Published:Updated:

தென்காசி: வயலில் காய்ந்து போகும் கரும்பு.. வெட்டுக் கூலிக்கு லஞ்சம்..!

கரும்பு விவசாயம்

தனியார் சர்க்கரை ஆலை திடீரென மூடப்பட்ட நிலையில், அங்கு பணியாற்றிய ஊழியர்களே இடைத்தரகர்களாக மாறி விவசாயிகளிடம் 50,000 ரூபாய் வரை லஞ்சம் பெற்று கரும்பு அறுவடை செய்யும் அவலம் நிலவுவதாக விவசாயிகள் வேதனை. கரும்பு நன்கு முற்றிய நிலையிலும் அறுவடை செய்யாமல் காய்ந்து கிடக்கிறது.

தென்காசி: வயலில் காய்ந்து போகும் கரும்பு.. வெட்டுக் கூலிக்கு லஞ்சம்..!

தனியார் சர்க்கரை ஆலை திடீரென மூடப்பட்ட நிலையில், அங்கு பணியாற்றிய ஊழியர்களே இடைத்தரகர்களாக மாறி விவசாயிகளிடம் 50,000 ரூபாய் வரை லஞ்சம் பெற்று கரும்பு அறுவடை செய்யும் அவலம் நிலவுவதாக விவசாயிகள் வேதனை. கரும்பு நன்கு முற்றிய நிலையிலும் அறுவடை செய்யாமல் காய்ந்து கிடக்கிறது.

Published:Updated:
கரும்பு விவசாயம்

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூரில் தனியாருக்குச் சொந்தமான தரணி சர்க்கரை ஆலை செயல்பட்டு வந்தது. பல ஆண்டுகளாகச் செயல்பட்ட இந்த ஆலையை நம்பி சிவகிரி, புளியங்குடி, ராயகிரி உள்ளாறு , கடையநல்லூர் , பனையூர், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தில் கரும்பு பயிரிட்டிருந்தனர்.

அறுவடைக்குத் தயாராக உள்ள கரும்பு
அறுவடைக்குத் தயாராக உள்ள கரும்பு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த ஆண்டும் நடப்பு பருவத்தில் ஆலை நிர்வாகம் விவசாயிகளிடம் தங்கள் ஆலைக்கு கரும்புகளை பதிவு செய்தது, தற்போது கரும்பு விளைந்து அறுவடைப் பருவத்திற்கு வந்துள்ளது. ஆனால் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் ஆலை நிர்வாகம் சர்க்கரை ஆலையை மூடிவிட்டது. அதனால் கரும்பு பயிரிட்ட விவசாயிகள் கரும்பை அறுவடை செய்து எங்கு கொண்டு செல்வது எனப் புரியாமல் தவித்து வருகிறார்கள்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆலை நிர்வாகத்தின் தன்னிச்சையான நடவடிக்கையைக் கண்டித்து விவசாய சங்கத்தினர் போராட்டம் நடத்தியும் எந்த பலனும் இல்லை. அதனால் சிவகங்கை, மற்றும் தேனி மாவட்டங்களில் உள்ள தனியார் ஆலைகள் கரும்பை வெட்ட முன் வந்துள்ளது.

காய்ந்து கிடக்கும் கரும்பு வயல்கள்
காய்ந்து கிடக்கும் கரும்பு வயல்கள்

இந்த நிலையில் மூடப்பட்ட தரணி சர்க்கரை ஆலையில் பணியாற்றிய கரும்பு அலுவலர்கள் மூலமாக வெளி மாவட்டங்களில் உள்ள கரும்பு ஆலைக்கு பதிவு மூப்பு அடிப்படையில் வெட்டி எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது, ஆனால் தரணி சர்க்கரை ஆலை அலுவலர்களில் பலர் இடைத்தரகர்களாக மாறி. கரும்பு வெட்டும் தொழிலாளர்களை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு விவசாயிகளிடம் ரூ.50,000 வரை லஞ்சம் பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து பேசிய பனையூர் கரும்பு விவசாயிகள், ”ஆலைப் பணியாளர்கள் கட்டுப்பாட்டில் கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் இருப்பதால் முன்பணம் என்ற பெயரில் பெரும் தொகையை வசூல் செய்கிறார்கள். பின்னர் எந்தவித முன்பதிவு முறையையும் பின்பற்றாமல் கூடுதல் பணம் கொடுப்பவர்களின் கரும்பை வெட்டி எடுத்துச் செல்கிறார்கள்.

பரிதவிப்பில் பனையூர் விவசாயிகள்
பரிதவிப்பில் பனையூர் விவசாயிகள்

ஏற்கெனவே கரும்பு விவசாயத்துக்கு கடன் பெற்றுள்ள எங்களைப் போன்ற சிறிய விவசாயிகளால் லஞ்சமாக கூடுதல் பணம் கொடுக்க முடியாததால், கரும்பு நன்கு முற்றிய நிலையிலும் அறுவடை செய்யாமல் காய்ந்து கிடக்கிறது. நகையை அடமானம் வைத்து விவசாயம் செய்யும் தொழிலாளர்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி இருக்கிறோம்.

எங்களைப் போல பல விவசாயிகள், அறுவடைக்காலம் முடிந்தும் கரும்புகளை வெட்ட முடியாமல் தவித்து வருகிறோம். ஒரு டன் கரும்பிற்கு ரூ.2800 கிடைக்கும் நிலையில் வெட்டுக்கூலியாக மட்டும் ரூ.1500 கொடுக்க வேண்டியதிருக்கிறது. அதோடு, 15 டன் அளவுக்குக் குறைவாக கரும்பு ஏற்றி கொண்டு சென்றால் ஆலை நிர்வாகம் டன்னிற்கு 600 ரூபாய் லாரி வாடகையாகப் பிடித்து விடுவதால் பெரும் இழப்பைச் சந்திக்கிறோம்.

அறுவடைக்குத் தயாராக உள்ள கரும்புத் தோட்டம்
அறுவடைக்குத் தயாராக உள்ள கரும்புத் தோட்டம்

பல விவசாயிகள் இந்த இழப்பைச் சந்திக்க மனம் இல்லாமலும் பொருளாதாரம் இல்லாமலும் நன்கு விளைந்த கரும்பை வெட்டி அனுப்ப முடியாமல் வயல்களிலேயே அழிக்கிறார்கள். இந்த விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு இடைத்தரகர்கள் ஆதிக்கத்தை ஒழித்துக் கட்ட வேண்டும். அருகில் இருக்கும் ஆலை மூடப்பட்ட நிலையில் கரும்பு விவசாயிகள் பாதிக்காதவாறு வேறு ஆலைகளுக்கு எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்கள்.

இது குறித்து தென்காசி மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் கவனத்துக்குக் கொண்டு சென்றோம். அனைத்தையும் கவனமாகக் கேட்டவர், “ஒரு ஆலை மூடப்பட்டிருந்தால் வேறு இடத்துக்கு கரும்பை கொண்டு செல்ல வேளாண்மைத்துறை அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கிறேன். விவசாயிகளின் நலனைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதியளித்தார்.