Published:Updated:

கலா மாஸ்டர் வழங்கும் வீட்டுத்தோட்டம் பராமரிப்பு பயிற்சி... கலந்துக்கலாம் வாங்க!

கலா மாஸ்டர் வழங்கும் வீட்டுத்தோட்ட பயிற்சி
கலா மாஸ்டர் வழங்கும் வீட்டுத்தோட்ட பயிற்சி

என்னென்ன செடி வகைகளை எளிதாக வளர்க்க முடியும் என்பது குறித்தும், மாடித்தோட்டம் குறித்த உங்களுடைய சந்தேகங்கள் அனைத்துக்கும் விளக்கம் அளிக்கிறார் கலா மாஸ்டர்.

நடன இயக்குநர் கலா, வீட்டின் மாடியிலிருக்கும் போதுமான இடத்தில் என்னென்ன செடி வகைகளை வளர்க்கலாம், காய்கறிகள் முதல் பூச்செடிகள் வரை எப்படிப் பராமரிக்கலாம் என்பது குறித்து விளக்குகிறார்.

வாடகை வீடாக இருந்தாலும் சரி, சொந்த வீடாக இருந்தாலும் வீட்டின் மொட்டை மாடியில் செடிகளை வளர்ப்பதில் தற்போது பலரும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில், பொதுமக்களைத் தாண்டியும் பல பிரபலங்கள் தங்களுடைய மொட்டை மாடியில் நிறைய செடி வகைகளை வளர்த்து வீட்டுச் சமையலுக்குப் பயன்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் நடன இயக்குநர் கலா மாஸ்டர் அவர்களும் அவருடைய மொட்டை மாடியில் கத்திரிக்காய், வெண்டைக்காய் போன்ற காய்கறி செடிகள் மட்டுமல்லாது ரோஜா, செம்பருத்தி போன்ற பூச்செடி வகைகளையும் அவர் தன்னுடைய மொட்டை மாடியில் வளர்த்து வருகிறார்.

அவள் விகடன் மற்றும் பசுமை விகடன் இணைந்து வழங்கும் வீட்டு தோட்டம் பராமரிப்பு பயிற்சி! வீட்டில் காய்கறிகள் முதல்...

Posted by Pasumai Vikatan on Monday, September 14, 2020

வெயில் காலத்திலும் அதை எப்படிப் பராமரிப்பது என்பது முதல் என்னென்ன உரங்களை இட வேண்டும் என்பது வரை அனைத்து விளக்கங்களையும் தரத் தயாராக இருக்கிறார். உங்களுடைய சந்தேகங்களை அவரிடம் கேட்டுப் பதிலைப் பெறலாம். மேலும், என்னென்ன செடி வகைகளை எளிதாக வளர்க்க முடியும் என்பது குறித்தும், மாடித்தோட்டம் குறித்த உங்களுடைய சந்தேகங்கள் அனைத்துக்கும் விளக்கம் அளிக்கிறார். அவள் விகடன் மற்றும் பசுமை விகடன் இணைந்து இந்தப் பயிற்சியை நடத்துகிறது.

தேதி: செப்டம்பர் 19, சனிக்கிழமை

நேரம் : மாலை 3 முதல் 4.30 மணி வரை

முன்பதிவுக்கு, கீழே உள்ள லிங்கில் பதிவு செய்யவும்

https://bit.ly/2FfFZnQ அல்லது

கீழ்க்காணும் QRCode-ஐ ஸ்கேன் செய்யவும்.

QRCode
QRCode

அனைவரும் பங்கேற்கலாம். அனுமதி இலவசம்!

அடுத்த கட்டுரைக்கு