Published:Updated:

மானியத்துடன் கிடைக்கும் சூரிய கூடார உலர்த்திகள்... எதற்கு உதவும்?

துரை.நாகராஜன்

இதர விவசாயிகளுக்கு மொத்த விலையில் 50 சதவிகிதம் அல்லது 3,00,000 ரூபாய் இவற்றில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படும்.

solar dryer
solar dryer

தமிழ்நாடு அரசு வேளாண்மைப் பொறியியல் துறை, வேளாண் விளை பொருள்களை உலர்த்திட சூரிய கூடார உலர்த்திகளுக்கும் பண்ணைக்குட்டை அமைக்கவும் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படவிருக்கிறது.

வேளாண் விளைபொருள்களை அறுவடைக்குப் பிறகு, சூரிய வெப்பத்தைப் பயன்படுத்தி அவற்றைப் பாதுகாப்பான கூடாரங்களில் உலர வைத்து சந்தையில் மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களாக விற்பனை செய்ய ஏதுவாக, பாலிகார்பனேட் தகடுகளாலான பசுமைக் குடில் வகை சூரிய கூடார் உலர்த்திகள் விவசாயிகளுக்கு மானியத்துடன், வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் அமைத்துத் தரப்படுகிறது. சூரிய கூடார உலர்த்தியில் வேளாண் விளை பொருள்களை உலர வைப்பதன் மூலம் விளை பொருள்களை உலர்த்துவதற்கான காலஅளவு, கூலியாட்கள் செலவு, அறுவடைக்குப் பின் ஏற்படும் இழப்பு ஆகியவை குறைகின்றன. விளைபொருள்கள் சுகாதாரமான முறையில் இயற்கைத் தன்மை மாறாமல் உலர்வதால் அவற்றின் தரம் உயர்த்தப்படுவதுடன், பூஞ்சைக்காளான் படிவதும் தவிர்க்கப்படுகிறது.

விவசாயிகளின் தேவைக்கேற்பவும், இடவசதிக்கேற்பவும் சூரிய கூடார உலர்த்திகள் 400 முதல் 1000 சதுர அடி வரையிலும் அமைத்துக் கொடுக்கப்படுகிறது.

என்னென்ன பொருள்களை உலர்த்தலாம்?

வேளாண் விளை பொருள்களான மிளகாய், முருங்கைக்கீரை, கறிவேப்பிலை, கொப்பரை தேங்காய், பாக்கு, தேயிலை, காப்பிக்கொட்டை, வாழை, மாம்பழம் உள்ளிட்ட பழ வகைகள், பூண்டு, கிராம்பு, ஏலக்காய் உள்ளிட்ட வாசனைப் பொருள்கள், மூலிகைச் செடிகள், காளான் ஆகியவற்றை உலர்த்தி, மதிப்புக் கூட்டப்பட்ட விளை பொருள்களாக விற்பனை செய்து விவசாயிகள் அதிக இலாபம் பெற இயலும்.

இடம்!

விவசாயிகளின் தேவைக்கேற்பவும், இடவசதிக்கேற்பவும் சூரிய கூடார உலர்த்திகள் 400 முதல் 1000 சதுர அடி வரையிலும் அமைத்துக் கொடுக்கப்படுகிறது. சூரிய கூடார உலர்த்திகளுக்கான விலை நிர்ணயம் மற்றும் அதை அமைத்துக் கொடுக்கும் நிறுவனங்களை அங்கீகரித்தல் ஆகியவை விலை நிர்ணய ஒப்பந்தப்புள்ளி மூலம் வேளாண்மைப் பொறியியல் துறையால் மேற்கொள்ளப்படுகிறது. வேளாண்மைப் பொறியியல் துறையால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிலிருந்து தங்களுக்கான நிறுவனத்தினை விவசாயிகளே தேர்வு செய்து கொள்ளலாம்.

ஷாக் அடிக்குது சோலார் ஊழல் - ஒரு மெகாவாட் அமைக்க 25 லட்சம்!

2018-19-ம் ஆண்டில் சூரிய கூடார உலர்த்திகள் அமைக்க நிர்ணயிக்கப்பட்ட விலை விவரம்!

400 முதல் 600 சதுர அடிவரை அமைக்க 1சதுர அடிக்கு 794 ரூபாயும், 600 முதல் 800 சதுர அடிவரை அமைக்க 1 சதுர அடிக்கு 789 ரூபாயும், 800 முதல் 1000 சதுர அடி வரை 1 சதுர அடிக்கு 743 ரூபாயும் விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. நடப்பாண்டில் (2019-20) 5,000 கோடி ரூபாய் மானியத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. நடப்பாண்டில் சூரிய கூடார உலர்த்திகள் அமைத்திட விலை நிர்ணயம் செய்து, நிறுவனங்களை அங்கீகரிக்க விலை நிர்ணய ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளன.

மானிய விபரம்!

சூரிய கூடார உலர்த்திகள் விவசாயிகள் மற்றும் விவசாயக் குழுக்களுக்கு கீழ்க்கண்ட மானியத்துடன் அமைத்துத் தரப்படுகிறது.

1) வேளாண்மை இயந்திரமயமாக்குதல் துணை இயக்கத் திட்ட வழிகாட்டு நெறிமுறைகளின் படி சிறு, குறு, ஆதி திராவிடர், பழங்குடியினர் மற்றும் பெண் விவசாயிகளுக்கு மொத்த விலையில் 60 சதவிகிதம் அல்லது 3,50,000 ரூபாய் இவற்றில் எது குறைவோ அந்தத் தொகை மானியமாக வழங்கப்படும்.

solar dryer
solar dryer

2) இதர விவசாயிகளுக்கு மொத்த விலையில் 50 சதவிகிதம் அல்லது 3,00,000 ரூபாய் இவற்றில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படும்.

பயன் பெற விரும்பும் விவசாயிகள்/விவசாயக் குழுக்கள் அருகிலுள்ள வேளாண் பொறியியல் துறையின் அலுவலகத்தினை அணுகி பயன் பெறலாம்.

விவசாயிகளுக்கு 100 சதவிகித மானியத்தில் பண்ணைக் குட்டைகள் அமைக்கும் திட்டம்!

மழை நீரினை விவசாய நிலங்களிலேயே சேமித்து வைத்து, பயிர்களுக்குப் பயன்படுத்திட விவசாயிகளுக்கு உதவும் வகையில் விவசாயிகளுக்குப் பண்ணைக் குட்டைகள் 100 சதவிகித மானியத்துடன் அமைத்துக் கொடுக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

`நிஜ ஆர்கானிக் பொருள்களை எப்படி கண்டுபிடிப்பது?’ - விளக்கும் இயற்கை விவசாய ஆர்வலர்

பண்ணைக்குட்டை அமைக்கும் திட்டம்!

காவிரி டெல்டா கடைமடை விவசாயிகள், கடலோரப் பகுதி விவசாயிகள் மற்றும் வறட்சிப் பகுதியிலுள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் 10,000 பண்ணைக் குட்டைகள் ரூ.100 கோடி செலவில் நபார்டு வங்கி நிதியுதவியுடன் வேளாண்மைப் பொறியியல்துறை மூலம் அமைத்திடத் தமிழக அரசால் 2018-19 ஆம் ஆண்டில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

இந்தத் திட்டத்தின் கீழ் 100 சதவிகித மானியத்தில் விவசாயிகளுக்குப் பண்ணைக் குட்டைகள் அமைத்துக் கொடுக்கப்படுகிறது. 2019-20-ம் ஆண்டில் 8,202 பண்ணைக் குட்டைகள் கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை , இராமநாதபுரம், விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் விவசாயிகளுக்கு 100 சதவிகித மானியத்தில் அமைத்திட அரசாணை வழங்கப்பட்டு பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

farm pond
farm pond

இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளின் இடவசதிக்கேற்ப வெவ்வேறு அளவுகளில் பண்ணைக் குட்டைகள் அமைத்துக் கொள்ளலாம். 30 மீ நீளம், 30 மீ அகலம் மற்றும் 2 மீ. ஆழம் என்ற அளவிலுள்ள பண்ணைக் குட்டைகள் அமைக்க சுமார் 1,00,000 ரூபாய் வழங்கப்படும். கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை , புதுக்கோட்டை, இராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களிலுள்ள ஆர்வமுள்ள விவசாயிகள் அருகிலுள்ள வேளாண்மைப் பொறியியல் துறையின் அலுவலகத்தினை அணுகி விண்ணப்பித்துப் பயன்பெறலாம்.

தொடர்புக்கு,

தலைமைப் பொறியாளர் (வே.பொ),

வேளாண்மைப் பொறியியல் துறை,

எண்.487, அண்ணாசாலை,

நந்தனம், சென்னை - 600 035,

தொலைபேசி எண் - 044 2435 2686

மின்னஞ்சல் - aedcewrm@gmail.com