும் பொண்ணு குடுக்குறதுக்கு கூட யோசிப்பாங்க" என்றனர்.

இந்தக் கிராமத்தின் நிலை குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் அவருக்கு கீழே உள்ள அதகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளோம். மேலும் மாவட்டம் நிர்வாகம் சார்பாக அதிகாரிகள் சிலர், ``மக்கள் கோரிக்கையை கலெக்டர் சாரிடம் பேசுகிறேன் என்று நம்பிக்கை” தெரிவித்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு