Published:Updated:

தெலங்கானா: அட்சய திருதியை நாளில் 20 லட்சம் பருத்தி விதைகள் விற்பனை; தங்கத்தோடு போட்டி போட்ட பருத்தி!

தெலங்கானாவில் உள்ள அதிலாபாத் மாவட்ட விவசாயிகள் அனைவரும் சுமார் 3.5 லட்சம் ஏக்கரில் விதைப்பதற்காக 20 லட்சம் பருத்தி விதை பாக்கெட்டுகளை வாங்கி இருக்கலாம் என வேளாண் துறை அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.

அட்சய திருதியில் வாங்கும் செல்வமானது பெருகும் என்ற நம்பிக்கை மக்களிடையே உள்ளது. அதனால் அட்சய திருதியில் பலரும் தங்க நகைகளை வாங்குவர். ஒருபுறம் மக்கள் தங்க நகைகளை குவித்து கொண்டிருக்கும் நிலையில், மற்றொருபுறம் வேறு மாதிரியாக யோசித்து தங்களுக்கு வருமானத்தை ஈட்டும் வேறொரு பொருளை விவசாயிகள் வாங்கி வருகின்றனர்.

தெலங்கானாவில் உள்ள அதிலாபாத் மாவட்ட விவசாயிகள் அனைவரும் சுமார் 3.5 லட்சம் ஏக்கரில் விதைப்பதற்காக 20 லட்சம் பருத்தி விதை பாக்கெட்டுகளை வாங்கி இருக்கலாம் என வேளாண் துறை அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர். அதாவது பைன்சா, குபீர், பாசரா, முதோல் உள்ளிட்ட மண்டலங்களில் வாழும் விவசாயிகள் பெரும்பாலும் பருத்தி விதைகளை கொள்முதல் செய்து வருகின்றனர்.

பருத்தி
பருத்தி

இந்நிலையில் அட்சய திருதியை முன்னிட்டு பலரும் நகைகளை வாங்கி கொண்டிருக்கும் நிலையில், இங்குள்ள விவசாயிகள் வேளாண் தொழிலுக்கு உதவும் அனைத்திற்கும் பூஜை செய்து பின்னர் பருத்தியின் விதைகளை வாங்கி, கொஞ்ச விதைகளை விதைத்தும் உள்ளனர்.

இதை குறித்து அங்கு வாழும் விவசாயிகளில் ஒருவரான ராமு கூறுகையில், "ஒவ்வொரு வருடமும் மற்றவர்கள் தங்கத்தை வாங்கும் போது நாங்கள் பருத்தி விதைகளை வாங்குவோம். தங்கத்திற்கு நிகராக நாங்கள் பருத்தியை பார்க்கிறோம். இந்நாளில் பருத்தி விதையை வாங்கினால், நல்ல லாபம் கிடைக்கும் என நாங்கள் நம்புகிறோம்" என தெரிவித்துள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism