Published:Updated:

"விவசாயத்துல கிடைக்குற மனநிறைவு வேற எதிலயும் கிடைக்கிறதில்ல!" எழுத்தாளர் பவா செல்லதுரை!

வயலில் பவா செல்லதுரை
பிரீமியம் ஸ்டோரி
வயலில் பவா செல்லதுரை

நானும் விவசாயிதான்

"விவசாயத்துல கிடைக்குற மனநிறைவு வேற எதிலயும் கிடைக்கிறதில்ல!" எழுத்தாளர் பவா செல்லதுரை!

நானும் விவசாயிதான்

Published:Updated:
வயலில் பவா செல்லதுரை
பிரீமியம் ஸ்டோரி
வயலில் பவா செல்லதுரை

ழுத்தாளர், பதிப்பாளர், பேச்சாளர், கதை சொல்லி, நடிகர், ஓய்வுபெற்ற அரசு ஊழியர் எனப் பல முகங்கள் இருந்தாலும் விவசாயி என்று அழைப்பதில்தான் தனக்கு மகிழ்ச்சி என்கிறார் பவா செல்லதுரை. நானும் விவசாயி பகுதிக்காக அவரைச் சந்தித்தோம். தனது விவசாய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.

‘‘திருவண்ணாமலை மாவட்டம், தென்மாத்தூர் ஊராட்சி, சுகிழ்நாச்சிப்பட்டு தான் என்னோட சொந்த ஊர். என் தாத்தா, பாட்டி விவசாயிகளா இருந்தாங்களானு எனக்குத் தெரியாது. மலேசியாவுல இருந்த அப்பா, கொஞ்சம் தாமதமாகத்தான் இந்தியாவுக்கு வந்தார். இங்க அவருக்கு வாத்தியார் வேலை கிடைச்சது. வாத்தியாரா இருந்தாலும் அவர்கிட்ட விவசாயி என்ற உணர்வுதான் அதிகமா இருந்தது. ரெண்டு ரெண்டு ஏக்கரா மொத்தம் 8 ஏக்கர் நிலத்தை வாங்கினார்.

அப்பா வாங்கிய 8 ஏக்கர் காடும் ஒரே இடத்துல இல்லாம தனித்தனியாகத்தான் இருந்தது. எனக்கு நினைவு தெரிஞ்ச நாளிலிருந்து அப்பாவோடு விவசாய நிலத்துக்குப் போயிட்டு வர்றேன். சும்மா வேடிக்கை பார்க்க மட்டுமல்ல. நாத்து நடுறது, களை பறிக்குறது, நிலத்தில தேங்குற தண்ணியை வெட்டி வெளியேத்துறதுனு சின்னச் சின்ன வேலைகளைச் செய்வேன். அப்பா எங்க நிலத்தில 2 கிணறுகளை வெட்டினார். அதுக்கு அவர் போடாத உழைப்பு இல்ல. செய்யாத செலவு இல்ல.

வயலில் பவா செல்லதுரை
வயலில் பவா செல்லதுரை

இரண்டு கிணத்திலயும் தண்ணி நல்லா ஊறிச்சு. இப்பவும் அந்தக் கிணறுகள்ல தண்ணி வத்துறதில்ல. முன்பெல்லாம் கமலைப் போட்டுத் தண்ணி இறைப்பாங்க. அப்ப பயிர்னு பார்த்தா நெல், மல்லாட்டைதான் (நிலக்கடலை) அதிகமா பயிரிடுவாங்க.

மல்லாட்டை அறுவடைக்கு முன்ன, நெல்லை அறுவடை செஞ்சிடுவோம். இப்படித் தொடர்ந்து செய்றதால வீட்டுக்குத் தேவையான உணவு தானியங்கள் எப்பவும் வீடு நிறைய இருக்கும். அப்பாவோடு கிணத்துல குளிச்சது, மீன் பிடிச்சது எல்லாம் இப்பவும் பசுமையான நினைவா இருக்குது. சுயசார்பான, தன்னிறைவான விவசாயக் குடும்பமாகத் தான் எங்க குடும்பம் இருந்துச்சு.

