Published:Updated:

பாரம்பர்ய கால்நடைகளை ஒழிக்கும் கறுப்புச் சட்டம்; விழித்துக்கொள்வார்களா விவசாயிகள்?

ஆசிரியர்

நம் மாநிலத்தில் மாடுகளுக்குத் தேவையான கலப்பின மற்றும் பாரம்பர்ய சினைஊசிகளை அரசாங்கமே மலிவு விலையில் 10 ரூபாய்க்கு வழங்கி வருகிறது.

மாடு
மாடு

'பாரம்பர்ய கால்நடைகளை ஒரேயடியாக ஒழித்துக்கட்டிவிட்டு, முழுவதுமாக வெளிநாட்டு மாடுகள் மற்றும் கலப்பின மாடுகள் மட்டுமே இனி இந்தியாவில் இருக்கும்' என்கிற சூழலை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன மத்திய மற்றும் மாநில அரசுகள். இதற்காகவே கடந்த ஜூலை மாதம் நடந்து முடிந்த சட்டசபை கூட்டத்தொடரில் சத்தமில்லாமல் 'தமிழ்நாடு கால்நடை இனப்பெருக்கச் சட்டம்-2019' (Tamil Nadu Bovine Breeding Act-2019) என்பதை நிறைவேற்றியிருக்கிறது தமிழக அரசு.

பாரம்பர்ய பசுக்களின் இனச்சேர்க்கைக்காகப் 'பொலிகாளை'கள் கிராமப்புறங்களில் காலங்காலமாக வளர்க்கப்படுகின்றன. இதற்கும் வேட்டு வைக்கும் வகையில் உருவாகியுள்ளது இச்சட்டம். 'இனி வலிமையுடன் உடல் தகுதியுடன் பொலிகாளைகள் இருந்தால்தான் இனச்சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்படும். அரசின் அனுமதி பெற்றவர்கள் மட்டுமே பொலிகாளைகளை வளர்க்க முடியும்' என்கிற சூழலை இச்சட்டம் உருவாக்கியுள்ளது. மேம்போக்காகப் பார்த்தால், நல்லதுதானே என்று நினைக்கத் தோன்றும். உற்றுப்பார்த்தால்தான், இச்சட்டத்திலிருக்கும் ஆபத்துகள் அதிர வைக்கும்.

ஒரு சினைஊசி 2,000 ரூபாய் வரையிலும்கூட விற்பனையாகும். ஒரு கட்டத்தில் பாரம்பர்ய கால்நடை இனங்களுக்கான சினைஊசியின் விலையை இஷ்டம்போல உயர்த்துவார்கள்.

''பல்வேறு மாநிலங்களிலும் இத்தகைய சட்டம் ஏற்கெனவே நடைமுறைக்கு வந்துவிட்டது. மற்ற மாநிலங்களிலும் இச்சட்டத்தை விரைவில் அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசுத் தரப்பிலிருந்து மறைமுகமாக வலியுறுத்தப்படுகிறது. இதற்கெல்லாம் காரணம், பன்னாட்டு, உள்நாட்டு சினைஊசி தயாரிப்பு நிறுவனங்கள் தரும் அழுத்தம்தான்'' என்று குமுறுகிறார்கள் மாடுகளை வளர்த்துவரும் விவசாயிகள்.

''நம் மாநிலத்தில் மாடுகளுக்குத் தேவையான கலப்பின மற்றும் பாரம்பர்ய சினைஊசிகளை அரசாங்கமே மலிவு விலையில் 10 ரூபாய்க்கு வழங்கி வருகிறது. இந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் சினைஊசித் தயாரிப்பானது முழுமையாகத் தனியார் நிறுவனங்களின் வசம் சென்றுவிடும். ஒரு சினைஊசி 2,000 ரூபாய் வரையிலும்கூட விற்பனையாகும். ஒரு கட்டத்தில் பாரம்பர்ய கால்நடை இனங்களுக்கான சினைஊசியின் விலையை இஷ்டம்போல உயர்த்துவார்கள். பசு இனங்கள் மட்டுமே பிறக்கும் வகையிலும் சினைஊசித் தயாரிப்பைச் செய்வார்கள். காளைகள் இல்லாமல் போனால், ஊசிகளை மட்டுமேதான் நம்பியிருக்கவேண்டும் என்கிற கட்டாயத்தையும் உருவாக்குவார்கள். இதன்மூலமாகப் பாரம்பர்ய இன மாடுகளை ஒட்டுமொத்தமாக ஒழித்துவிடுவார்கள். வீரிய ஒட்டுரகம், பி.டி ரகம் என்று விதைகளை உருவாக்கி பாரம்பர்ய பயிர் விதைகளை ஒழித்ததுபோல, இதுவும் நடந்தேறும்'' எனக் கால்நடை ஆர்வலர்கள் கதறுகின்றனர்.

பாரம்பர்ய கால்நடைகளை ஒழிக்கும் கறுப்புச் சட்டம்; விழித்துக்கொள்வார்களா விவசாயிகள்?

விவசாயிகள் விழித்துக்கொண்டால், நிச்சயமாக இச்சட்டத்தை அடித்து நொறுக்கமுடியும் என்பதுதான் கடந்தகால வரலாறு. அதுகுறித்த விரிவான கூடுதல் தகவலுக்கு 'கறுப்புச் சட்டத்தை அடித்து நொறுக்குவோம்!' எனும் பசுமை விகடன் பகுதியை வாசிக்க https://www.vikatan.com/government-and-politics/editorial-page-12

> ஆன்லைனில் சந்தா செலுத்த https://store.vikatan.com/