Published:Updated:

100 தடுப்பணைகள், 199 செறிவூட்டு கிணறுகள்; நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த அரசின் முயற்சி!

நீர்

மக்கள் தொகைப் பெருக்கத்தாலும், தொழிற்சாலைகள் தேவைக்கு அதிகமாக நிலத்தடி நீரை உறிஞ்சுவதாலும், காலநிலை மாற்றத்தாலும் நிலத்தடி நீரின் மட்டம் கணிசமாகக் குறைந்து வருகிறது. நிலத்தடி நீரைச் சேகரிக்க வேண்டிய நீராதாரங்களும் தூய்மையாகப் பராமரிக்கப்படுகிறதா எனில், அதுவும் இல்லை.

தமிழகத்தில் குடிநீர் மற்றும் பிற தேவைகளுக்காக நாம், பூமியில் சேகரமாகும் நிலத்தடி நீரையே நம்பியிருக்கிறோம். அப்படியிருக்கையில், அந்த நிலத்தடி நீரை சரியாகப் பராமரித்து, தேவைக்கேற்ப உபயோகிக்கிறோமா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். 

மக்கள் தொகைப் பெருக்கத்தாலும், தொழிற்சாலைகள் தேவைக்கு அதிகமாக நிலத்தடி நீரை உறிஞ்சுவதாலும், காலநிலை மாற்றத்தாலும் நிலத்தடி நீரின் மட்டம் கணிசமாகக் குறைந்து வருகிறது. நிலத்தடி நீரைச் சேகரிக்க வேண்டிய நீராதாரங்களும் தூய்மையாகப் பராமரிக்கப்படுகிறதா எனில், அதுவும் இல்லை. எனவே, நிலத்தடி நீர் வளத்தைப் பெருக்க வேண்டிய கட்டாயச் சூழலில் நாம் தள்ளப்பட்டுள்ளோம்.

வயல்
வயல்

இந்நிலையில், மத்திய மற்றும் மாநில அரசுகள், மாநில நிலவள மற்றும் நீர்வளத் துறையினருக்கு நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு கூறியிருந்தது. 

அதனடிப்படையில், மாநிலம் முழுவதும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்த பகுதிகளை முதலில் கண்டறிந்து, அங்கு செயற்கை நிலத்தடி நீர் செறிவூட்டும் கிணறுகள், தடுப்பணைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதனடிப்படையில் 2008 முதல் 2021 வரை நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்க 100 இடங்களில் தடுப்பணைகளும், 199 இடங்களில் நிலத்தடி நீர் செறிவூட்டும் கிணறுகளும் அமைக்கப்பட்டுள்ளன என மாநில நிலவள, நீர் வள ஆதார விவர குறிப்பு மையம் தெரிவித்துள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism