Published:Updated:

சிறுதானியங்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயம் செய்ய தமிழ்நாடு அரசு வலியுறுத்தல்..!

சாகுபடி வயல்

விரைவில் காரிப் பருவம் துவங்கவுள்ள நிலையில், பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்வது தொடர்பாக, மத்திய அரசின் வேளாண் விளைபொருள் விலை நிர்ணய குழுவானது, மாமல்லபுரத்தில் கருத்து கேட்பு கூட்டத்தை நடத்தியது.

ஒவ்வொரு ஆண்டும் சாகுபடி பருவம் துவங்குவதற்கு முன்பாக, 23 வகையான பயிர்களுக்கு, குறைந்தபட்ச ஆதார விலையை, மத்திய அரசு நிர்ணயம் செய்வது வழக்கம். மத்திய அரசின் வேளாண் விலை மற்றும் செலவுகள் ஆணையம்,  இந்த 23 வகையான வேளாண் விளைபொருட்களுக்கு, குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க, மத்திய அரசிடம் பரிந்துரை செய்யும். மத்திய அரசு நிர்ணயம் செய்த பின், மாநில அரசுகள், ஊக்கத்தொகை வழங்கி, கொள்முதல் விலையை நிர்ணயம் செய்கின்றன.

மத்திய அரசு
மத்திய அரசு

மாநில அரசுகள், விவசாய விளைபொருட்களின் தேவை, வினியோகம், உற்பத்தி செலவு, சந்தை விலை, உற்பத்தி செலவை விட, குறைந்தபட்சம் 50 சதவீதம் லாபம் ஆகியவற்றின் அடிப்படையில்,  விலை நிர்ணயம் செய்வதற்கு இந்த ஆணையத்திடம் பரிந்துரை செய்யும்.

விரைவில் காரிப் பருவம் துவங்கவுள்ள நிலையில், பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்வது தொடர்பாக, மத்திய அரசின் வேளாண் விளைபொருள் விலை நிர்ணய குழுவானது,  மாமல்லபுரத்தில் கருத்து கேட்பு கூட்டத்தை நடத்தியது.

தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, புதுச்சேரி, கேரளா மாநில வேளாண் துறை அதிகாரிகள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள், பொருளாதார நிபுணர்கள் பங்கேற்றனர்.

மத்திய வேளாண் விளைபொருள் விலை நிர்ணய குழு தலைவர் விஜய்பால் சர்மா, ஆணைய நோக்கம், செயல்பாடுகளை விளக்கி ஒவ்வொரு மாநில அதிகாரிகளிடமும் கருத்துகளை கேட்டார். விவசாயிகளின் நலன் கருதி, குறைந்தபட்ச ஆதார விலை குறித்து, ஆணையத்திடம் அவர்கள் முன்மொழிந்தனர்.

சிறுதானியங்கள்
சிறுதானியங்கள்

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நெல் உள்ளிட்ட 23 வகை பயிர்களுக்கு,  குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்வது குறித்து மத்திய, மாநில அரசு அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

சிறுதானிய பயிர்களுக்கு, குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க, மத்திய வேளாண் விலை மற்றும் செலவுகள் ஆணையத்திடம், தமிழக அரசு வலியுறுத்தியது. தமிழக வேளாண்துறை இயக்குனர் அண்ணாதுரை, ‘'சிறுதானியங்கள் சாகுபடியை ஊக்குவிக்க வேண்டும், அவற்றிற்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். 'நெல், கம்பு, சோளம், கேழ்வரகு, துவரை, நிலக்கடலை உள்ளிட்ட 13 வகை பயிர்களுக்கு, விவசாயிகளுக்கு வருமானம் தரும் வகையில் ஆதார விலையை நிர்ணயம் செய்ய வேண்டும்'‘என வலியுறுத்தினார்.