கிணறு
கிணறு


அப்பா இறக்கும்போது எனக்கு 35 வயசு. அப்போ மின்சாரத்துறையில வேலையில இருந்தேன். அது எனக்கு ஒட்டவே இல்ல. எனக்கு வாழ்க்கையில பல விருப்பங்கள் இருந்துச்சு. அழகான விவசாய வாழ்க்கையை வாழ்றது அதுல ஒண்ணு. அப்பாவுக்குப் பிறகு நிலத்தை நான் கொஞ்சம் மாத்தினேன். அங்கேயே தங்கறதுக்கு வீடு கட்டினேன். ‘லாரி பெக்கர்’ முறையில இங்க கிடைச்ச பொருள்களையே வெச்சு வீடு கட்டினேன். நண்பர்கள், உறவினர்கள் வந்தா தங்குறதுக்கு அறைகள், இலக்கிய நிகழ்வுகள், கூட்டங்கள் நடத்த ‘ஆடிட்டோரியம்’ எல்லாத்தையும் நிலத் திலேயே அமைச்சேன். 25 வருஷம் அரசு வேலையிலிருந்து பெரிசா சேமிப்போ, வங்கி இருப்போ எதுவுமே இல்லை. நிலத்திலதான் தொடர்ந்து முதலீடு பண்ணியிருக்கிறேன். நிலம் நம்மகிட்ட தொடர்ந்து உழைப்பும் பணமும் கேட்டுகிட்டேதான் இருக்கு. திருப்பிக் குடுக்கலைன்னாலும் பரவாயில்லைனுதான் முதலீடு செய்றேன்.

வீடும் வயலும்
வீடும் வயலும்

விவசாயத்தைப் பொறுத்தவரைக்கும் நாம செய்ற முயற்சிகள்ல ஏதாவதொரு காரணத்தால சிலது தவறாகிடும். ஒருதடவை நல்ல வருமானம் தரும்னு நினைச்சுக் கற்களை நட்டு, பாவக்காய், புடலங்காய், சுரைக்காய், பீர்க்கங்காய் எல்லாம் போட்டேன். ஆனா, எதிர்பார்த்த அளவுக்குப் பெருசா ஒண்ணும் கிடைக்கல. பிறகு நட்டு வெச்ச கற்களை யெல்லாம் எடுத்துட்டு மறுபடியும் விவசாயத் துக்கு நிலத்தைத் தயார் செய்யவே 70,000 செலவு ஆகிடுச்சு.

விவசாயத்தில எப்போதும் விளை பொருள்களுக்கு ஒரே விலை கிடைக்கும்னு சொல்ல முடியாது. ஏன்னா, நம்முடைய சந்தை கட்டமைப்பு வித்தியாசமானது. விவசாயி, தான் உற்பத்தி செய்த பொருளுக்கு விலை நிர்ணயம் செய்ய முடியாது. வேறு யாரோதான் விலை நிர்ணயம் செய்றாங்க. உண்மையைச் சொன்னா நகரத்தில அடுக்குமாடி குடியிருப்பில இருந்து கொண்டோ, எல்லாத்துக்கும் ஆளுங்களை வெச்சுட்டுக் கார், பைக்கில வந்து அப்பப்ப நிலத்தைப் பார்த்துகிட்டோ விவசாயம் செஞ்சா, ஒருநாளும் வெற்றிகரமான விவசாயி யாகவே முடியாது. நிலத்திலேயே வீடு கட்டி 24 மணி நேரமும் நிலத்தைப் பார்த்துகிட்டு, குடும்பத்தோடு விவசாயம் செய்றவங்கதான் வெற்றிகரமாகத் தொடர்ந்து விவசாயத்தில இருக்காங்க. நானும் விவசாயம் செஞ்சு சில சமயங்கள்ல நஷ்டம் ஏற்பட்டதால இந்த விஷயத்த சொல்றேன்.

பவா செல்லதுரை
பவா செல்லதுரை

விவசாயத்துல முழுநேரமா இருக்கிறவங்க கல்யாணம், காதுகுத்துகூட தோட்டத்துலயே நடத்துவாங்க. தன்னுடைய மாடுகளுக்குப் போக மீதி வைக்கோலைத்தான் விற்பனை செய்வாங்க. இப்படி நிலத்தில வர்ற சின்னச் சின்ன விஷயங்களைக்கூட பணமா மாத்து வாங்க. அவங்க, நிலத்தை உருவாக்கி அடுத்த தலைமுறைக்குக் கொடுத்துட்டுப் போவாங்க. 2 ஏக்கர், 3 ஏக்கர்னு விவசாயம் செய்றவங்க, கூடுதலா நிலம் வாங்கியிருக்காங்க. ஆனா, வேலையாளுங்களை மட்டும் வெச்சு விவசாயம் செஞ்சு அப்பப்ப வந்து எட்டி பார்த்துட்டு போறவங்க, 20 - 30 ஏக்கர்ல விவசாயம் செஞ்சாலும் தொடர்ந்து அவங்களால செய்ய முடியறதில்லை, நிலங்களை வித்துடுறாங்க. இதுதான் நிஜம். விவசாயத்தை முழு அர்ப்பணிப்போடு செய்றவங்கதான் ஜெயிக்கிறாங்க. ஏன்னா 24 மணி நேரமும் உழைப்பைக் கேட்குற இடம் விவசாயம்.

நான் விவசாயத்திலிருந்து பெருசா சம்பாதிக்கல. ஆனா, விவசாயியா இன்னும் விவசாயம் செஞ்சுகிட்டுத்தான் இருக்கேன். ஏன்னா, இதுல கிடைக்குற மனநிறைவு வேற எதிலயும் கிடைக்கிறதில்ல. ஒவ்வொரு முறையும் பயிர் செய்து, அது ஒரு குழந்தை வளர்வதைப் போன்று வளர்றதைப் பார்க்கும் போது கிடைக்குற மகிழ்ச்சியே தனிதான்.

பவா செல்லதுரை
பவா செல்லதுரைஅதுமட்டுமல்லாம என்னுடைய கதை களுக்கும் இந்த மண்தான் ஆதாரமா இருக்குது. நான் நெல், கடலைனு அதிகம் பயிர் செய்றேன். அடுத்து கரும்பு போடலாம்னு இருக்கேன். வீட்டுக்குத் தேவையான எல்லா மும் இந்த விவசாய நிலம்தான் கொடுக்குது. வீட்டுக்குத் தேவையானது போக நண்பர்கள், உறவினர்களுக்கும் கொடுக்கிறோம். இயற்கை முறையிலயே உற்பத்தி செய்றதால தரமான, ஆரோக்கியமான உணவு நிறைவாகச் சாப்பிட இந்த மண்தான் காரணம். விவசாயத்துல வருமானம் வரவில்லையேனு நானும் மற்ற நிலத்துக் காரர்களைப்போல நிலத்தை ‘பிளாட்’ போட்டு வித்துட்டுப் போயிடலாம். ஆனா, அதுக்கு என் மனம் தயாரா இல்ல. அப்போதெல்லாம் ஒரு கவிதைதான் நினைவுக்கு வரும்

‘வியாபாரிகளே வியாபாரிகளே

ரோஜாக்களை விற்றுவிட்டு

அதைவிடச் சிறந்ததாக

என்ன வாங்கிவிட முடியும்’ சொல்லுங்க’’ என்று சிரித்துக்கொண்டே விடைகொடுத்தார்.

தொடர்புக்கு, பவா செல்லதுரை,

செல்போன்: 94432 22997

- வருவார்கள்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism