Published:Updated:

தமிழகத்தில் 5 ஆண்டுகளில் 5,500 தேனீ வளர்ப்பு பெட்டிகள்!

தேனீ வளர்ப்பு பெட்டிகள்

தேனீ வளர்ப்பு, ஊரக மற்றும் கிராமப்புற மக்களுக்கு வருமானம் ஈட்டும் சிறந்த தொழில் ஆகும். தேனீ வளர்ப்புக் குறித்த பயிற்சியை காதி மற்றும் கிராம தொழில்கள் ஆணையம் பயிற்சி மையங்கள் அமைத்து வழங்கி வருகிறது.

தமிழகத்தில் 5 ஆண்டுகளில் 5,500 தேனீ வளர்ப்பு பெட்டிகள்!

தேனீ வளர்ப்பு, ஊரக மற்றும் கிராமப்புற மக்களுக்கு வருமானம் ஈட்டும் சிறந்த தொழில் ஆகும். தேனீ வளர்ப்புக் குறித்த பயிற்சியை காதி மற்றும் கிராம தொழில்கள் ஆணையம் பயிற்சி மையங்கள் அமைத்து வழங்கி வருகிறது.

Published:Updated:
தேனீ வளர்ப்பு பெட்டிகள்

கடந்த 5 ஆண்டுகளில், தமிழகத்தில் 5,550 தேனீ வளர்ப்பு பெட்டிகள் வழங்கப்பட்டிருப்பதாக மத்திய காதி மற்றும் கிராம தொழில்கள் ஆணையத் தலைவர் மனோஜ் குமார் கூறியுள்ளார்.

மனோஜ் குமார்
மனோஜ் குமார்
pib.gov.in

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த கலசபாடி கிராமத்தில், உள்ளூர் தேனீ வளர்ப்பாளர்களுடன் மனோஜ் குமார் கடந்த புதன்கிழமை கலந்துரையாடினார்.

அப்போது அவர் பேசியதாவது, "தேனீ வளர்ப்பு, ஊரக மற்றும் கிராமப்புற மக்களுக்கு வருமானம் ஈட்டும் சிறந்த தொழில் ஆகும். தேனீ வளர்ப்புக் குறித்த பயிற்சியை காதி மற்றும் கிராம தொழில்கள் ஆணையம் பயிற்சி மையங்கள் அமைத்து வழங்கி வருகிறது. இந்த பயிற்சி மையங்களில், தேனீ வளர்ப்பாளர்கள் உற்பத்தி செய்யும் தேனை பதப்படுத்தும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அந்த தேனை காதி இந்தியா திட்டத்தின் மூலம் சந்தைப்படுத்தவும் இந்த ஆணையம் உதவுகிறது.

தமிழகத்தில் 5 ஆண்டுகளில் 
5,500 தேனீ வளர்ப்பு பெட்டிகள்!
pib.gov.in

மேலும் மத்திய அரசின் இனிப்பு புரட்சி எனப்படும் தேன் இயக்கம் சார்பில், தேனீ வளர்ப்பாளர்களை தேர்வு செய்து குழுக்களாகப் பிரித்து, அவர்களுக்கு தேனீ வளர்ப்புக் குறித்த முறையான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு சார்பில் கடந்த 2017ம் ஆண்டு முதல், தமிழகத்தில் இதுவரை 550 தேனீ வளர்ப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பயிற்சி அளித்து 5,500 தேனீ பெட்டிகள் வழங்கப்பட்டிருக்கின்றன" என்று கூறினார்.