Published:Updated:

தொடர் கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்கள்; சோகத்தில் தனது வயலில் உயிரிழந்த விவசாயி!

``என் கணவர் 5 ஏக்கர் நிலத்தை ஒத்திக்குப் பிடித்து, நெல் சாகுபடி செய்து வந்தார். தாளடி பட்ட நெல் சாகுபடிக்காக, நாற்று நடவு செய்திருந்தோம். மழைநீரில் நெற்பயிர்கள் முழுவதுமாக மூழ்கிவிட்டது. "அதனால் மன உளைச்சல் அடைந்த என் கணவர் பாலமுருகன், நேற்று காலை எங்கள் வீட்டில் கதறி அழுதார்."

தொடர் கனமழை டெல்டா விவசாயிகளை மிகுந்த வேதனையில் ஆழ்த்தி வருகிறது. தொடர்ச்சியாகப் பல நாள்களாக வயலில் மழைநீர் தேங்கி நிற்பதால், சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் அழியக்கூடிய அவலமான சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில்தான், தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே, விவசாயி ஒருவர், தனது நெற்பயிர்கள் மழைநீரில் அழிந்து கொண்டிருப்பதைக் கண்டு மிகுந்த மன உளைச்சல் அடைந்த நிலையில், தனது வயலிலேயே உயிரிழந்து கிடந்தது இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விவசாயி பாலமுருகன்
விவசாயி பாலமுருகன்
திருவாரூர்: தொடர் கனமழை, புயல் பாதிப்புகளை எதிர்கொள்ள 24 மணி நேர காவல் மீட்புக்குழுக்கள்!

தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே உள்ள மேலத்திருப்பந்துருத்தியைச் சேர்ந்தவர் விவசாயி பாலமுருகன். இவர் 5 ஏக்கர் குத்தகை நிலத்தில் தாளடி நெல் சாகுபடி செய்திருந்த நிலையில், கடந்த பத்து நாள்களாகப் பெய்து வரும் தொடர் கனமழை, இவரை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கியிருக்கிறது. வயலில் தண்ணீர் தேங்கியதால் பயிர் அழுகும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில்தான் நேற்று இரவு வயலுக்குச் சென்றவர், வீடு திரும்பவில்லை.

இன்று காலையில் பார்த்தபோது, தனது வயலியேயே உயிரிழந்த நிலையில் கிடந்திருக்கிறார். இதுகுறித்து காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்த, இவரின் மனைவி மரகதம், ``என் கணவர் கண்டியூர் கிராமத்தில் 5 ஏக்கர் நிலத்தை ஒத்திக்குப் பிடித்து, நெல் சாகுபடி செய்து வந்தார். தாளடி பட்ட நெல் சாகுபடிக்காக, நாற்று நடவு செய்திருந்தோம். மழைநீரில் நெற்பயிர்கள் முழுவதுமாக மூழ்கிவிட்டது.

இதனால் மிகுந்த மன உளைச்சல் அடைந்த என் கணவர் பாலமுருகன், நேற்று காலை எங்கள் வீட்டில் கதறி அழுதார். `கவலைப்பட வேண்டாம்... ஆண்டவன் நம்மை கைவிடமாட்டான்'னு ஆறுதல் சொன்னேன். நேற்று இரவு வயலுக்குப் போன என் கணவர் வீடு திரும்பவில்லை. இன்று காலை என் கணவர் வயக்காட்டில் இறந்து கிடந்தார்’’ எனத் தெரிவித்துள்ளார்.

புயலால் சேதமடைந்த பயிர்கள்  (File Pic)
புயலால் சேதமடைந்த பயிர்கள் (File Pic)
விழுப்புரம்: `கனமழை; காட்டாற்று வெள்ளத்தால் துண்டிக்கப்பட்ட தரைப்பாலம்'- தவிப்பில் 4 கிராம மக்கள்!

இதுகுறித்து பேசும் இப்பகுதி விவசாயிகள், ``பாலமுருகன் ரொம்ப ஏழ்மையான விவசாயி. வயல்ல தண்ணீர் தேங்கி பயிர்கள் அழுகிப் போறதைப் பார்த்து புலம்பிக்கிட்டே இருந்தார். இதனால் ஏற்பட்ட கவலையில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கலாம்னு நினைக்குறோம். பிரேத பரிசோதனை முடிவு வந்தால், மரணத்துக்கான காரணம் உறுதிப்படுத்தப்படும், ஆனால், அரசாங்கத்துக்கு கெட்டப்பெயர் வந்துடுமோனு, வேற எதுவும் காரணத்தைச் சொல்லி மறைச்சிடக் கூடாது’’ என்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு