Published:Updated:

"கலெக்டரு ஐயா..காலுல விழுந்து கெஞ்சி கேக்குறோம் தண்ணி விடுங்க சாமி" கருகிய பயிருடன் பெண் கதறல்!

கருகிய பயிர்களுடன் கூட்டத்திற்கு வந்த விவசாய பெண்கள்

"பணத்தை லட்ச கணக்கில் கொட்டி விவசாயம் செஞ்சு தண்ணி இல்லாம பரிதவிக்கிறோம்...,கலெக்டரு ஐயா,‌ உங்க கால்ல விழுந்து கெஞ்சி கேட்கிறோம் விவசாயத்துக்கு தண்ணி கொடுங்க சாமி"என வாடிய பயிர்களுடன் பெண் விவசாயி கண்ணீர்விட்டு கதறி அழுதது காண்போரையும் கலங்கசெய்தது.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமான விவசாயிகள் தங்கள் குறைகளை தெரிவிக்க வந்திருந்தனர். உதவி ஆட்சியர் நாராயண சர்மா தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

வைகை அணை
வைகை அணை

கூட்டத்திற்கு பரமக்குடி தாலுகா பார்த்திபனூர் அருகே உள்ள புலவர் வேலாங்குடி பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் தண்ணீர் இல்லாமல் கருகிய பயிருடன் குறைதீர் முகாமிற்கு வந்திருந்தனர்.

வைகை அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கடலுக்குள் சென்று வீணாகுவதாகவும், அந்த தண்ணீரை வைகை ஆறுக்கு அருகில் உள்ள தங்களது பகுதி கண்மாய்களுக்கு திறந்து விடக்கோரி கண்ணீர் மல்க கோரிக்கை மனு அளித்தனர்.

அப்போது அவர்களுடன் வந்த ஆறுமுகம் என்ற விவசாய பெண்மணி, "பல லட்ச ரூபாய் கொட்டி விவசாயம் செஞ்சிருக்கோம், மழையும் எங்களை கைவிட்டுடுச்சு, விதைச்ச பயிர் எல்லாம் கருகி வாடி போச்சு. எங்க ஊரை தாண்டி தான் வைகை தண்ணி போகுது, எங்க ஊர் புலவர் வேலாங்குடி தொடங்கி அபிராமம் வரை 17 கண்மாய் தூர் வராமல் வறண்டு போய் கிடக்கு. ஆனா வெள்ள அபாயம்னு வைகை தண்ணீரை வீணா கடல்ல போய் விடுறாங்க. கலெக்டரு ஐயா..சாமி உங்க காலுல விழுந்து கெஞ்சி கேட்டுக்குறோம்..எங்க பயிர காப்பாத்துங்க சாமி... எங்க பிள்ளைகளையும் இது மாதிரி கண்ணீர் வடிக்க விட்றாதீங்க எஜமா..என கருகிய பயிர்களுடன் அப்பெண் கண்ணீர் விட்டு கதறி அழுதது காண்போர் கண்களிலும் நீரை வரவழைத்தது.

கருகிய பயிர்களுடன் கதறி அழுத பெண் விவசாய ஆறுமுகம்
கருகிய பயிர்களுடன் கதறி அழுத பெண் விவசாய ஆறுமுகம்

மனுவை பெற்றுக் கொண்ட உதவி ஆட்சியர் இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் பேசி ஒரு சில தினங்களில் கண்மாய்கள் போர்க்கால அடிப்படையில் தூர்வாரி வைகை தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.