Published:Updated:

இயற்கை வேளாண்மை கொள்கை விரைவில் வேண்டும்!

நிகழ்வில்
பிரீமியம் ஸ்டோரி
நிகழ்வில்

நாட்டுநடப்பு

இயற்கை வேளாண்மை கொள்கை விரைவில் வேண்டும்!

நாட்டுநடப்பு

Published:Updated:
நிகழ்வில்
பிரீமியம் ஸ்டோரி
நிகழ்வில்

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள பாப்பாநாட்டில் கடந்த ஜூலை 30, 31 ஆகிய நாள்களில் ‘வாழவழி-இயற்கை வேளாண்மை மாநாடு’ நடைபெற்றது.

தமிழ்நாடு இயற்கை வேளாண் கூட்டமைப்பு மற்றும் அகவெளி வாழ்வியல் நடுவம் இணைந்து நடத்திய இம்மாநாட்டில் கால்நடை மூலிகை மருத்துவர் புண்ணியமூர்த்தி, பூச்சி.செல்வம், அகவெளி வாழ்வியல் நடுவத்தைச் சேர்ந்த ஏங்கல்ஸ் ராஜா, தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் அறச்சலூர் செல்வம், பாரம்பர்ய விதைநெல் காப்பாளர்கள் அரியனூர் ஜெயச்சந்திரன், சிவாஜி, காரைக்கால் பாஸ்கர், சித்த மருத்துவர் சரவணன் உள்ளிட்ட பலர் உரையாற்றினார்கள். அங்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

நிகழ்வில்
நிகழ்வில்

‘‘இயற்கை விவசாயம் என்பது பிற மாநிலங் களில் பெரும்பாலும் சாகுபடி நுட்பமாக மட்டுமே பார்க்கப்பட்டு கடைப்பிடிக்கப் படுகிறது. தமிழகத்தில்தான் இது வாழ்வியலாக, சமூக மற்றும் வேளாண் அறிவியலாக நம்மாழ்வாரால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன் விளைவாகவே இயற்கை விவசாயத்தை விவசாயிகள் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு தரப்பினரும் தங்களது பொருளாதாரச் சூழலுக்கு ஏற்ப கைக்கொள்கிறார்கள். தமிழகத்தைப் பல்வேறு தளங்களில் அடுத்தடுத்த கட்டங்களுக்கு முன்நகர்த்திச் செல்லும் தமிழக அரசு, இயற்கை வேளாண்மையை மட்டும் கொஞ்சம் கூட முன்நகர்த்தாமல் உள்ளது.

இந்தப் பெரும் குறையைப் போக்கி, விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலன் காத்திட, தமிழகத்தில் உள்ள இயற்கை விவசாயிகளுடன் வட்டார அளவில் கலந்து பேசி, தமிழ்நாட்டுக்கு உரிய இயற்கை வேளாண் கொள்கையைத் தமிழக அரசு வடிவமைத்துச் செயல்படுத்த வேண்டும்.

நிகழ்வில்
நிகழ்வில்

பருவநிலை மாற்றத்தின் தாக்கங்களைக் கடந்த இருபது ஆண்டுகளாக அனுபவித்து வருகிறோம். வறட்சியாலும் வெள்ளத்தாலும் பருவம் தவறிய மழையாலும் கடும் பாதிப்புகளைச் சந்தித்து வருகிறோம்.

இவற்றின் தாக்கங்களிலிருந்து தமிழகம் தன்னைத் தற்காத்துக்கொள்ளப் புதிய பார்வையைப் பெற வேண்டியுள்ளது. இதன் அடிப்படையில் பருவநிலை மாற்றங் களை எதிர்கொள்வதற்கான கொள்கையைத் தமிழக அரசு உருவாக்க வேண்டும்...’’ உள்ளிட்ட முக்கியத் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.