Published:Updated:

``2.50 டன் வாழைப்பழம்” மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு இலவசமாக வழங்கிய தஞ்சை விவசாயி..!

வாழைப்பழம் வழங்கிய விவசாயி மதியழகன்

கொரோனா காலகட்டத்தில் விற்பனை செய்ய முடியாமல் வாழைப்பழம் தேங்கி வீணாகும் நிலை ஏற்பட்டபோது இதே போல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொடுத்தேன். விளைவித்த பொருள் வீணாகக் கூடாது என்பதால் இதைத் தொடர்கிறேன் - வாழை விவசாயி.

``2.50 டன் வாழைப்பழம்” மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு இலவசமாக வழங்கிய தஞ்சை விவசாயி..!

கொரோனா காலகட்டத்தில் விற்பனை செய்ய முடியாமல் வாழைப்பழம் தேங்கி வீணாகும் நிலை ஏற்பட்டபோது இதே போல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொடுத்தேன். விளைவித்த பொருள் வீணாகக் கூடாது என்பதால் இதைத் தொடர்கிறேன் - வாழை விவசாயி.

Published:Updated:
வாழைப்பழம் வழங்கிய விவசாயி மதியழகன்

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு கொடுப்பதற்காகத் தன் தோட்டத்தில் விளைந்த இரண்டரை டன் வாழைப்பழங்களை இலவசமாக வழங்கிய மதியழகன் செயல், பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது. இது குறித்து மதியழகனிடன் பேசினோம், ``தற்போது வாழை விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. வாழை வெட்டுக்கூலி, அவற்றை விற்பனை செய்வதற்காக வாகனத்தில் ஏற்றிச் செல்லும் வாடகை உள்ளிட்டவைக்கு ஆகும் செலவுகூட தற்போது வாழை விவசாயிகளுக்குக் கிடைப்பதில்லை.

மதியழகனை பாராட்டிய டீன் பாலாஜிநாதன்
மதியழகனை பாராட்டிய டீன் பாலாஜிநாதன்

இதனால் வாழைப்பழங்கள் மரத்திலேயே அழுகி வீணாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. வீணாகிய வாழைப்பழங்கள் குப்பையில் கொட்டப்படுகிற நிலைக்கு வாழை விவசாயிகள் ஆளாகியிருக் கின்றனர். மண்ணில் விளையும் பொருள் யாருக்கும் பயன் படாமல் குப்பைக்குப் போகக்கூடாது என்பது எண்ணம். என்னுடைய வாழைத்தோட்டம் நல்ல விளைச்சல் கண்டுள்ளது.

விளையில்லாமல் அவை வீணாகிடக் கூடாது என்பதால் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு கொடுப்பதற்காக மருத்துவக் கல்லூரி டீன் பாலாஜிநாதனிடம் 2.50 டன் வாழைப்பழங்கள் இலவசமாக வழங்கியிருக்கிறேன். அதைப் பெற்றுக்கொண்ட டீன் பாலாஜிநாதன் என்னைக் கட்டித்தழுவி உங்களுக்கு பெரிய மனசுங்கனு பாராட்டினார். இது போல் விவசாயிகள் பலரும் முன் வந்தால் சிகிச்சையில் இருப்பவர்களுக்கு சத்தான உணவு கிடைக்கும் என உற்சாகப்படுத்தினார்.

வாழைப்பழம்
வாழைப்பழம்

கொரோனா காலகட்டத்தில் விற்பனை செய்ய முடியாமல் வாழைப்பழங்கள் தேங்கி வீணாகும் நிலை ஏற்பட்டபோது இதே போல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொடுத்தேன். தற்போது நான்காவது முறையாக இலவசமாக வாழைப்பழங்கள் கொடுத்திருக்கிறேன். விலை குறையும் நேரத்தில் கொடுக்கிறேன் என்பதைவிட விளைவித்த பொருள் வீணாகக் கூடாது என்பதால் இதைத் தொடர்ந்து செய்து வருகிறேன்.

இந்தப் பணி தொடர்ந்துகொண்டே இருக்கும். தக்காளி, வெங்காயம் போன்றவை விலை வீழ்ச்சியடையும்போது குப்பையில் கொட்டப்படுவதைப் பலரும் பார்க்கிறோம். அந்த மாதிரியான சூழல் வரும்போது பொதுமக்களிடம் கொடுத்து விடலாம். மண்ணில் விளைந்த பொருளும் வீணாகாது மனசும் நிறைஞ்சிரும் இதை ஒரு வேண்டுகோளாக என்னைப் போன்ற விவசாயிகளுக்கு முன்வைக்கிறேன்.

வாழைப்பழம் வழங்கிய மதியழகன்
வாழைப்பழம் வழங்கிய மதியழகன்

தற்போது ரூ.50,000 மதிப்பிலான வாழைப்பழங்கள் இலவசமாக நான் கொடுத்திருப்பதை அறிந்து பலரும் என்னைப் பாராட்டி வருகின்றனர். தமிழக அரசு ஒரு பழம் ரூ. 1 வீதம் வாழை விவசாயிகளிடம் கொள்முதல் செய்து அரசுப் பள்ளி மாணவர் களுக்கு சத்துணவில் சேர்த்துக் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையைத் தொடர்ந்து வைத்து வருகிறேன். அரசு இதைப் பரிசீலனை செய்து நடைமுறைப்படுத்தினால் வாழை விவசாயிகள் காக்கப்படுவார்கள்'' என்றார்.