Published:Updated:

மேக்கேதாட்டூ: பினராயி விஜயனை சந்தித்து ஆதரவு கேட்ட தமிழக விவசாயிகள்; அவரின் பதில் என்ன?

கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் ஆதரவு கேட்ட தமிழக விவசாயிகள்
கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் ஆதரவு கேட்ட தமிழக விவசாயிகள்

கர்நாடகா மேக்கேதாட்டூ அணை கட்டுவதற்கு எதிராக குரல்கொடுக்க தமிழக விவசாயிகள் கேரளா முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து ஆதரவு கேட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

காவிரி விவகாரத்தில் தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்படுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதற்கிடையில் காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டூவில் அணை கட்ட கர்நாடக மாநில பா.ஜ.க அரசு முயற்சித்து வருகிறது. அதற்கு மத்திய பா.ஜ.க அரசும் ஆதரவாக இருப்பதாக தமிழக விவசாயிகள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையிலான குழுவினர் கேரள மாநில முதலமைச்சர் பினராய் விஜயனை திருவனந்தபுரத்தில் உள்ள தலைமைச் செயலகத்தில் இன்று சந்தித்தனர். அப்போது காவிரி பிரச்னையில் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என வேண்டுகோள் கடிதம் கொடுத்தனர். இந்தக் குழுவில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் வின்ஸ் ஆன்றோ உள்பட பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

மேக்கேதாட்டூ
மேக்கேதாட்டூ
விகடன் செய்தி : மேக்கேதாட்டூ விவகாரம்; உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழக அரசு!

இந்த சந்திப்பு குறித்து விவசாயி வின்ஸ் ஆன்றோவிடம் பேசினோம். ``காவிரி மேலாண்மை ஆணையம் நான்கு மாநிலம் சம்பந்தப்பட்ட விஷயம். நான்கு மாநிலம் சம்பந்தப்பட்ட விவகாரம் என்றாலும் காவிரி விஷயத்தில் நடுவண் அரசுதான் முடிவு எடுக்கணும். கர்நாடகாவுல பா.ஜ.க அரசு இருக்கிறதுனால மேக்கேதாட்டூ அணை கட்டுறதுக்கு புரபோசல் கொடுக்கல. அதுமட்டுமில்லாம காவிரி மேலாண்மை ஆணையத்தை கூட்டாமலேயே மேக்கேதாட்டூ அணை கடுவதற்கு அனுமதி கொடுத்திருக்கிறாங்க. இந்த நிலையில நாளைக்கு காவிரி மேலாண்மை ஆணையம் டெல்லியில கூடுகிறது.

சட்டத்தை மீறியும், நான்கு மாநிலங்களை கலந்து ஆலோசிக்காமலும் மேக்கேதாட்டூ அணை கட்ட அனுமதி கொடுத்ததை தமிழ்நாடு சார்பில அந்த கூட்டத்துல எதிர்ப்பு தெரிவிக்க இருக்காங்க. அந்த சமயத்தில நமக்கு ஆதரவா பேச கேரளாவைக் கூப்பிடுவதற்காக விவசாயிகள் குழு இன்னைக்கு முதல்வர் பினராயி விஜயனை சந்திச்சோம். பினராயி விஜயன் இன்னைக்கு பெரிசா யாருக்கும் அப்பாயின்மெண்ட் கொடுக்கல. நாங்க தமிழ்நாட்டுல இருந்து விவசாயிகள் வந்திருக்கிறோம்னு சொன்னதும் அவர் எங்களை உடனே அழைத்தார்.

மேக்கேதாட்டூ அணை விவகாரத்தில் ஆதரவு கேட்டு கடிதம் கொடுத்த தமிழக விவசாயிகள்.
மேக்கேதாட்டூ அணை விவகாரத்தில் ஆதரவு கேட்டு கடிதம் கொடுத்த தமிழக விவசாயிகள்.
மேக்கேதாட்டூ அணை: காய் நகர்த்தும் கர்நாடகா; குறட்டை விட்டுக்கொண்டிருக்கிறதா தமிழக அரசு?

நாங்கள் முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து மேக்கேதாட்டூ விவகாரத்தில் ஆதரவு கேட்டு கடிதத்தை கொடுத்தோம். அதற்கு அவர், `எனக்கு இந்த விஷயங்கள் தெரியும். அதிகாரிகளிடம் உடனடியாக இதுபற்றி ஆலோசனை செய்து முடிவு எடுகிறோம்' என்றார். அந்த கோரிக்கையோடு, கன்னியாகுமரி மாவட்டத்துக்கு தண்ணீர் வரும் நெய்யாறு இடதுகரை சானல் விஷயத்திலயும் சுமுகமா ஒரு நல்ல முடிவு எடுங்க'ன்னு நான் கோரிக்கை வைத்தேன்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு