Published:Updated:

`அடுத்த தலைமுறைக்கு நஞ்சில்லா உணவு கிடைக்கணும்னு சொல்லுவாரு!' - இயற்கையில் கலந்த விவசாயி மணி

ஆசிரியர், இயற்கை விவசாயி மணி
ஆசிரியர், இயற்கை விவசாயி மணி

``ஒவ்வொரு மாதத்தின் 10-ம் தேதியும், 25-ம் தேதியும் என் வீட்டிற்கு பசுமை விகடன் வந்துவிடும். பசுமை விகடனின்ன் வரவுக்காக நாள்காட்டியைப் பார்த்துக்கொண்டே இருப்பேன்" - இயற்கையில் விவசாயி மணி.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

புதுக்கோட்டை மாவட்டத்தில் 37 வருட ஆசிரியர் பணி மூலம் ஏராளமான அரசு அதிகாரிகளை உருவாக்கியதுடன், நூற்றுக்கணக்கான ரசாயன விவசாயிகளை இயற்கை வேளாண்மையின் பக்கம் மடைமாற்றிய ஆசிரியரும், முன்னோடி இயற்கை விவசாயியுமான ஜே.ஆர்.மணி (82)உடல் நலக்குறைவால் நேற்றைய முன்தினம் இயற்கையில் கலந்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே குரும்பூரைச் சேர்ந்தவர் ஜே.ஆர்.மணி. ஓய்வு பெற்ற தாவரவியல் ஆசிரியர். தாவரங்கள் மீதான ஆர்வம் பற்றிக்கொண்டிருந்ததால், ஆசிரியர் பணியோடு விவசாயத்தையும் நேசித்துப் பார்க்க ஆரம்பித்தார். பசுமை விகடன் மீதும், விவசாயத்தின் மீதும், அதை விட விவசாயிகள் மீது தீராத அன்பு கொண்டிருந்தார்.பசுமை விகடனின் தீவிர வாசகரான இவர், பசுமை விகடன் மூலம் இயற்கை விவசாய அறிவை மேம்படுத்திக் கொண்டிருக்கிறார்.

வேளாண் அங்காடி
வேளாண் அங்காடி
DIXITH
``தினமும் 10,000 ஆடு மாடுங்க வரை இங்க வரும்!" - 50 ஆண்டுகளாக கால்நடைகளின் தாகம் தணிக்கும் விவசாயி

புதுக்கோட்டைச் சுற்றுவட்டாரத்தில் முன்னோடி இயற்கை விவசாயியாக இருக்கும் இவர், அரசு உதவியோடு, நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்குப் பயிற்சி கொடுத்து அவர்களையும் இயற்கை விவசாயத்தின் பக்கம் திருப்பியிருக்கிறார். குறிப்பாக,இயற்கை இடுபொருட்களைத் தயாரிக்கும் இவர், தயாரிப்பு குறித்து விவசாயிகளுக்குப் பயிற்சி வகுப்புகள் எடுத்ததுடன், நேரடியாகத் தனது பன்னைக்கும் விவசாயிகளை அழைத்துச் சென்று செயல்வழியாகக் கற்பித்து வந்தார். மக்களுக்கு நஞ்சில்லா காய்கறிகள் கொடுக்க வேண்டும் என்று திட்டமிட்டவர், தனது தோட்டத்தின் அருகே வேளாண் அங்காடியை உருவாக்கி, தோட்டத்தில் இயற்கையாக விளைந்த காய்கறிகள், பாரம்பரிய அரிசி வகைகளைக் குறைந்த விலைக்குக் கொடுத்து வந்தார். கடந்த சில மாதங்களாகவே உடல் நலக் குறைவு ஏற்பட்டிருந்தவர், இயற்கையுடன் கலந்துவிட்டார்.

ஆசிரியர் மற்றும் இயற்கை விவசாயி மணியைக் கடந்த தினங்களுக்கு முன்பு நேரில் சந்தித்தோம், எழுந்து நடக்க முடியவில்லை. நாற்காலியில் அமர்ந்தவாறு நம்மிடம் பேசியவர், ``தாவரங்களை நேசிச்சா, அதோட வளர்ச்சியும், விளைச்சலும் அதிகமா இருக்கும். அததான் நான் செஞ்சேன். பாத்ரூம் வீட்டுக்குள்ள இருந்தாலும், வெளியில பம்ப் செட்க்கு கூட்டிக்கு வந்து பிள்ளைகளைக் குளிக்க வச்சு, நடவு செஞ்சிருந்த தென்னை மரங்களைக் காட்டி, `இதுவும் உங்களுக்கு அண்ணன், தம்பி, அக்கா, தங்கச்சி'ன்னு உறவு கொண்டாட வைப்பேன். அதோட விளைவு அவங்களும் தாவரங்களை நேசிக்கத் துவங்கிட்டாங்க. என்னோட பொன்னு கயல்விழி டாக்டரா இருக்காங்க. டாக்டர் பணியோட இயற்கை மாடித்தோட்டத்தையும் பராமரிச்சிக்கிட்டு இருக்காங்க. ரெண்டு மகன்களும் படிச்சிட்டு என்கூட முழு நேரமா இயற்கை விவசாயத்துல ஈடுபடுறாங்க.

ஆசிரியர், இயற்கை விவசாயி மணி
ஆசிரியர், இயற்கை விவசாயி மணி
DIXITH

தொடர்ந்து, விதைகளுக்காகவும், சாப்பாட்டிற்காகவும் பாரம்பரிய அரசிகளை மட்டும் பயிரிட்டு வருகிறேன். ஆர்கானிக் காய்கறிகளை விளைவித்து மக்களுக்கு நஞ்சில்லா காய்களை வேளாண் அங்காடி மூலமா நேரடியாக கொடுத்திக்கிட்டு இருக்கேன்" என்றார் .

மேலும் பசுமை விகடனைக் குறித்து அவர் எழுதிய கடிதத்தில், ``நம்மாழ்வாரை நான் நேரில் கண்டதில்லை, ஜூரோ பட்ஜெட் வேளாண் முறையை அர்ப்பணித்த சுபாஸ் பாலேக்கர், `பஞ்சகாவ்யா' டாக்டர் நடராஜனையும் கண்டதில்லை. அதைச் செறிவூட்டியாக மாற்றிய வேளாண் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் சோமசுந்தரம், வடிவேலு இவர்களை நேரில் சந்தித்ததில்லை. இவர்கள் மட்டுமின்றி பல்வேறு இயற்கை வேளாண் வித்தகர்களைப் பலரையும் என் பண்ணை வீட்டிற்கே அழைத்து வந்து அவர்களுடன் பேச வைத்தது பசுமை விகடன்தான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

என்னை இயற்கை விவசாயத்திற்கு மாற்றியதும் பசுமை விகடனே. ஒவ்வொரு மாதம் 10-ம் தேதியும், 25-ம் தேதியும் என் வீட்டிற்கு பசுமை விகடன் வந்துவிடும். அதற்காக நாள்காட்டியைப் பார்த்துக்கொண்டே இருப்பேன். இவர்கள் அனைவரையும் தொலைப்பேசி வாயிலாகத் தொடர்புகொண்டு பல்வேறு விஷயங்களைத் தெரிந்துகொள்ள பசுமை விகடன் உதவியது. என்னை மாற்றியது, நான் ஏராளமான விவசாயிகளை இயற்கை வேளாண்மைக்கு மாற்றியதற்கும் காரணமும் பசுமை விகடன்தான்" என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தார். ``இன்னும் இயற்கை விவசாயத்துல நிறைய செய்யணும்னு ஆசை.ஆனா, ரொம்ப வயசாகிப்போச்சு உடம்பு ஒத்தழைக்கலை. என்னோட காலத்துக்கு அப்புறமும் என்னோட பிள்ளைங்க இயற்கை விவசாயத்தைத் தொடருவாங்கன்னு நம்புறேன்" என்று உருக்கமாக பேசினார்.

பசுமை விகடனுக்கு மணி எழுதிய கடிதம்.
பசுமை விகடனுக்கு மணி எழுதிய கடிதம்.
`தக்காளி முதல் டிராகன் ஃப்ரூட் வரை!' - நடிகை சீதாவின் மாடித்தோட்ட அனுபவம் - நட்சத்திரத் தோட்டம் - 4

மணியால் இயற்கை விவசாயத்துக்கு மாறிய விவசாயி சாந்தகுமாரிடம் பேசினோம். ``10 வருஷத்துக்கு முன்னாடிதான் சாரோட அறிமுகம் எனக்குக் கிடைச்சது. இயற்கை வேளாண்மையைப் பத்தி தெரியாத எனக்கு இயற்கை விவசாய தொழில் நுட்பங்களையும், பஞ்சகாவ்யா, மீன் அமிலம்னு இடுபொருட்கள் தயாரிப்பு உள்ளிட்ட அனைத்தையும் கற்றுக்கொடுத்தவர். எனக்கு மட்டுமல்ல, இந்த பகுதிகள்ல உள்ள, ஏராளமான விவசாயிகளுக்கு இயற்கை வேளாண்மை அறிமுகப்படுத்தியவர், செய்யத் தூண்டியவர். பலரையும் ஆர்வமா அவரோட பன்னைக்கு அழைச்சு வந்து பாடம் எடுப்பாரு. உடம்பு முடியாத நேரத்திலயும், எந்த நேரம் கூப்பிட்டு வேளாண்மை சம்மந்தமா சந்தேகம் கேட்டாலும் உடனடியாக சொல்லிடுவாரு. மாவட்டத்திலேயே பாரம்பரிய நெல் ரகங்களை யாரும் சாகுபடி செய்ய முன்வராத நிலையில, அவரு சாகுபடி செஞ்சு பாரம்பரிய நெல் ரகமும் வெற்றிகரமான ரகம்னு மாத்தி, பலரையும் சாகுபடி செய்ய வச்சாரு. அடுத்த தலைமுறைக்கு நஞ்சில்லாத பொருட்கள் கிடைக்கணும்னு சொல்லிக்கிட்டே இருப்பாரு. தாவரங்கள் மீது அத்தனை பிரியம் வச்சிருந்தாரு. அவரால், வளர்ந்த எங்களைப் போன்ற இயற்கை விவசாயிகளுக்கு அவரின் இழப்பு பேரிழப்பு." என்றார் கனத்த இதயத்துடன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு