Published:Updated:

‘‘தஞ்சையில் இல்லையே வேளாண் அறிவியல் நிலையம்!’’

செங்கிப்பட்டியில் மூடப்பட்ட வேளாண் அறிவியல் நிலையம்
பிரீமியம் ஸ்டோரி
செங்கிப்பட்டியில் மூடப்பட்ட வேளாண் அறிவியல் நிலையம்

வேதனையில் வெம்பும் விவசாயிகள்

‘‘தஞ்சையில் இல்லையே வேளாண் அறிவியல் நிலையம்!’’

வேதனையில் வெம்பும் விவசாயிகள்

Published:Updated:
செங்கிப்பட்டியில் மூடப்பட்ட வேளாண் அறிவியல் நிலையம்
பிரீமியம் ஸ்டோரி
செங்கிப்பட்டியில் மூடப்பட்ட வேளாண் அறிவியல் நிலையம்

வேளாண் அறிவியல் நிலையம் என்பது விவசாயிகளின் கலங்கரைவிளக்கம். இந்தியில் ‘கிருஷி விக்யான் கேந்திரா’ எனச் சொல்வார்கள். சுருக்கமாக கே.வி.கே. விவசாயத்தின் வளர்ச்சிக்காக நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் தன் கட்டுப்பாட்டின்கீழ் கே.வி.கே-வைச் செயல்படுத்திவருகிறது இந்திய வேளாண் ஆராய்ச்சிக்கழகம். இதனால், ஒவ்வொரு மாவட்டத்திலும் லட்சக்கணக்கான விவசாயிகள் பயனடைகின்றனர். ‘‘விவசாய வளர்ச்சிக்கான ஊன்றுகோலாகத் திகழும் கே.வி.கே தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான தஞ்சாவூரில் இல்லை’’ என்று கொதிக்கின்றனர் தஞ்சை மாவட்ட விவசாயிகள்.

செங்கிப்பட்டியில் மூடப்பட்ட வேளாண் அறிவியல் நிலையம்
செங்கிப்பட்டியில் மூடப்பட்ட வேளாண் அறிவியல் நிலையம்

இதுதொடர்பாகப் பேசிய தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த விவசாயி வீரசேனன், ‘‘விவசாயத்தை முன்னேற்றுவதற்காக ஆரம்பிக்கப்பட்ட கே.வி.கே பல மாவட்டங்களில் இருக்கிறது. ஆனால், விவசாயத்துக்குப் பேர்போன தஞ்சாவூரில் இல்லை. இத்தனைக்கும் வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் சொந்த மாவட்டம் இது. செங்கிப்பட்டியில் செயல்பட்டுவந்த தனியார் கே.வி.கே சரியாகச் செயல்படாததால் நான்கு வருடங்களுக்கு முன்பு மூடிவிட்டனர். தஞ்சாவூரில் புதிய கே.வி.கே தொடங்க வேண்டும் என்று நாங்கள் பல வருடங்களாகக் கோரிக்கை வைத்துக்கொண்டிருக் கிறோம். அதை இந்த அரசாங்கம் காதுகொடுத்துக் கேட்டதாகத் தெரியவில்லை. தமிழகத்தின் நெற்களஞ்சியத்தை முன்னேற்றும் நோக்கம் வேளாண் துறைக்கு இல்லையோ என்றுதான் தோன்றுகிறது’’ என்றார் விரக்தியுடன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் துணைச் செயலாளர் சுகுமாறனிடம் பேசினோம். ‘‘ஏற்கெனவே செங்கிப்பட்டியில் செயல்பட்டுவந்த தனியார் கே.வி.கே-வால் விவசாயிகளுக்கு எந்தப் பயனுமில்லை. விவசாயிகளுடைய நலனில் அவர்கள் துளியும் அக்கறைகாட்டவில்லை. வெற்றிலைச் சாகுபடியில் பாதிப்பு ஏற்பட்டபோதும், கோ-43 ரக நெல் சாகுபடியில் நெற்பழ நோய் ஏற்பட்டபோதும் அவர்கள் விவசாயிகளுக்கு எந்த உதவியும் செய்யவில்லை. இதுபோல் நிறைய கசப்பான அனுபவங்கள். இந்திய வேளாண் ஆராய்ச்சிக்கழகம் வழங்கிய நிதியை நேர்மையாகப் பயன்படுத்தாததால் அந்த கே.வி.கே-வை மூடிவிட்டனர். திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் இருப்பதுபோல் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்மூலம் தஞ்சாவூரிலும் கே.வி.கே ஆரம்பிக்கப்பட வேண்டும். தனியாருக்குக் கொடுக்கக் கூடாது. இந்த விஷயத்துக்கு அரசு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். விவசாயத்தின் வளர்ச்சிதான் நாட்டின் வளர்ச்சி” என்றார்.

‘‘தஞ்சையில் இல்லையே வேளாண் அறிவியல் நிலையம்!’’

செங்கிப்பட்டியில் இயங்கிவந்த தனியார் கே.வி.கே-வின் தற்போதைய நிலையை அறிந்துகொள்ள அங்கு சென்றோம். பிரதான வாயில் மூடப்பட்டு இருந்தது. அந்தப் பண்ணை வளாகத்தின் வேறொரு கட்டடத்தில் புதிதாக வேளாண் கல்லூரி செயல்பட்டுவருகிறது. பண்ணைப் பொறுப்பாளர் சாரதா, ‘‘எங்கள் கே.வி.கே மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை. இங்கே வேலைசெய்த இரண்டு ஊழியர்கள் தவறான நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். கே.வி.கே-வின் பெயருக்குக் களங்கம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக அவர்கள்மீது சில நடவடிக்கைகள் எடுத்தோம். அந்தக் கோபத்தில் அவர்கள் இந்திய வேளாண் ஆராய்ச்சிக்கழகத்துக்கு கே.வி.கே மீது அவதூறான புகார்களை அனுப்பிவிட்டார்கள். அதை நம்பி, எங்கள் கே.வி.கே-வின் செயல்பாடுகளை முடக்கிவிட்டார்கள். எங்கள்மீது எந்தத் தவறும் இல்லை’’ என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தனியார் கே.வி.கே-வை இயக்கிவந்த தனியார் அறக்கட்டளையின் தலைவர் ஆர்.வி.குப்புசாமியிடம் பேசியபோது, ‘‘இந்திய வேளாண் ஆராய்ச்சிக்கழகம் கொடுத்த நிதியில் நாங்கள் எந்த முறைகேடும் செய்யவில்லை. அவர்கள் கொடுத்த நிதிக்குமேல் எங்கள் பணத்தைப் போட்டு செலவு செய்தோம். ஆனால், அவதூறான புகாரைச் சொல்லி எங்கள் கே.வி.கே-வை மூடிவிட்டனர். மீண்டும் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். இந்திய வேளாண் ஆராய்ச்சிக்கழகத் தரப்பில் வழக்கைத் திரும்பப் பெறச் சொன்னார்கள். அவர்களின் வேண்டுகோளை ஏற்று வழக்கை வாபஸ் வாங்கி விட்டோம். எங்களது கே.வி.கே-வை மீண்டும் திறப்பதற்கான முயற்சிகளைத் தீவிரப்படுத்து வோம்” என்றார்.

வீரசேனன், சுகுமாறன், துரைக்கண்ணு
வீரசேனன், சுகுமாறன், துரைக்கண்ணு

தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணு விடம் பேசினோம். விவசாயிகளின் கோரிக்கையை அக்கறையுடன் கேட்டுக்கொண்டவர், ‘‘உடனடியாக நல்ல சேதி ஒன்று சொல்கிறேன்’’ என்று சொல்லி அழைப்பைத் துண்டித்தார். அடுத்த சில நிமிடங்களில் நம்மைத் தொடர்புகொண்ட அமைச்சர், ‘‘தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத் துணைவேந்தர் உங்களிடம் பேசுவார்’’ என்றார்.

சற்று நேரத்தில் நம்மிடம் பேசிய தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத் துணைவேந்தர் குமார், ‘‘எங்கள் பல்கலைக்கழகத்தின் சார்பில், தஞ்சாவூரில் கே.வி.கே கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை உடனடியாகத் தீவிரப்படுத்து கிறோம். இதற்கான ஏற்பாடுகளில் நானே நேரடியாக இறங்குகிறேன்’’ என்று உறுதியளித்தார்.

தஞ்சை விவசாயிகளுக்கு விரைவில் நல்லது நடக்க வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism