Published:Updated:

சொர்க்கம் என்பது என் வீட்டுத் தோட்டம்... தோட்டக்கலையில் அசத்தும் யூடியூபர்!

கிம், ஜெர்ரி
பிரீமியம் ஸ்டோரி
கிம், ஜெர்ரி ( Image by Mizter_X94 from Pixabay )

#Entertainment

சொர்க்கம் என்பது என் வீட்டுத் தோட்டம்... தோட்டக்கலையில் அசத்தும் யூடியூபர்!

#Entertainment

Published:Updated:
கிம், ஜெர்ரி
பிரீமியம் ஸ்டோரி
கிம், ஜெர்ரி ( Image by Mizter_X94 from Pixabay )

‘அனுபவமே சிறந்த ஆசான்’ என்பதைத் தன் தோட்டத்தின் மூலம் நிரூபித்துக்கொண்டே இருக்கிறார் காலிகிம். ‘கொல்லைப்புற ஆர்கானிக் தோட்டக்காரி’ என்ற அடைமொழிக்குச் சொந்தக்காரரான கிம், கலிஃபோர்னியாவைச் சேர்ந்த நடுத்தர வயதுப் பெண்.

பத்து குழந்தைகள் உள்ள பெரிய குடும்பத்தில் பிறந்த கிம்முக்கு சிறுவயதிலேயே தோட்டக்கலையைக் கற்றுக்கொள்ள வாய்ப்பு அமைந்தது. “நானும் என்னுடன் பிறந்தவர்களும் எங்கள் வீட்டுத் தோட்டத்தில் ஒரு நாளைக்கு பல மணி நேரம் வேலை செய்வோம். செலவைக் குறைப்பதற் காகவும் எங்கள் பெரிய குடும்பத்துக்குத் தேவையான உணவை உற்பத்தி செய்வதற்காகவும் பெற்றோர் எங்கள் தோட்டத்திலேயே விவசாயம் செய்தனர். பீன்ஸ், மக்காச்சோளம், தக்காளி, ஸுகினி என காய்கறிகளை அறுவடை செய்வது பேரானந்தமாக இருக்கும்.

சொர்க்கம் என்பது என் வீட்டுத் தோட்டம்... தோட்டக்கலையில் அசத்தும் யூடியூபர்!

பதப்படுத்தி வைத்திருக்கும் எங்கள் வீட்டுக் காய்கறிகளைத் தான் குளிர்காலத்தில் சமைத்துச் சாப்பிடுவோம். கோடைக்கால உழைப்பின் பலனாகத்தான் குளிர் காலத்திலும் நமது தட்டில் சாப்பாடு இருக்கிறது என்பார் என் அம்மா” என்பவரின் வாழ்க்கை, திருமணத் துக்குப் பிறகு தலைகீழானது.

தோட்டத்தில் விளைந்த புத்தம் புது காய்கறிகளையும் தானியங் களையும் சாப்பிட்டவருக்கு நகரத்தில் சூப்பர் மார்க்கெட்டில் விற்கப்படும் பதப்படுத்தப்பட்ட உணவுகளைச் சாப்பிட வேண்டிய நிலை.

“ரசாயனங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் உதவியுடன் வளர்க்கப் பட்டு, பதப்படுத்தப்பட்ட, சுவை யற்ற, ஆரோக்கியமற்ற உணவுப் பொருள்களை என் கணவருக்கும் இரண்டு குழந்தைகளுக்கும் கொடுப்பது கவலை அளித்தது.

சொர்க்கம் என்பது என் வீட்டுத் தோட்டம்... தோட்டக்கலையில் அசத்தும் யூடியூபர்!

அந்த நேரத்தில்தான் சிறு வயதில் செய்த தோட்ட வேலை நினைவுக்கு வந்தது. கொல்லைப் புற வசதியுள்ள ஒரு வீட்டுக்கு மாறினோம். அருகிலுள்ள தோட்டக்கலை மையத்தில் மண், பூச்சிக்கொல்லி, விதைகள் அனைத்தையும் வாங்கினேன்.

தோட்டம் அமைத்து காய்கறிகளை அறுவடை செய்தேன். அப்போதுதான் பல நூறு டாலர்கள் செலவழிந்ததையும், அந்த உணவுப்பொருள்கள் ஆர்கானிக்காக இல்லாததும் புரிந்தது. நமக்குத் தேவையான காய்கறிகளுக்கும் தானியங்களுக்கும் செலவே இல்லாமல் வீட்டிலேயே விதைகள், உரங்கள் தயாரிக்க முடியும் என்பதை அறிந்து செயல்படுத்தினேன். விதைகள் முதல் பயிர்கள்வரை அனைத்தையும் நானே உற்பத்தி செய்தேன்” என சந்தோஷம் பகிர்கிறார்.

சொர்க்கம் என்பது என் வீட்டுத் தோட்டம்... தோட்டக்கலையில் அசத்தும் யூடியூபர்!

“தோட்டம் அமைப்பதைப் பற்றிய ஒரு டிவி ஷோவுக்காக மொட்டை மாடியையும் தோட்டமாக மாற்றினோம். கொல்லைப்புறம், மாடித்தோட்டம் என என் கனவு முழுவதுமாக நனைவாகத் தொடங்கியது” என்பவர் எதிர்பாராதவிதமாகவே சேனல் ஆரம்பித் திருக்கிறார்.

“கேமராமேனான என் கணவர் ஜெர்ரியும் அவரின் நண்பர்கள் சிலரும் வைரல் வீடியோ எடுத்து வெளியிடுவது பற்றி அவர்களுக்குள் ஒரு போட்டி வைத்தனர். கிச்சன் கழிவுகளிலிருந்து உருவாக்கிய உரத்தைத் தோட்டத்துக்குப் பயன்படுத்துவது பற்றிய வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவு செய்தோம்.

சொர்க்கம் என்பது என் வீட்டுத் தோட்டம்... தோட்டக்கலையில் அசத்தும் யூடியூபர்!

போட்டியில் நாங்கள் வெற்றி பெறவில்லை. ஆனால், பொதுமக்கள் தொடர்ந்து வீடியோக்கள் போடும்படி வலியுறுத்த ஆரம்பித்தனர். விதைப் பிலிருந்து அறுவடைவரை எங்களுக்குத் தெரிந்த அனைத்தையும் இப்போது வீடியோவாக்கிக் கொண்டிருக்கிறோம்” எனும் கிம்மின் சேனலுக்கு (CaliKim29 Garden & Home DIY) 4.52 லட்சம் சப்ஸ்கிரைபர்கள் மட்டுமே இருந்தாலும் ஆஃப் பீட் சேனல் வரிசையில் அது முக்கியத்துவம் பெறுகிறது.

தோட்டக்கலை டிப்ஸ், டூ இட் யுவர்செல்ஃப் வீடியோக்கள், கார்டன் டூர், எந்த மாதத்தில் என்ன விதைப்பது, ஆர்கானிக் தோட்டம் என தோட்டம் சார்ந்த ஏ டு இஸட் விஷயங்களை வீடியோக்களாக்குகிறார். தன்னுடைய அனுபவங்களைத் தொகுத்து புத்தகமாகவும் வெளியிட்டுள்ளார்.

சொர்க்கம் என்பது என் வீட்டுத் தோட்டம்... தோட்டக்கலையில் அசத்தும் யூடியூபர்!
சொர்க்கம் என்பது என் வீட்டுத் தோட்டம்... தோட்டக்கலையில் அசத்தும் யூடியூபர்!

“தினமும் எங்கள் தோட்டத்துக் காய்கறிகளை ருசிப்பதைவிட சொர்க்கம் வேறெதுவுமில்லை’’

- ஆனந்தம் பூக்கிறது அவரின் வார்த்தைகளில்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism