தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி சிந்தலா வெங்கட் ரெட்டி, ஓர் அனுபவ விவசாய விஞ்ஞானி.

இயற்கை விவசாயத்தில் பல புதுமையான நுட்பங்களை அறிமுகப்படுத்தி, விளைச்சலை அதிகப்படுத்தியதற்காக இவருக்குப் பத்மஸ்ரீ விருது வழங்கியிருக்கிறது மத்திய அரசு.

1982-ம் வருஷம் அவர் தோட்டம் இருக்கும் பகுதியில் கடுமையான வறட்சி. தண்ணீர் இல்லாமல் விவசாயம் தடுமாற ஆரம்பித்தது. ரெட்டியும் ஒரு கிணறு தோண்டினார். சேறு கலந்த தண்ணீர் வயலில் பாய்ந்தது. தண்ணீரோடு சேர்ந்து வரும் சேற்று மண், கொடிகளை வளர்க்கிறது என்பதை உணர்ந்தார் ரெட்டி. ‘மண்ணை உரமாகவும், பூச்சிகளை விரட்டவும் ஏன் பயன்படுத்தக் கூடாது’ என யோசித்தார். உடனே ஆராய்ச்சியில் இறங்கி, பலகட்ட சோதனைக்குப் பிறகு, ஒரு முறையைக் கண்டுபிடித்தார்.

‘நிலத்தில் இருக்கும் மேல்மண் 15 கிலோ எடுத்துக் காய வைக்க வேண்டும். 4 அடி ஆழத்திலிருந்து 15 கிலோ மண்ணை எடுத்து அதைத் தனியாகக் காய வைக்க வேண்டும். நன்றாகக் காய்ந்ததும், இரண்டு மண்ணையும் எடுத்து 200 லிட்டர் தண்ணீரில் கலக்க வேண்டும். பிறகு 30 நிமிடங்கள் எதுவும் செய்யாமல் விட்டு விட வேண்டும். இப்போது, அடிப்பகுதியில் மண், சேறு மாதிரி மண்டியிருக்கும். பிறகு தண்ணீரை வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். இந்தத் தண்ணீரைச் சேறு கீழே படிந்த 4 மணி நேரத்துக்குள் எடுத்துக்கொள்ள வேண்டும். வடிகட்டிய நீரை, ஸ்பிரேயர் மூலம் பயிரில் தெளிக்கலாம். வாரம் ஒருமுறை இப்படிச் செய்தால் பூச்சித் தொல்லை இருக்காது. அடியில் படிந்த மண்ணைப் பயிரின் வேர் அருகே உரமாகவும் கொடுக்கலாம்’ இதுதான் ரெட்டியின் கண்டுபிடிப்பு.

மகாராஷ்டிரா, பீகார், குஜராத், மத்தியப் பிரதேசம் மாநிலங்களில் ரெட்டி சொன்ன முறையைப் பல விவசாயிகள் பின்பற்றுகிறார்கள். இந்தத் தொழில் நுட்பத்துக்காக, காப்புரிமை வாங்கியிருக்கிறார் ரெட்டி. அந்தப் பகுதிகளில் தற்போது வெட்டுக்கிளிகள் பிரச்னையாக இருக்கின்றன. அவற்றுக்கு பல விவசாயிகள் ரெட்டியின் சேற்று நீர் தெளிக்கும் முறையைச் செயல்படுத்தி வருகிறார்கள்.

இது தொடர்பாகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த பூச்சியியல் வல்லுநர்கள் சிலரிடம் பேசினோம். “இந்த முறை இதுவரை அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. திடீரென வெட்டுக்கிளிகள் கூட்டமாகப் பயிரில் வந்து அமர்ந்தபிறகு, இதைத் தெளிப்பதால் பெரிய பலன் கிடைக்காது. அவை அமர்வதற்கு முன்பே, செடியில் ஒவ்வாமை ஏற்படுத்தும் நிலை இருக்க வேண்டும். மற்றபடி, சேற்றுத் தண்ணீரால் பூச்சிகள் விரட்டப்படுகின்றன என்பதை உறுதிப்படுத்த முடியாது’’ என்றார்கள்.